10-20-2004, 10:09 AM
Sriramanan Wrote:Quote:வீரப்பனின் தமிழ் உணர்வுக்காக அவர் எந்த பெரிய குற்றம் செய்திருந்தாலும் இந்த தமிழன் வீரப்பனுக்கு தலைவணங்குவான். வீரப்பனிற்கு எனது அஞ்சலிகள்.அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களும், பிரார்த்தனைகளும்.
வீரப்பனின் தமிழ் உணர்வா? அது அவனுக்கு எப்படி ஏற்பட்டது?
தமிழர் தேசியப் படை என்ற அமைப்பினருடன் கூட்டிணைந்த பின்னர்தான் வீரப்பன் தன்னைத் தமிழ் தீவிரவாதி எனவும் தமிழுணர்வுள்ளவன் எனவும் சொல்லிக் கொண்டான். ஆனால் இந்த தமிழுணர்வு அவனுடன் இணைந்திருந்த தமிழர் தேசியப் படை அவனிடமிருந்த பெருமளவான பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற பின்னர் இல்லாமல் சென்று விட்டது.
தமிழ்த் தீவிரவாதியின் குடும்பம் வருகை:
இதற்கிடையே வீரப்பனுடன் கொல்லப்பட்ட சேதுமணி தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. கொலை வழக்கில் தேடப்பட்ட சேதுமணி இப்போது வீரப்பனுடன் சேர்ந்து மரணம் ஏய்தியுள்ளார். :?: :?:
அவரது உடலை அடையாளம் காட்ட அவரது குடும்பத்தினரை ஜெயங்கொண்டத்தில் இருந்து போலீசார் அழைத்து வந்துள்ளனர். உடலையும் அவர்களிடமே ஒப்படைக்கவுள்ளனர்.

