09-29-2004, 08:01 PM
<span style='font-size:22pt;line-height:100%'><b>சினிமாவுக்கு பின்னால்...
-சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள்-
பாகம் - 6</b>
_ பெ.கணேஷ்
தமிழ் : நீங்க பார்வையைப் பற்றி சொல்றதுக்கு முன்னாடி கேமராவை பத்தியும் லென்ஸ் பத்தியும் சொல்லுங்க.
சொல்றேன். சினிமா இயக்கத்திற்கு முதல் காரணம் கேமராதான். அதில் பார்வையாளர்களின் கண்ணோட்டத்தில் ஒரு இயக்குனரின் கற்பனையின்படி கேமராமேன் கோணம் அமைத்து படம்பிடிக்கிறார்.
இன்று நம்ம தமிழ் சினிமாவுல
ERRI 2, ERRI 3, 435ன்னு மூணு கேமராவைத்தான் பயன்படுத்தறாங்க. பெரும்பாலும் சினிமாஸ்கோப் படம்தான் இப்ப எடுக்கப்படுது. ஆனால் அதற்காக 35MM பிலிமைத்தான் பயன்படுத்தறாங்க. அப்படின்னா அந்த மூணு கேமராவும் 70எம்.எம் கேமராவான்னு நீங்க கேட்லாம். இல்ல. அதிலுள்ள லென்சையும் கேட்டையும் சினிமாஸ்கோப்பா மாற்றித்தான் படம்பிடிக்கிறாங்க. அப்படி படம் பிடிக்கப்பட்ட பிலிமை தியேட்டர் புரொஜெக்டர்ல அதே மாதிரி சினிமாஸ்கோப் லென்சின் மூலமா திரையிடறாங்க.
தெளிவாகச் சொல்லணும்ணா நம்ம உபயோகபடுத்துற 35எம்எம் பிலிமோட ஒரு பிரேம் 0.868 நீளமும் 0.631 அகலமும் இருக்கும். புரொஜெக்டரின் ஒளி பிலிமில் ஒரு பிரேமில் விழும் நீளம்னு பார்த்தா 0.825 நீளமும் 0.600 அகலமும் இருக்கும். இது கிட்டதட்ட கேமராவில் ஸ்கோப்பாக பதிவு செய்யும் அளவிலேயே இருப்பதால் படம் திரையில் சினிமாஸ்கோப்பாக தெரிகிறது.
அதுமட்டுமில்லாமல் இப்போது 70எம்எம் பிலிம் தயாரிப்பிலும் புழக்கத்திலும் இல்லை. 35எம்எம் தான் சினிமாஸ்கோப்பாக பயன்படுத்தப்படுகிறது.
70எம்எம் பிலிம் 35எம்எம் பிலிம்மைவிட சிறப்பம்சம் மிகுந்ததாக இருந்தது. ஆனால் தயாரிப்பு விலை, விற்பனை விலையில் நஷ்டம் என்பதால் அது புழக்கத்தில் இல்லாமல் போனது.
70எம்எம் பிலிமில் சிறப்பம்சம் என்று சொல்வதென்றால் அதன் பிரேமின் இரண்டு பக்கமும் மூன்று , மூன்று ஒலிப்பாதைகள் என சிக்ஸ் டிராக்ஸ் வசதி இருக்கும். 35எம்எம் பிலிமில் அப்படியில்ல ஒரே ஒலிப்பாதைதான்.
மேலே பார்க்கும் அதே பிரேம் அளவு ப்ரொஜக்டரில் இருப்பதாலும் சினிமாஸ்கோப் லென்ஸ் கேட் கேமராவில் பயன்படுத்துவதைப் போலவே ப்ரொஜக்டரில் இருப்பதாலும் திரையில் ஸ்கோப்பாக தெரிகிறது.
ஆனால் நீங்கள் ஸ்கோப்பில் பதிவு செய்யப்பட்ட 35எம்எம் பிலிம்மை எடுத்து பார்த்தால் அது வெறும் கண்களுக்கு கம்பரஸ் ஆகி நீளநீளமான உருவமாகத் தெரியும்.
இப்போது கேமராவிற்கு வருவோம். தமிழ் நீங்க கேட்ட மாதிரி கேமராவின் லென்ஸ்கள் பற்றி காமெரா மேன்களை தவிர வேறு யாருக்கும் தெரியாமல் அதை ஒரு ரகசியமாகவே பாதுகாத்து வருகிறார்கள்.
<img src='http://www.kumudam.com/cinema/film-strip.jpg' border='0' alt='user posted image'>
புதிய இயக்குநர்கள், ஏன் பழைய இயக்குனர்கள்கூட கேமரா லென்ஸ் பற்றி அதிக ஆர்வம் காட்டாமல் அது கேமராமேன் வேலை என்ற கண்ணோட்டத்தில் ஒரு காட்சியில் ஒரு (ஷாட்டை) பரிமாணத்தை சொல்லும்போது. கழுத்தளவு ஷாட் வச்சிக்க... இடுப்பளவு வச்சிக்க... இதுல ரெண்டு பேர் வரணும்னு சொல்லுங்க.
இதுக்கு காரணம் அவங்களுக்கு கேமரா லென்ஸ் டெக்னிக் தெரிந்திருந்தாலும் அது அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு சுலபத்துல தெரிஞ்சிடக்கூடாதுன்னு நினைப்பாங்க. அடுத்து பார்வையாளர்கள், நடிகர்களுக்கும் அந்த லென்ஸ் ரகசியம் தெரிய வேணாம்னு நினைப்பாங்க.
நம்ம தொடர்லதான் ரகசியமே இல்லையே! சொல்றேன் 35 எம்எம் பிலிம்ல படம் எடுக்கும்போது ERRI 2, கேமராவுல 9.6 , 16, 24, 32, 50, 85, 100, சூம் லென்ஸ்னு எட்டு வகை லென்ஸ்களை பயன்படுத்துவாங்க.
சினிமாஸ்கோப் படம்னா... 24, 40, 50, 75, 100 சூம் லென்ஸ்னு ஆறு வகை லென்ஸ்களை இப்ப பயன்படுத்தறாங்க.
35எம்எம் படத்துல உபயோகிக்கிற அந்த லென்ஸ் எந்தெந்த ஷாட்டுக்குன்னு பார்ப்போம்.
9.6
இதை அவ்வளவு யாரும் பயன்படுத்தமாட்டாங்க. ஏன்னா முழு லாக் ஷாட் அதாவது ஒரு அறையின் மூலையில் கேமராவை வைத்தால் அந்த அறையின் முழு பரிமாணத்தையும் கொண்டு வரும் ஆற்றல் உள்ளது.
16
இதுதான் ஒரு அறைக்குள்ளே முழுதும் கவர் ஆகிற மாதிரியான காட்சியை எடுக்க பயன்படுகிறது. கேமராவின் இரண்டு பக்க எட்ஜிலிருந்து முழு பரிமாணமும் துள்ளியமாக தெரியும்.
24
இது பொதுவாக இரண்டு பேர் பேசும் MID லாங் ஷாட்டுக்காக இந்த லென்ஸை உபயோகிக்கலாம்.
32
கணுக்கால் வரை தெரியும்படியான MID SHOTக்கு இந்த லென்ஸை உபயோகிக்கலாம்.
50
இது குளோப் ஷாட்டிற்கு பயன்படுத்தப்படும் லென்ஸ்
85
இது டைட் குளோசப்பிற்கு பயன்படுத்தப்படும் லென்ஸ் அதாவது இந்த லென்ஸால் கண்களை மட்டும் தனியாக குளோசப்பில் எடுக்கமுடியும்.
100
இது எக்ஸ்ட்ரீம் குளோசப் ஷாட் எடுக்க பயன்படும் சென்ஸ் அதாவது காது ஜிமிக்கி ஒரு கண் திறந்து, மூடுவது போன்ற மிக நெருங்கிய குளோசப் ஷாட்களை எடுக்கலாம்.
சூம் லென்ஸ்
பெரும்பாலும் இந்த லென்ஸ்தான் கேமராவில் பயன்படுத்தபடும். ஏனென்றால் 25 + 250 என்கிற அமைப்பிலிருக்கும் இந்த சூம் லென்சின் மூலம் குளோசப், மிட் ஷாட், லாங் ஷாட் என்று எல்லா ஷாட்களையும் எடுக்க முடியும். அதேபோல் ஒரு நடிகர் பேசும்போது சூம் போவது இதன்மூலம் எடுக்கமுடியும் மற்ற லென்ஸ்களில் சூம் போக முடியாது. அப்படி சூம் போவதென்றால் டிராலியை உபயோகித்து காமேராவை முன் நோக்கி நகர்த்திதான் சூம் போகமுடியும்.
இதில் அப்படியில்ல கேமராவில் இருந்த இடத்திலிருந்தே சூம் போகலாம். அதாவது ஒரு தெருவின் முனையில் கேமரா இருக்க தெருவின் அடுத்த முனையில் நடிகர் இருந்தாலும் இங்கிருந்து சூம் மூலமாக நடிகரின் முகத்தை குளோசப்பில் எடுக்கமுடியும். அவ்வளவு துள்ளியமானது அந்த சூம் லென்ஸ்.
அடுத்து 1000 சூம் பைப் லென்ஸ் என்றும் இருக்கிறது. இதிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள ஒரு நடிகரை இங்கிருந்தே குளோசப் செய்யமுடியும்.
அடுத்து வைட் ஆங்கிள் லென்ஸ் என்றும் இருக்கிறது. இது மிக குறுகலான இடத்தையும் மிகவும் அகலமான அறையாக பரிமாணித்து காட்டும் ஆற்றல் உள்ளது.
சினிமாஸ்கோப் லென்ஸ்களை பொறுத்தவரை அது படத்தில் அகலமான பரிமாணத்தை கொண்டது என்பதால் ஆறு லென்ஸ்கள் உள்ளது. இப்போது சினிமாஸ்கோப் லென்ஸ்களை பார்ப்போம்.
24
இது ஒரு அறையின் முழு பரிமாணத்தையும் காட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. காமரா வைத்த இடத்திலிருந்து எல்லா பொருட்களும் நடிகர்களும் பிரேமிற்குள் வந்திடுவது இது லென்சின் சிறப்பாகும்.
40
இது இருவர் நின்று பேசும் காட்சியை மிட் ஷாட் ஆக எடுக்க உதவும். கணுக்கால் வரையிலான ஷாட்டிற்கு இது உபயோகப்படுத்தப்படுகிறது.
50
இது இருவர் பேரும் ஓவர் ஷோல்டர் ஷாட்டிற்கும் குளோசப் ஷாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
75
இது டைட் குளோசப் ஷாட்டிற்கு பயன்படுத்தபடுகிறது. அதாவது வெறும் முகம் வரையாக குளோசப் ஷாட்களுக்கு இந்த லென்ஸை பயன்படுத்துகிறார்கள்.
100
இது (எக்ஸ்ட்ரீம்) மிக நெருங்கிய குளோசப் ஷாட்களுக்காக பயன்படுத்தப்படும் லென்ஸ்.
சூம் லென்ஸ்
இது 35எம்எம் படத்தில் பயன்படுத்தப்படும் சூம் லென்ஸ்தான் இதன்மூலம் பாடல் காட்சிகளில் முதற்கொண்டு லாங்ஷாட்வரை எடுக்கலாம். அதேபோல் மிட்ஷாட்ஸ், குளோசப் ஷாட்ஸ் என்ற எல்லா விதமான ஷாட்களையும், சூம் செல்வதற்கும், வருவதற்கும் பயன்படுத்தலாம்.
லென்சிற்கு அடுத்து கேமராவில் பில்டர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். அதாவது பகலில் எடுக்கப்படும் ஷாட்டை இரவு எஃபெக்டோடு எடுக்க நைட் எஃபெக்ட் பில்டர் பயன்படுத்தினால், பகலில் படம் எடுத்தாலும் அது இரவில் எடுத்தது போல் இருக்கும். அதேபோல் உச்சி வெயிலில் எடுக்கும்போது அதீதமான வெளிச்சம் இருக்கும். அதை குறைத்து மிதமான ஒளி தெரியும் விதமாக படம் எடுக்க சன்ஃசாப்ட் பில்டரை உபயோகப்படுத்துவார்கள்.
அதேபோல் கேமராவின் இயக்க வேகத்தில் வித்தியாசப்படுத்தினால் பலவிதமாக எஃபெக்டுகள் வரும்.
வழக்கமாக 24 பிரேம்கள் ஒரு நொடிக்கு என்ற வேகத்தை கூட்டி 48 அடிகள் 72 அடிகள் என்ற வேகத்தில் படம்பிடித்தால் அது திரையில் ஸ்லோமோஷனாகத் தெரியும்.
அதேபோல் 24 பிரேம்களை 12 பிரேம் என வேகம் குறைத்து எடுத்தால் வேகவேகமாக ஓடுவதுபோல் திரையில் தெரியும்.
இந்த வேகத்தை அதிகப்படுத்தும் வசதி ERRI 2, ERRI 3, 435 கேமராக்களில் உள்ளது அதாவது ஒரு நொடிக்கு நூறு பிரேம்கள் வரை வேகத்தை கூட்டமுடியும்.
அடுத்து இரண்டு கார்கள் வேகமாக மோதிக்கொள்ளும் காட்சியையும், கீழேயிருந்து ஒருவர் பல்டி அடித்து மேலே சென்று நிற்கும் காட்சியும் ரிவர்சில் எடுத்தால் படம் பார்க்கும்போது தத்ரூபமாக இருக்கும். அதாவது இரண்டு கார்கள் நச்சென்று மோதிக்கொள்வதுபோல் எடுத்தால் பிரச்னை என்பதால் இரண்டு கார்களையும் மிக நெருக்கமாக ஒட்டியிருக்கும்படி வைத்துவிட்டு காருள்ளிருக்கும் நபர்கள் ஒரே வேகத்தில் சராலென ரிவர்சில் காரை எடுக்கும்படி காட்சி எடுப்பார்கள்.
அந்த காட்சியின் நேரத்திற்கு தக்கவாறு கேமராவில் ஃபிலிமை ஓடவிட்டு அதை ரிவர்ஸில் படம் பிடிப்பார்கள். இப்போது திரையில் பார்த்தால் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது போல் தெரியும். இதேபோல்தான் மேலே இருக்கும் ஒரு நடிகர் குதிப்பதை ரிவர்சில் படம்பிடித்தால் திரையில் கிழேயிருந்து பல்டியடித்து மேலே செல்வதைப் போல் தெரியும்.
இது மட்டுமில்லாமல் இதுபோன்ற நிறைய டெக்னிக்குகளை கேமராவில் செய்யமுடியும்.
இந்த வாரம் கேமரா லென்ஸ் பற்றி ஆழமாக மனதிற்குள் பதிவு செய்துகொள்ளுங்கள் பார்வையை அடுத்தவாரம் பார்ப்போம்.</span>