10-22-2004, 11:38 AM
hari Wrote:இது விடுதலைக்கு விலை கொடுக்கும் காலம்
பதுங்குகுழி உனது பாதுகாப்பிற்கே தவிர
பயந்து கிடக்கும் படுக்கையறை அல்ல
விடுதலையை உயிர் மூச்சாக உள்வாங்கிக் கொண்டு
சாவைச் சாதாரண நிகழ்வாக நினைத்துக்கொள்.
காற்றுக்கு வேலியிட்டு கதவு சாத்த நினைப்பவர்களே!
ஆற்று வெள்ளத்தை அள்ளிக் குடிக்க நினைப்பவர்களே!
சிஙகள தேசமே! எங்களைத் தெரிந்துகொள்.
மாணிக்க கங்கையை
மடியிற் கட்டும் ஆசை எமக்கில்லை.
கொழும்பில் கொடியேற்றும் குறிக்கோளும் கிடையாது
நம்புங்கள்
நாங்கள் எங்கள் நாட்டிலும்
நீங்கள் உங்கள் நாட்டிலும்
நல்ல நண்பர்களாக வாழ்வோம்.
மதித்தால் மதிப்போம்
மிதித்தால் மிதிப்போம்!
<b>ஹரி அண்ணா நன்றிகள் இங்கு தந்தமைக்கு. சிரமம் பாராது தொடர்ந்தும் கவிஞர் புதுவையின் கவிதைகள் தருவீர்கள் என நம்புகிறேன்.</b>
----------

