Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சூசைக்கு இயக்கத்தில் பிரச்சினையா? அது முழுப்பொய் - பாலா
#1
கடற்புலிகளின் தளபதி கேணல் சூசைக்கும் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு, முரண்பாடு என்றெல்லாம் தென்னிலங்கை ஊட கங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை@ அடிப்படை ஏதும் அற்றவை- என்று புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் உதயனுக்குத் தெரிவித்தார்.
மேற்படி ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து அவரிடம் நேற்றுமுன்னிரவு கேட்டபோது அவர் கூறியதாவது-
சற்றுமுன்னர் கூட தம்பி சூசையுடன் தொடர்பு கொண்டு உரையாடினேன். அப்படியேதும் குழப் பமோ, பிரச்சினைகளோ இல்லை - என்றார்.
இந்தியப் படையுடன் வன்னிக்காட்டின் நித் தியகுளம் பகுதியில் இடம்பெற்ற சண்டையில் தற்போது காவல்துறைப் பொறுப்பாளராக இருக் கும் நடேசன் மற்றும் சூசை போன்றோர் காய மடைந்தனர் என்பது உங்களுக்குத் தெரியும் - அச்சமயம் சூசையின் தோள்பட்டையில் ரவை
பாய்ந்தது. அது இப்போது அவருக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளது. தோள்பட்டையில் சற்று நோவு. அதனால், அவர் வீட்டில் தங்கியி ருந்து ஓய்வெடுக்கிறார். அவ்வளவுதான். அதை வேறுவிதமாகச் சித்திரித்து தென்னிலங்கை ஊடகங்கள் கதைகட்டி விடுகின்றன. இதனை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும்படி அவரே என் னிடம் கோரினார். அதையே உங்களுக்குக் கூறு கிறேன் என்றார் மதியுரைஞர் பாலசிங்கம்.
<b>
?
- . - .</b>
Reply


Messages In This Thread
சூசைக்கு இயக்கத்தில் - by Sriramanan - 10-15-2004, 06:08 PM
[No subject] - by shanxp - 10-21-2004, 01:11 AM
[No subject] - by Sriramanan - 10-21-2004, 07:33 AM
[No subject] - by TMR - 10-21-2004, 08:43 AM
[No subject] - by Jude - 10-31-2004, 11:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)