10-03-2004, 06:42 AM
Quote:மேற்கோள்:போலி அகதி என எதை வைத்து நிர்ணயிக்கிறீங்கள்?!
நான் வருமானத்தில் பாதியை வரியாக செலுத்துகிறேன். எனது வரிப்பணம் போலி அகதிகளுக்கு போகாமல், போர்களங்களில் வாழும் உண்மையான அகதிகளுக்கு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்த எனக்கு புூரணமான உரிமை இருக்கிறது.
எவராவது ஒரு இலங்கைத் தமிழன் தனது நாட்டில் எங்காவது நிரந்தர உயிர் உத்தரவாதத்துடன் ஒரு சிங்களவனுக்குச் சமனான உரிமைகளுடன் வாழ முடியுமா?
மற்றும், இங்கே பிறந்து வளர்ந்த எவ்வளவோ ஐரோப்பியர்கள் அமைப்புரீதீயாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் மனிதாபிமானத்துடன் செயற்படும்போது.. இடையில் நுழைந்து குறிப்பிட்டகாலம் வரி செலுத்தி பிரசையாகிய உங்களுக்கு அகதிகளில்தான் என்னெ கருணை? என்னே கருணை?!
முந்தி கொழும்பிலை சண்டை எண்டா.. தமிழனுக்கு பிறந்ததுகள்தான் முன்னாலை நின்று தமிழனை அடிக்குமென்று சொல்லுவினம்.. அந்த ஞாபகம் வருகிறது உங்களின் கருத்தைப் பார்க்கும்போது..!!
சரி.. போலி அகதி என்று எந்தவொரு ஈழத்தமிழனையும் அழைக்க முடியுமா என்பதை மாத்திரம் மனதைதொட்டு சொல்லுங்கள்? அகதியாய் வந்தவர்கள் வந்தநிலை மறந்து ஆட்டம்போடுவது வேறு.. ஆனால் இலங்கைத் தமிழர்கள் எல்லோரும் 'நிரந்தரமான வாழ்வு' என்ற அடிப்படையைப் பொறுத்தளவில் அகதிகள்தான்.
.

