10-02-2004, 05:56 AM
சயந்தன்,
உங்களுடைய கருத்தை நான் ஏற்று கொள்கின்றேன். நான் படித்து வேலை எடுத்துக்கொண்டு உழைப்பதற்காக என்று சொல்லி வந்தேன். மற்றவர்கள் பிறந்த அதே போர்க்களத்தில் தான் பிறந்து வாழ்ந்து படித்து வந்தேன்.
அகதி, இருக்க இடம் தா என்று கேட்டு (ஆனால் உண்மையில் நீங்கள் சொல்வது போல உழைப்பதற்காக, புலி கொல்கிறது என்று பொய் கூட சொல்லி) வந்து, கிடைத்த சந்தர்ப்பத்தில் படித்து முன்னேறுவோம் அல்லது ஒரு வணிகத்தை தொடங்கி நிலை பெறுவோம் என்று பார்க்காமல், தோலின் நிறத்தை சாட்டு சொல்லிக் கொண்டு ஒட்டுண்ணிகளாக வாழ்வதை தான் என்னால் ஏற்று கொள்ள முடியாமல் இருக்கிறது.
நான் அகதிகளாக வந்து இரவு முழுவதும் எரிபொருள் நிலையத்தில் நின்று உழைத்து, பகலில் விரிவுரை அரங்கில் துங்கி துங்கி விரிவுரை கேட்டு பொறியியலாளராகி பின்னர் பொறியியலாளராக வேலை எடுத்து அதைக்காட்டி குடியுரிமை பெற்ற தலைசிறந்த எமது மாணவர்களோடு பழகியிருக்கிறேன். அவர்கள் குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் மாவீராக, நாலாவதை லண்டன் அனுப்பி விட்டு போரிலே மாண்டு போன பெற்றோருக்கு பிறந்த உண்மையான அகதிகள். அதனால் உணர்ச்சியுடன் படித்தார்கள். பாராட்டி குடியுரிமை கொடுக்குமளவுக்கு உயர்ந்தார்கள்.. இப்போது வேலையில் விடுப்பு எடுத்துக்கொண்டு வன்னியில் அபிவிருத்தி பணி செய்கின்றார்கள்.
அதே வேளை தன்னை விடுதலைப்புலிகள் கற்பழித்ததாக எழுதிக்கொடுத்து வடக்கு கிழக்கில் நீ இருக்கலாம் தானெ என்று சொல்லி நாடு கடத்த வந்த அரசிடம் தன்னை இருக்க விடச்சொல்லி மன்றாடிய அகதிகளும் இருக்கிறார்கள். அகதிக்கோரிக்கை மேனமுறையீடுகளுக்கு பார்வையாளராக செல்லும் தமிழீழத்தொன்டர் ஒருவர் சொல்லிக்கவலைப்பட்ட விடயம் இது. வீடுதலைப்புலிகளின் காரணமாக தாம் இலங்கையில் வாழ முடியவில்லை என்று எழுதிக் கையெழுத்து போட்டுக்கொடுத்த அகதிகள் பல்லாயிரக்கணக்கானவர்கள். விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளல்லர் என்று நாம் அரசுக்கு எடுத்து சொல்லும்போதெல்லாம் இந்த புள்ளிவிபரத்தை தான் துக்கி முகத்துக்கு முன்னால் பிடிக்கினறார்கள். பணத்துக்காகவும் வசதிக்காகவும் போராட்டத்தையும் மாவீரர்களையும் ஏன் எதையுமே விற்க தயாரானவர்களை ஏனொ என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

''
'' [.423]
'' [.423]