Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திலீபன்
#1
திலீபன்

நீண்ட பன்னிரு நாட்கள்......
எப்படித்தான் தாங்கினாய் கொழுந்து விட்டெழும் பசித் தீயை....
ஒரு நேரம் உணவில்லையென்றால் உடல் தொய்ந்து உயிர்வற்றிப் போகிறது எமக்கு.
உணவின் தேவை சகல உயிர்களும் உணரும்.
நீ, திலீபா, உணர்வின் வேட்கைக்காய் உணவு மறுத்து உயிர் துறந்தாய்.

நல்லூரின் வீதியில்
நல்லுள்ளங்கள் சூழ
நாசம் செய் படைகளுக்கெதிராய்
நம்மவரின் தேவைகள் முன்வைத்து
திலீபா நீ யாகம் இயற்றினாய் - உயிர் நெய்யுூற்றி.

அகிம்சை போதித்த மகாத்மாவின் தேசத்துப் படைகள்
எமது அகிம்சா வீரனை பசித்தீயில் எரித்தழித்தார்கள்.

மறவோம் திலீபா.
நீ சொன்ன விடுதலைத் தேசம் மரணத்திலும் மறவோம்.
நாம் செத்து விழுந்தாலும்
இற்றுப்போகாதெம் வரலாறு.
வரலாற்றின் பக்கங்களில் நீ என்றும் வாழுவாய் - வாழ்ந்துகொண்டேயிருப்பாய்.
--
--
Reply


Messages In This Thread
திலீபன் - by Thusi - 09-24-2004, 03:43 PM
[No subject] - by tamilini - 09-24-2004, 03:53 PM
[No subject] - by kuruvikal - 09-24-2004, 05:42 PM
[No subject] - by kavithan - 09-24-2004, 10:19 PM
[No subject] - by shanmuhi - 09-25-2004, 09:36 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)