07-24-2003, 12:25 PM
ஏன் செப்டம்பர் 11க்கு முன் பத்திரிகைகள் செய்திகள் கேட்கும் பழக்கமிருக்கவில்லையா? இருந்திருந்தால் தெரிந்திருக்குமே யார் ஓடி ஓடி சமாதானம் சமாதானம் என்று ஊருலகை துணைக்கழைத்தது என்று. பயங்கர வாதத்திற்கு அந்த பயங்கர வாத வல்லரசிடமே இலக்கணமில்லை. உலகில் அவர்கள் செய்வதா பயங்கரவாதம், அல்லது அடிமைப்பட்டு அல்லற்பட்ட ஒரு இனம் விடுதலை வேட்கை கொண்டேழுந்து அரக்கரை அழிக்க நினைத்ததா பயங்கரவாதம். வெள்ளைமாளிகையில் விசாரித்துப்பாருங்கள் எது பயங்கர வாதம் என்று? அல்லது பெந்தகோனிலுள்ளவர்களிடம் மெதுவாக விசாரித்துப் பாருங்கள் எது பயங்கரவாதம் என்று. புரிந்துணர்வு என்பது பேரினத்திடம் ஆயுதங்களை அடகு வைத்து விட்டு பிச்சைக்குக் கையேந்தி நிற்பதல்ல. கையேந்திகளுக்கு இவைகள் எங்கே விளங்கப் போகின்றது?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

