10-02-2004, 05:25 AM
யூட் சொன்ன பாதி விடயத்தினை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். அவுஸ்ரேலிய நாட்டிலும் அனைவரும் வந்தேறு குடிகள் தான். வெறும் 300 வருசத்திற்கு முன்னர். இங்கே என்னைப் பார்த்து ஒருவன் நீ வந்தேறு குடி என்றால் சொன்ன அவனும் வந்தேறு குடி தான். ஆனால் யூட் நீங்கள் எதற்காக வெளிநாடு வந்து சேர்ந்தீர்கள். பணம் சேர்க்க, நல்ல வேலை செய்ய, கொஞ்சம் வசதியாக வாழ இதற்குத் தானே. இதனை எவர் செய்தாலும் அது தவறு கிடையாது. உங்களை அழைத்த நாடு (கனடா????) கண்டிப்பாக நீங்கள் அங்கே வரத்தான் வேண்டும் என்று வற்புறுத்த வில்லையே. நீங்களாகத் தானே விரும்பி போனீர்கள். உங்களைப் போலவே பணம் சம்பாதிக்க வாழ்வில் நல்ல நிலைக்கு வர இவற்றிற்காகத் தானே வேறு நாடுகளுக்கும் மக்கள் போனார்கள். நீஙக்ள உங்கள் படிப்பை காட்டி போனீர்கள். அவர்கள் இனப்பிரச்சனையை காட்டி போனார்கள். மற்றும் படி போன நோக்கம் ஒன்று தான். உங்களுக்கும் அவர்களுக்கும்.
..

