10-22-2004, 01:20 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/roserose.jpg' border='0' alt='user posted image'>
தென்றல் தரும் தாலாட்டு
தெம்மாங்கு தரும் சங்கீதம்
தோழமை கொண்டு தொடர்ந்திருக்க
தோழமையின் இனிமை சுவைத்திட
சோடிக் குயிலிரண்டு சோலையில்....
சோலை வழி சாலையில்
சேலை ஒன்று காட்டுது ஜாடை
சலனமில்லா சின்ன மனம்
சந்திக்கத் துடிக்குது
காதல் தரிசனம்...!
மனதோடு ஏழ்மையாய்
ஏழ்மைக்கு ஏற்றதாய்
சோலைக்குள் குடிசை கட்டி
சோடி கட்டுது ஒரு மனசு....
வேஷம் போட்டே வாழ்ந்திட்டது
கோஷம் போட்டு கொடுமை பண்ணுது...
மாளிகை கட்டிக் காவல் வைத்துக்
காத்திருக்குது மற்றது...!
கனவுகள் கலையாது
கானகத்தில் கருங்குயில்கள்
கானம் இசைக்குது....
சோடிகள் இரண்டும்
சேர்ந்தும் இசைக்குது
பிரிந்தும் இசைக்குது ராகம்
சங்கீத சபை இருந்து ரசிக்குது
சோடி மனம்...!
காலத்தோடு போட்டியாய்
கனவுகள் தொடருது
நினைவுகள் பெருகுது...!
உதயத்து ஆதவன்
இருளரக்கன் உதைந்து தள்ள
உடையுது நினைவு
உடனிருந்த கணணி இசைக்குது
சோலை கொள்
சேலை பறக்கும் இனிய கீதம்....!
நிசி கடந்தும்....
மலரும் நினைவில்
நடந்தது ஒரு காதல்
தென்றல் தாலாட்ட
தெம்மாங்கு சீராட்ட
நினைவோடு நிம்மதியாய்....!
நன்றி... http://kuruvikal.yarl.net/
தென்றல் தரும் தாலாட்டு
தெம்மாங்கு தரும் சங்கீதம்
தோழமை கொண்டு தொடர்ந்திருக்க
தோழமையின் இனிமை சுவைத்திட
சோடிக் குயிலிரண்டு சோலையில்....
சோலை வழி சாலையில்
சேலை ஒன்று காட்டுது ஜாடை
சலனமில்லா சின்ன மனம்
சந்திக்கத் துடிக்குது
காதல் தரிசனம்...!
மனதோடு ஏழ்மையாய்
ஏழ்மைக்கு ஏற்றதாய்
சோலைக்குள் குடிசை கட்டி
சோடி கட்டுது ஒரு மனசு....
வேஷம் போட்டே வாழ்ந்திட்டது
கோஷம் போட்டு கொடுமை பண்ணுது...
மாளிகை கட்டிக் காவல் வைத்துக்
காத்திருக்குது மற்றது...!
கனவுகள் கலையாது
கானகத்தில் கருங்குயில்கள்
கானம் இசைக்குது....
சோடிகள் இரண்டும்
சேர்ந்தும் இசைக்குது
பிரிந்தும் இசைக்குது ராகம்
சங்கீத சபை இருந்து ரசிக்குது
சோடி மனம்...!
காலத்தோடு போட்டியாய்
கனவுகள் தொடருது
நினைவுகள் பெருகுது...!
உதயத்து ஆதவன்
இருளரக்கன் உதைந்து தள்ள
உடையுது நினைவு
உடனிருந்த கணணி இசைக்குது
சோலை கொள்
சேலை பறக்கும் இனிய கீதம்....!
நிசி கடந்தும்....
மலரும் நினைவில்
நடந்தது ஒரு காதல்
தென்றல் தாலாட்ட
தெம்மாங்கு சீராட்ட
நினைவோடு நிம்மதியாய்....!
நன்றி... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

