10-03-2004, 06:46 AM
சயந்தன்,
உங்களுடைய ஆர்வம் பாராட்டத்தக்கது. ஒரு மாதத்துக்கு முதல் எனது நண்பரான பொறியியல் பேராசிரியர் ஒருவர் போக விரும்பினார். தொடர்பெடுத்து கொடுத்தேன். ஒரு செயற்திட்டத்தை முடித்து விட்டு வந்திருக்கிறார். வன்னி தான் கட்டுப்பாட்டில் உள்ளது. முழு வடக்கு கிழக்குமல்ல. வன்னியில் ஒரு பொறியியலாளர் கூட இல்லை என்று சொன்னார். நீங்கள் தனித்த ஒருவர் என்றால், குறைந்தது ஒரு மாதமாவது நிற்கக் கூடியதாக இருப்பின் வரும்படி அழைக்கின்றனர். என்ன துறை உங்கள் துறை? காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் மின்பிறப்பாக்கி ஒன்றை வடிவமைக்கும் ஆற்றல் இருந்தால் உங்களை ஒரு நிறுவனத்தை உங்கள் நாட்டிலேயே பதிவு செய்யுமாறு கேடகிறார்கள். காரணம் உலக வங்கி இதற்காக பெருமளவு பணம் ஒதுக்கியிருக்கிறது. 2008 ம் ஆண்டுவரை இதற்காக விண்ணப்பிக்க முடியும். உலக வங்கி திட்டம் குறிப்பாக வடக்கு கிழக்கு என்று கேட்டுள்ள போதும் எந்த நிறுவனமும் முன்வராததனால் பணம் இலங்கையின் தென் பகுதிகளுக்கு செல்லும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது. சரியான திட்டம், பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம் ஆகியவை தயார் என்றால் விண்ணப்பிக்குமுன் வன்னி நிருவாகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். நான் சூரிய சக்தி சம்பந்தமாக ஒரு சிறிய மாதிரி அமைப்பை தொடங்கி இடை நடுவில் போதிய ஈடுபாடில்லாததினால் அப்படியே போட்டு வைத்திருக்கிறேன். நிறுவனம் ஒன்றை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். உங்களுடைய ஈடுபாடு பற்றி சொல்லுங்கள். பயனுள்ளதாக பேசலாம். வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமானால் தான் அந்த அந்த நாடுகளின் உதவியுடனும் வன்னியிலுள்ள நிருவாகத்தின் (விடுதலைப்புலிகள்) உதவியுடனும் உலகவங்கி கடனை பெறமுடியும். முக்கியமாக, நான் குறிப்பாக பார்ப்பது இநதக் கடனை திருப்பி செலுத்தும் அளவுக்கு மின்பிறப்பாக்கி மக்களுக்கு வருமானத்தை தரவேண்டும் என்பதையே. சோலார் செல்கள் அங்கு சில அமைப்புகளால் விற்கப்படுகின்றன. அவை மலிவான அமோபர்ஸ் ரகம். இந்த ரகம் 2 முதல் 5 வருடங்களுக்குள் 40 வீதமான ஆற்றலை இழந்து விடும். ஆகவே இவை கொடுக்கும் விலைக்கு பெறுமதியற்றவை.

''
'' [.423]
'' [.423]