10-02-2004, 01:45 AM
அன்பு இராஜன்.
நலம்தானே!
தாங்கள் குறிப்பிட்டபடி யாழ்.இணையத்தில் பூவரசு போட்டிகள் பற்றிய விபரங்கள் பார்த்தேன்.
சுடச்சுட வந்த கருத்துப் பதிவினையும் கண்ணுற்றேன்.
தமிழினியும், கவிதனும் கவிதைத் தலைப்புப் புரியவில்லை என்பதுபோல் பாவனை செய்வது எனக்குச் சிரிப்பூட்டியது.
கவிதைக்கான தலைப்பு என்பதால் கவிதையிலேயே பதில் சொல்லவேண்டும்போல் இருந்தது.
எழுதிவிட்டேன்.
இந்தப் பதில் அவர்களுக்கு அவசியம் எனத் தாங்கள் கருதினால் இதனை அவர்களுக்கு அனுப்பிவிடுங்கள்.
நமது எழுத்தாளர்களிடமும் கவிஞர்களிடமும் நான் கொண்டுள்ள அதீத நம்பிக்கையிலேயே நான் இதுபோன்ற தலைப்புக்களைத் தேர்வுசெய்கிறேன்.
அன்புடன்
உங்கள்
இந்துமகேஷ்
**************************************
கீழே நான் வரைந்துள்ள கவிதை (?!) கவிதனுக்கும் தமிழினிக்குமாக...
அங்கிங்கெனாதபடி...
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திட்ட
அரும்பொருளை அறிகிலீரோ?
ஆனந்தத் தமிழ்கொண்டு அழகான கவிபடைத்து
அனுப்பிடவே துணிகிலீரோ?
எங்கும் தமிழ்முழங்க இணையம்வழி ஓடிவரும்
என்னருமைத் தமிழின் உறவே!
ஏதுமறியாதவர்போல் ஏனிந்தப் புன்னகையோ
ஏந்திடுக எழுதுகோலே!
-அன்புடன் இந்துமகேஷ்
(எங்கடை தமிழிலை சொல்லுறதெண்டால் அங்கிங்கெனாதபடி... எண்டது
அங்கினை இங்கினை எண்டில்லாமல் எங்கினையும் இருக்கிறது.
ஆகாயம், காத்து, அன்பு, பாசம், எண்டு உப்பிடி உங்கினை அங்கினை எண்டில்லாமல்
எல்லா இடத்திலையும் இருக்கிற சங்கதியள்......
உதுக்குமேலை நான் என்னத்தைச் சொல்ல...?
-இந்துமகேஷ்)
மகேஷ் அண்ணை! கவிதனும் தமிழினியும் போட்டிபோட்டுக்கொண்டு கவிதை எழுதி அனுப்பப் போகினம். இருந்து பாருங்கோ!! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

.