10-20-2004, 12:04 PM
பிபிசிக்கு தமிழக பேராசிரியர் ஒருவர் சொன்ன கருத்து வீரப்பன் ரொபின் கூட் போன்ற ஒரு சமூகக் கொள்ளைக்காரன்... அவன் அவனைப் பிடிக்க.. அழிக்க... தேடிச் சென்றவர்களுக்கும் அவர்களை அனுப்பிய அரசாங்க அதிகாரிகளுக்கும் அவன் நேசித்த மக்களுக்கு தீங்கிழைத்தோருக்கும் கூட இருந்து காட்டிக்கொடுக்க நினைத்தோருக்குமே எதிரியாக இருந்துள்ளான்... மற்றும்படி வீரப்பனின் செயற்பாடுகள் ஒன்றும் பெரிய சமூகப்பாதிப்பை ஏற்படுத்திய ஒன்றல்ல... அவனுடைய செயற்பாடுகள் காட்டையும் அதன் அண்டிய பிரதேசத்தையும் சார்ந்தே இருந்துள்ளது... வீரப்பனின் அநியாயத்தைப் பட்டியல் இடுவோர் அவனைத் தேடச் சென்ற பொலீசும் அதிரடிப்படையும் அப்பாவி ஊர்மக்களுக்குச் செய்த அநியாயங்களை ஏன் பட்டியல்படுத்தவில்லை... அவர்களை ஏன் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை....????! அப்போ அவர்கள் மனிதர்கள் இல்லையோ...!
அது மாத்திரமன்றி வீரப்பனை பிடிப்பதென்பது ஒரு சின்ன விடயம் அதை கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு இழுத்தடித்து அவன் மூலம் பயன்பெற்றவர்கள் பணம் உழைத்தவர்கள் வெளியில் வெள்ளை வேட்டிகளாகவும் சுதந்திரமாகவும் உள்ள போது எய்தவன் இருக்க அம்பை நொந்த கதையாய் வீரப்பனின் கதை இருக்கிறது என்பதுதான் யதார்த்தம்...!
உயர்சாதி சமூகத்தையே அழித்த பூலான்தேவிக்குப் பொது மன்னிப்பு அளித்து நாடாளுமன்றம் செல்ல அனுமதித்த பாரத தேசம்... தமிழ் தேசியம் பேசியதற்காய் வீரப்பனை சுட்டுக் கொன்றதென்றால்...பிறகேன் தமிழ்நாடு என்று பெயர் சூட்டிக் கொண்டு ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள்... இந்தி ஆளும் வர்க்கத்திடம் அரசியல் கூட்டமைத்து கெஞ்சிக் கூத்தாடி வெறும் காகிதத்தில் தமிழ் செம்மொழி என்று எழுதி வாங்கிப் போட்டு வாழாதிருக்கிறார்கள்....???! :twisted:
:?:
எமது நோக்கம் வீரப்பனை சுத்தவாளியாக்குவதல்ல... நடுநிலை உள்ள மனிதர்களாகா அவன் பக்கத்திலும் உள்ள நியாயங்களை எடை போட்டுப் பார்க்கத் தவறக் கூடாது என்பதைச் சொல்வதே...! :twisted:
அது மாத்திரமன்றி வீரப்பனை பிடிப்பதென்பது ஒரு சின்ன விடயம் அதை கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு இழுத்தடித்து அவன் மூலம் பயன்பெற்றவர்கள் பணம் உழைத்தவர்கள் வெளியில் வெள்ளை வேட்டிகளாகவும் சுதந்திரமாகவும் உள்ள போது எய்தவன் இருக்க அம்பை நொந்த கதையாய் வீரப்பனின் கதை இருக்கிறது என்பதுதான் யதார்த்தம்...!
உயர்சாதி சமூகத்தையே அழித்த பூலான்தேவிக்குப் பொது மன்னிப்பு அளித்து நாடாளுமன்றம் செல்ல அனுமதித்த பாரத தேசம்... தமிழ் தேசியம் பேசியதற்காய் வீரப்பனை சுட்டுக் கொன்றதென்றால்...பிறகேன் தமிழ்நாடு என்று பெயர் சூட்டிக் கொண்டு ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள்... இந்தி ஆளும் வர்க்கத்திடம் அரசியல் கூட்டமைத்து கெஞ்சிக் கூத்தாடி வெறும் காகிதத்தில் தமிழ் செம்மொழி என்று எழுதி வாங்கிப் போட்டு வாழாதிருக்கிறார்கள்....???! :twisted:
:?:எமது நோக்கம் வீரப்பனை சுத்தவாளியாக்குவதல்ல... நடுநிலை உள்ள மனிதர்களாகா அவன் பக்கத்திலும் உள்ள நியாயங்களை எடை போட்டுப் பார்க்கத் தவறக் கூடாது என்பதைச் சொல்வதே...! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>