09-26-2004, 08:06 AM
மேற்கிந்தியத்தீவுகள் அணியின் 8வது 9வது ஆட்ட காரர்களின் அபார ஆட்டமே மேற்கிந்தியதீவுகளின் இவ் வெற்றிக்கு முக்கிய காரணம் இவர்கள் இருவரும் எடுத்த 71 ஓட்டங்களினால் தான் மேற்கிந்திய தீவு இவ் இலக்கை எட்ட முடிந்தது. முதலில் துடுப்பெடுத்து ஆடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களை பெற்றது. பின் துடுப்பெடுதாடிய மேற்கிந்திய தீவு அணி முக்கிய ஆட்டக்காரர்களை எல்லாம் சொற்ப ஓட்டங்களிலேயே இழந்து தள்ளாடி தள்ளாடி ஓட்டங்களை எடுத்து கொண்டிருந்தது. 147 ஓட்டங்களை அணி பெற்று இருக்கும் போது கடைசி நம்பிக்கை ஆட்டக்காரர் சந்திரபோலும் 47 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். 9வது விக்கட்டுக்கு ஜோடி சேர்ந்த கோர்ட்ணி பிரெளன், இயான் பிராட்சா ஆகியோரின் அபார ஆட்டம் அனைவரையும் கவர்ந்ததுடன், இங்கிலாந்திடம் இருந்து மினி உலககோப்பையை கவரவும் வழிவகுத்தது.
[b][size=18]

