07-23-2003, 06:48 PM
முகமாலையில் உள்ள இராணுவ மற்றும் விடுதலைப் புலிகளின் சோத னைச்சாவடிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஏ-9 பாதையில் 24 மணிநேர போக்குவரத்தை மேற்கொள்வதற்கு வசதியாக முகமாலை மற்றும் ஓமந்தை சோதனைச்சாவடிகளுக்கு மின் விநியோகம் வழங்க ஐரோப்பிய ஒன்றி யம் நிதி உதவிகளை வழங்கி இருந் தது.இந்த நிதி உதவி மூலம் ஓமந்தை சோதனைச்சாவடிகளுக்கு மின்விநி யோகம் வழங்குவதற்கான பணி அநேகமாகப் புூர்த்தியடைந்துள்ளது.முகமாலைச் சோதனைச்சாவடி களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான புூர்வாங்கப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும், போதிய நிதி தமக்குக் கிடைத்ததுமே ஏனைய பணிகள் விரிவுபடுத்தப்படும் என்று மின்சாரசபை அதிகாரி தெரிவித்தார்.

