Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிரிக்கெட் - ICC Champion Trophy
#25
மினி உலகக் கோப்பை தொடர்பான மேலதிக விபரங்களுக்காக இத்தகவல் தரப்படுகிறது...

<b>மினி உலக கோப்பையை வென்றது வெஸ்ட் இண்டீஸ்</b>

<img src='http://www.thatstamil.com/images24/photo300.jpg' border='0' alt='user posted image'>

மினி உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கு இந்தியத் தீவுகள் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

டாஸ் வென்ற பிரையன் லாரா பீல்டிங்கைத் தேர்வு செய்தார். பேட் செய்ய ஆரம்பித்த இங்கிலாந்து அணி வீரர்கள் வரிசையாக விக்கெட்களை இழந்தனர். சோலங்கி (4), மைக்கேல் வான் (7), பிளின்டாப் (3), ஜோன்ஸ் (6) என விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்ததால் இங்கிலாந்து அணி பயங்கரமாகத் தடுமாறியது.

இருப்பினும் டிரஸ்கோதிக் அணியை சரிவிலிருந்து மீட்டார். அவர் 104 ரன்கள் எடுத்தார். இருப்பினும் மறுமுனையில் ஸ்ட்ராஸ் (18 ), காலிங்வுட் (16), கைல்ஸ் (31) என அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்ததால் 49.4 ஓவர்களில் 217 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது. மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் ஹிண்ட்ஸ் 3, பிராட்ஷா 2 விக்கெட் வீழ்த்தினர்.

218 ரன்கள் என்பது எளிதான இலக்கு. லாரா தலைமையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியினர் இதை விரைவில் எட்டிவிடுவார்கள் என்று எல்லாரும் நினைத்தனர். ஆனால் தேவையில்லாத ஷாட்களை அடித்து ஹிண்ட்ஸ் (3), சர்வான் (5), கெய்ல் (23), லாரா (14), வெய்னே பிரேவோ (0) விரைவில் வெளியேறினர். 80 ரன்களுக்கு 5 விக்கெட்களைப் பறி கொடுத்து தோல்வியின் விளிம்பில் நின்றது லாரா அணி.

ஆனால் சந்தர்பால் பொறுமையாக ஆடி 47 ரன்கள் எடுத்தார். அடுத்து அவரும் அவுட்டாக இங்கிலாந்து வெற்றி பெறும் என்று நிலை ஏற்பட்டது. கடைசி நேரத்தில் பிராட்ஷா, பிரவுன் ஜோடி அதிரடியாக ஆட ஆரம்பிக்க ஆட்டம் திசை மாறியது. இறுதியில் 48.5 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை வென்றது.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் முறையாக மினி உலக கோப்பையை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகன் விருதை பிராட்ஷாவும், தொடர் நாயகன் விருதை ராம்நரேஷ் சர்வானும் பெற்றனர்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 09-11-2004, 07:15 AM
[No subject] - by kavithan - 09-11-2004, 07:39 AM
[No subject] - by kuruvikal - 09-11-2004, 10:39 AM
[No subject] - by kavithan - 09-11-2004, 04:43 PM
[No subject] - by tamilini - 09-11-2004, 05:04 PM
[No subject] - by kavithan - 09-11-2004, 05:35 PM
[No subject] - by tamilini - 09-11-2004, 07:41 PM
[No subject] - by kavithan - 09-11-2004, 08:02 PM
[No subject] - by tamilini - 09-11-2004, 08:28 PM
[No subject] - by kavithan - 09-11-2004, 08:48 PM
[No subject] - by பரஞ்சோதி - 09-12-2004, 05:24 PM
[No subject] - by sarihalim - 09-13-2004, 04:49 PM
[No subject] - by kavithan - 09-14-2004, 04:09 AM
[No subject] - by kuruvikal - 09-19-2004, 03:04 AM
[No subject] - by sarihalim - 09-19-2004, 07:54 AM
[No subject] - by kuruvikal - 09-20-2004, 02:54 AM
[No subject] - by kavithan - 09-20-2004, 06:21 AM
[No subject] - by kuruvikal - 09-22-2004, 08:24 AM
[No subject] - by kuruvikal - 09-22-2004, 09:55 PM
[No subject] - by kavithan - 09-22-2004, 10:57 PM
[No subject] - by kuruvikal - 09-25-2004, 09:40 PM
[No subject] - by kuruvikal - 09-26-2004, 02:13 AM
[No subject] - by kavithan - 09-26-2004, 08:06 AM
[No subject] - by kuruvikal - 09-26-2004, 07:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)