10-03-2004, 02:04 AM
Quote:. ஆனால் நான் இப்படி வந்ததற்கு நீங்கள் சொன்னது போல வணிகம் எதுவும் தொடங்காமல் படிக்காமல் உங்களது வார்த்தைகளில் ஒட்டுண்ணியாய் வாழ்ந்த என் தந்தை தான் காரணம்.அவரும் விடுதலைப்புலிகளின் காரணமாக வடக்கு கிழக்கிலும் வாழமுடியவில்லை என்று எழுதிக்கொடுத்தவர்களில் ஒருவரா?
Quote:ஆனால் நானும் நீங்களும் படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் இலங்கையில் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது. நல்ல சம்பளமும் கிடைக்கிறது.நான் இலங்கையில் போதிய வருமானத்துடன் கூடிய சிறந்த தொழில் செய்து அந்த நாடு வேண்டாம் என்று எனக்கு பிடித்தமான நாட்டை தெரிவு செய்து அவர்கள் வேலையும் தந்து இருப்புரிமையும் தர, சந்தோசமாக இந்த நாட்டை எனது நாடாக ஏற்று கொண்டவன் நான்.
Quote:குடியுரிமையை உதறி எறிந்து விட்டு வாருங்கள். நானும் வருகிறேன். என்ன இருந்தாலும் அது நம் அன்னை மண்ணல்லவா?பிறப்பு எனது வாழ்வை நிர்ணயிக்க வேண்டும் என்ற கொள்கைக்கு நான் எதிரானவன். பிறப்பால் (சாதி முறை நிர்ணயிக்கும்) செய்யும் தொழில் , பேசும் மொழி, வாழும் நாடு அனைத்தையுமே மக்கள் தாமாக தெரிந்து கொள்ளும் சுதந்திரம் தான் தனிமனித சுதந்திரம்.
நான் பிறந்து வளர்ந்த நாடான இலங்கை வளர்ச்சியடைந்த நாடாக வரவேண்டும் என்ற விருப்பமும் அதற்கான தேவைகள் என்னிடம் கேட்கப்படும் போது செய்தும் வருகின்றேன்.
மற்றவர்கள் நாடுவிட்டு நாடு மாறுவதையோ உழைப்புக்காக இடமபெயர்வதையோ நான் தவறு என்று சொல்லவும் இல்லை மாறாக அதை செய்யும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும். அது தான் தனிமனித சுதந்திரம்.
''
'' [.423]
'' [.423]

