![]() |
|
வீரப்பனிற்கு எமது அஞ்சலிகள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17) +--- Thread: வீரப்பனிற்கு எமது அஞ்சலிகள்...! (/showthread.php?tid=6583) |
வீரப்பனிற்கு எமது அஞ் - tamilini - 10-19-2004 வீரப்பனிற்கு எமது அஞ்சலிகள்...! மறைந்த முன்னை நாள் சத்திய மங்கலம் காட்டுபகுதியின் பாதுகாலரும்.. கடத்தல் மன்னனுமான வீரப்னிற்கு எனது அஞ்சலிகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- yarl - 10-19-2004 அஞ்சலி?? - kuruvikal - 10-19-2004 என்னதான் குற்றம் செய்திருந்தாலும் தமிழ்நாட்டில் பதவியில் உள்ளதுகளிடம் இல்லாத... தமிழக உயர்குடி வர்க்கத்திடம் இல்லாத தமிழ் உணர்வு இருந்தது அவனிடம்... தேவை கருதிச் செய்திருந்தாலும் துணிந்து தமிழுணர்வை வெளிப்படுத்தியதற்காக அவனுக்கு அஞ்சலி செய்வதில் தவறில்லை....! எல்லாவற்றிகும் மேலாக அவன் குற்றவாளி என்பதை தீர்மானிக்க இந்தியாவில் எத்தனை சுத்தவாளிகள் இருக்கிறார்கள்....????! அதுபோக அவன் ஒரு மனிதன்... தவறுக்காக வருந்தி சரணடைய வந்த போதெல்லாம் சட்டத்தைக் காட்டி (அதே சட்டத்தின் பாதுகாப்போடு பல வீரப்பன்களும் வீரப்பனிகளும் இந்தியாவில் சாதாரணமாக ஆட்சிப்பீடம் முதல் நீதித்துறைவரை அலங்கரிக்கிறார்கள்...!), அவனையும் அவனது குற்றங்களையும் தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்தியவர்கள் தங்கள் ரகசியத் தொடர்புகள் அம்பலமாகிடுமோ என்று அஞ்சியவர்கள் ( இந்திய ஆளும் வர்க்கமும் பணக்கார வர்க்கமும் உயர்சாதி வர்க்கமும்) அவனை மனிதனாக வாழவிடவில்லை என்பதையும் பூலாந்தேவி விவகாரத்தில் செய்த விட்டுக்கொடுப்புகள் போல் இங்கு செய்யத் தவறியதையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது...! :evil:
- AJeevan - 10-19-2004 <b>வீரப்பனிற்கு அஞ்சலி</b> - Thusi - 10-19-2004 யாரோ ஒரு அரசியல்வாதியின் சந்த÷ப்பவாதத்திற்கு வீரப்பன் பலியாகிவிட்டா÷ என்றே எண்ணத்தோன்றுகிறது. இவ்வளவு காலமும் இரண்டு மாநில காவல்துறையினரின் தீவிர தேடுதல்களுக்கு மத்தியில் தப்பிப்பிழைக்க முடிந்தது அதே அரசியல்வாதிகளின் சுயநலங்களினால் தான். என்னதான் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டாலும் கொள்ளையடித்த செல்வத்தை ஏழை எளிய மக்களிற்கு கொடுத்துவந்துள்ளா÷ என்று தெரிவிக்கப்படுகிறது. அதாவது காட்டுப்புற எல்லையோர மக்களுக்கு அவ÷ ஒரு ்நவீன ரொபின்கூட்டாகவே் இருந்துவந்துள்ளா÷. கைதுசெய்யப்படுவதற்கு சாத்தியமிருந்தும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தாமல் சுட்டுக்கொன்றிருப்பது பலத்த சந்தேகங்களையே ஏற்படுத்துகிறது. - kavithan - 10-19-2004 என்னை பொறுத்தளவுக்கும் வீரப்பன் இறந்தது கவலைக்குரிய விடையம்? ஒரே ஒரு வீரப்பன் கடத்திய சந்தன மரங்களா அல்லது இனி வரும் காலங்களில் ஓராயிரம் பேரால் கடத்தப்படும் சந்தன மரங்களா அதிகமாகும்..? எழை மக்களால் தெய்வமாக மதிக்க பட்டவன்..! பணக்கார வர்க்கத்தால் பாவியாக பார்க்க பட்டவன் அரசியல் வாதிகளின் ஆஸ்திக்காக வளர்கப்பட்டவன் ஏன் அரசியலுக்காக வளர்க்கப் பட்டவனும் கூட.. போலீஸ்காரர்களுக்கு போக்கு காட்டியவ்ன் சாதாரண மக்களுக்கு அசாதாரணமாக காட்டப்பட்டவன் செய்தி ஊடகங்களுக்கு முக்கிய செய்தியாகியவன் உலக நாடுகளுக்கு உருவகித்து காட்ட பட்டவன் நடிகர்களுக்கு நகைச்சுவையாக தெரிந்தவன் சிறுவர்களுக்கு மீசைக்காரனாக தெரிந்தவன் அவரின் இறப்பினால் துடிக்கும் ஏழைமக்களுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களும், பிரார்த்தனைகளும். மேலதிக விபரங்கள் இங்கு எனது குடிலில் - Sriramanan - 10-20-2004 kavithan Wrote:எழை மக்களால் தெய்வமாக மதிக்க பட்டவன்..!கவிதன், வீரப்பன் எந்த நாட்டு ஏழைகளால் தெய்வமாக மதிக்கப்பட்டவன்? மலைவாழ் மக்களிற்கு தான் சட்டவிரோதமாகச் சம்பாதித்ததில் ஒரு சிறு பகுதியைத் தான் வீரப்பன் கொடுத்துள்ளான். அதுவும் பல காலத்திற்கு முன்பு. அவனை ஏழைகளின் தெய்வம் எனச் சொல்வது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடயதல்ல. என்ன தமிழினி அக்கா? எப்படி ஒரு கொலைவெறி பிடித்த அரக்கனின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த உங்களிற்கு மனசு வந்தது? - kavithan - 10-20-2004 அண்ணா BBC லை சனமே பேட்டி கொடுக்குது... BBC ஈழதமிழனுக்கு தான் எதிரி இவர்களுக்குமா.. பலர் சொல்லும் கருத்தை நீங்களும் கேட்டு பாருங்கள் http://www.bbc.co.uk/tamil/2115.ram http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml - hari - 10-20-2004 வீரப்பனின் தமிழ் உணர்வுக்காக அவர் எந்த பெரிய குற்றம் செய்திருந்தாலும் இந்த தமிழன் வீரப்பனுக்கு தலைவணங்குவான். வீரப்பனிற்கு எனது அஞ்சலிகள்.அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களும், பிரார்த்தனைகளும். செய்தி Quote:சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த தமிழக அதிரடிப்படையைச் சேர்ந்த 752 போலீசாருக்கும் தலா ரூ. 3 லட்சம் பரிசும், விரும்பும் இடத்தில் ஒரு வீட்டு மனை மற்றும் பதவி உயர்வும் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தான் இறந்தும் 752 குடும்பங்களை வாழ வைத்துள்ளார் - kavithan - 10-20-2004 [quote=hari]வீரப்பனின் தமிழ் உணர்வுக்காக அவர் எந்த பெரிய குற்றம் செய்திருந்தாலும் இந்த தமிழன் வீரப்பனுக்கு தலைவணங்குவான். வீரப்பனிற்கு எனது அஞ்சலிகள்.அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களும், பிரார்த்தனைகளும். செய்தி [quote]சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த தமிழக அதிரடிப்படையைச் சேர்ந்த 752 போலீசாருக்கும் தலா ரூ. 3 லட்சம் பரிசும், விரும்பும் இடத்தில் ஒரு வீட்டு மனை மற்றும் பதவி உயர்வும் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.[/quote] தான் இறந்தும் 752 குடும்பங்களை வாழ வைத்துள்ளார் ஓ அப்படியா செய்தி.. வாழவைக்க வில்லை இலட்சாதிபதிகளாகியிருக்கிறார்...... பாவம் அந்த ஏழைகள் தொடர்ந்தும் ஏழைகளாகவே....... - Sriramanan - 10-20-2004 Quote:வீரப்பனின் தமிழ் உணர்வுக்காக அவர் எந்த பெரிய குற்றம் செய்திருந்தாலும் இந்த தமிழன் வீரப்பனுக்கு தலைவணங்குவான். வீரப்பனிற்கு எனது அஞ்சலிகள்.அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களும், பிரார்த்தனைகளும். வீரப்பனின் தமிழ் உணர்வா? அது அவனுக்கு எப்படி ஏற்பட்டது? தமிழர் தேசியப் படை என்ற அமைப்பினருடன் கூட்டிணைந்த பின்னர்தான் வீரப்பன் தன்னைத் தமிழ் தீவிரவாதி எனவும் தமிழுணர்வுள்ளவன் எனவும் சொல்லிக் கொண்டான். ஆனால் இந்த தமிழுணர்வு அவனுடன் இணைந்திருந்த தமிழர் தேசியப் படை அவனிடமிருந்த பெருமளவான பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற பின்னர் இல்லாமல் சென்று விட்டது. - Sriramanan - 10-20-2004 கவிதன் பீபீசி தமிழோசையில் கருத்துத் தெரிவித்த மக்கள் அனைவரும் வீரப்பனைச் சுட்டுக் கொன்றதுதான் தவறு என்று தெரிவித்தார்கள் ஆனால் யாரும் வீரப்பனைக் கடவுள் என்றோ கதாநாயகன் என்றோ நல்லவன் என்றோ கூறவில்லை. வீரப்பனைக் கொல்லாமல் அவனைச் சட்டத்திற்கு முன்பாக நிறுத்தியிருந்தால் பல உறங்கும் உண்மைகள் வெளிவந்திருக்கும் என்றே அந்த மக்களின் கருத்து. வீரப்பன் என்ற மனிதனை தீவிரவாதியாக்கியது பணக்கார மற்றும் அதிகார வர்க்கம் என்பதில் என்னிடம் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவன் செய்த அட்டூழியங்கள் மன்னிக்கப்பட முடியாதவை என்பதாலேயே அவனுக்கு அஞ்சலி செலுத்துவது தவறு என்று குறிப்பிட்டிருந்தேன். - hari - 10-20-2004 Sriramanan Wrote:Quote:வீரப்பனின் தமிழ் உணர்வுக்காக அவர் எந்த பெரிய குற்றம் செய்திருந்தாலும் இந்த தமிழன் வீரப்பனுக்கு தலைவணங்குவான். வீரப்பனிற்கு எனது அஞ்சலிகள்.அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களும், பிரார்த்தனைகளும். தமிழ்த் தீவிரவாதியின் குடும்பம் வருகை: இதற்கிடையே வீரப்பனுடன் கொல்லப்பட்ட சேதுமணி தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. கொலை வழக்கில் தேடப்பட்ட சேதுமணி இப்போது வீரப்பனுடன் சேர்ந்து மரணம் ஏய்தியுள்ளார். :?: :?: அவரது உடலை அடையாளம் காட்ட அவரது குடும்பத்தினரை ஜெயங்கொண்டத்தில் இருந்து போலீசார் அழைத்து வந்துள்ளனர். உடலையும் அவர்களிடமே ஒப்படைக்கவுள்ளனர். - kuruvikal - 10-20-2004 பிபிசிக்கு தமிழக பேராசிரியர் ஒருவர் சொன்ன கருத்து வீரப்பன் ரொபின் கூட் போன்ற ஒரு சமூகக் கொள்ளைக்காரன்... அவன் அவனைப் பிடிக்க.. அழிக்க... தேடிச் சென்றவர்களுக்கும் அவர்களை அனுப்பிய அரசாங்க அதிகாரிகளுக்கும் அவன் நேசித்த மக்களுக்கு தீங்கிழைத்தோருக்கும் கூட இருந்து காட்டிக்கொடுக்க நினைத்தோருக்குமே எதிரியாக இருந்துள்ளான்... மற்றும்படி வீரப்பனின் செயற்பாடுகள் ஒன்றும் பெரிய சமூகப்பாதிப்பை ஏற்படுத்திய ஒன்றல்ல... அவனுடைய செயற்பாடுகள் காட்டையும் அதன் அண்டிய பிரதேசத்தையும் சார்ந்தே இருந்துள்ளது... வீரப்பனின் அநியாயத்தைப் பட்டியல் இடுவோர் அவனைத் தேடச் சென்ற பொலீசும் அதிரடிப்படையும் அப்பாவி ஊர்மக்களுக்குச் செய்த அநியாயங்களை ஏன் பட்டியல்படுத்தவில்லை... அவர்களை ஏன் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை....????! அப்போ அவர்கள் மனிதர்கள் இல்லையோ...! அது மாத்திரமன்றி வீரப்பனை பிடிப்பதென்பது ஒரு சின்ன விடயம் அதை கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு இழுத்தடித்து அவன் மூலம் பயன்பெற்றவர்கள் பணம் உழைத்தவர்கள் வெளியில் வெள்ளை வேட்டிகளாகவும் சுதந்திரமாகவும் உள்ள போது எய்தவன் இருக்க அம்பை நொந்த கதையாய் வீரப்பனின் கதை இருக்கிறது என்பதுதான் யதார்த்தம்...! உயர்சாதி சமூகத்தையே அழித்த பூலான்தேவிக்குப் பொது மன்னிப்பு அளித்து நாடாளுமன்றம் செல்ல அனுமதித்த பாரத தேசம்... தமிழ் தேசியம் பேசியதற்காய் வீரப்பனை சுட்டுக் கொன்றதென்றால்...பிறகேன் தமிழ்நாடு என்று பெயர் சூட்டிக் கொண்டு ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள்... இந்தி ஆளும் வர்க்கத்திடம் அரசியல் கூட்டமைத்து கெஞ்சிக் கூத்தாடி வெறும் காகிதத்தில் தமிழ் செம்மொழி என்று எழுதி வாங்கிப் போட்டு வாழாதிருக்கிறார்கள்....???! :twisted: :?:எமது நோக்கம் வீரப்பனை சுத்தவாளியாக்குவதல்ல... நடுநிலை உள்ள மனிதர்களாகா அவன் பக்கத்திலும் உள்ள நியாயங்களை எடை போட்டுப் பார்க்கத் தவறக் கூடாது என்பதைச் சொல்வதே...! :twisted: - tamilini - 10-20-2004 Quote:என்ன தமிழினி அக்கா? எப்படி ஒரு கொலைவெறி பிடித்த அரக்கனின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த உங்களிற்கு மனசு வந்தது? எல்லாம் ஒரு உயிர் தானே.. இருக்கும் போது நின்மதியாய் இருக்கவிடலை காட்டிலை ஏனும்.. இறந்த பின்பெனினும் சாந்தியடையட்டும்... என்று தான்...! - Sriramanan - 10-20-2004 வீரப்பனைப் பிடிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அதிரடிப்படை செய்த அட்டூழியங்கள் பயங்கரமானவை. இவை ஈழத்தில் இந்தியப் படைகள் செய்த கொடுமைகளுற்கு ஈடானவை. இதை யாரும் மறுக்க முடியாது. Quote:எல்லாம் ஒரு உயிர் தானே.. இருக்கும் போது நின்மதியாய் இருக்கவிடலை காட்டிலை ஏனும்.. இறந்த பின்பெனினும் சாந்தியடையட்டும்... என்று தான்...! எல்லாம் உயிர் என்பதற்காக நாங்கள் புளட் மோகனுக்கோ அல்லது ராசிக் என்ற அரக்கனுக்கோ அஞ்சலி செலுத்தவில்லை. அப்படி அஞ்சலி செலுத்துவதற்கு எங்கள் இதயம் இடம்கொடுக்காது. |