09-24-2004, 01:26 PM
<span style='color:darkred'><b>சினிமாவுக்கு பின்னால்...
-சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள்-
பாகம் - 5</b>
- பெ.கணேஷ்
<img src='http://www.kumudam.com/cinema/camra.png' border='0' alt='user posted image'>
ஒரு காட்சிக்கு எண்ட்ரி என்பது எவ்வளவு முக்கியம்?
ஒரு காட்சியின் எண்ட்ரி எவ்வளவு முக்கியமானது என்பதை அறியும்முன் அந்த ஒரு காட்சியை நம் தமிழ் சினிமாவின் இயக்குனர்கள் எப்படி பல ஷாட்களாக பிரித்து 'பேசிக்' என்கிற முறையில் படமாக்குகிறார்கள் என்று பார்ப்போம்.
அதாவது ஒரு காட்சியை பல ஷாட்களாக பிரித்பிறகு... காட்சியின் முதல் ஷாட்டை மாஸ்டர் ஷாட்டாக எடுப்பார்கள். அதன்பிறகு குளோப் ஷாட்ஸ், ஓவர் ஷோல்டர் ஷாட்ஸ் என எடுத்துவிட்டு இறுதி ஷாட்டை மீண்டும் முதல் ஷாட்டை மாஸ்டர் ஷாட்டாக எடுப்பார்கள். அதன்பிறகு குளோப்ஷாட்ஸ், ஓவர் ஷோல்டர் ஷோட்ஸ் என எடுத்துவிட்டு இறுதி ஷாட்டை மீண்டும் முதல் ஷாட்டை போல மிட் ஷாட்டாகவோ லாங் ஷாட்டாகவோ லாங் ஷாட் அல்லது குளோசப் ஷாட்டாகவோ முடிப்பார்கள்.
உதாரணத்திற்கு... "புகுந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்ணை பார்ப்பதற்காக அவளது அப்பாவும், அம்மாவும் வருகிறார்கள். மகளிடம் நலம் விசாரித்துவிட்டு அவளிடம் தாங்கள் கொண்டு வந்த உணவு பண்டங்களை கொடுத்துவிட்டு... நாங்கள் அவசர வேலையாக வந்தோம் உடனே கிளம்பணும். அடுத்தமாதம் வரும்போது இரண்டுநாள் இங்கே உன்னோடு தங்கியிருக்கிறா மாதிரி வர்றோம்" என்று சொல்லிவிட்டு செல்லும் காட்சியை... எப்படி பேசிக் முறையில் படம்பிடிக்கலாம் என்று பார்ப்போம்.
முதல் ஷாட் : மகள் அடுப்படியிலோ அல்லது துணி துவைத்துக்கொண்டோ அல்லது மாடியில் துணிகளை உலர்த்திக்கொண்டோ இருக்கிறாள். இதை குளோசப் ஷாட்டிலோ மிட் ஷார்ட்டிலோ பதிவு செய்வார்கள்.
இந்த முதல் ஷாட் என்பது இதற்கு முந்தைய சீனில் கடைசி ஷாட்டைப் பொறுத்து மாறுபடும்.
அதாவது... ஒரு காட்சியின் கடைசி ஷாட். கதாநாயகியின் முகத்தில் குளோசப்பில் முடிகிறது என்றால் அடுத்த சீனில் முதல் ஷாட் அதே கதாநாயகியின் முகத்திலிருந்து துவங்கக்கூடாது. ஏனெனில் தொடர்ந்து இந்த சீனின் கடைசி ஷாட்டிலும் அடுத்த சீனின் முதல் ஷாட்டிலும் அடுத்த சீனின் முதல் ஷாட்டிலும் கதாநாயகியின் குளோசப் ஷாட் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் முதல் சீன் முடிந்ததும், அடுத்த சீன் ஆரம்பித்ததும் ஆடியன்சுக்கு தெரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தும். அதனால் சென்ற சீனின் கடைசி ஷாட் கதாநாயகியின் முகத்தில் முடிந்தது என்றால் அடுத்த சீனின் முதல் ஷாட்டை கதாநாயகியின் முகத்தை குளோசப்பில் எடுக்காமல் அவள் வேலை செய்யும் பொருட்களில் குளோசப்பிலிருந்து ஆரம்பிக்கலாம். உதாரணத்திற்கு சமையலறையில் அவள் வேலை செய்வது முதல் ஷாட் என்றால், கொதிக்கும் பானையை குளோசப்பாக வைத்து அதிலிருந்து சூம்பேக் வர கதாநாயகியை கமிட் பண்ணலாம்.
அடுத்து இதுபோல் ஒரே கேரக்டரின் மீது ஷாட் முடிந்து அதே கேரக்டரில் அடுத்த சீன் ஆரம்பிக்கிறது என்றால் சம்பந்தப்பட்ட அந்த கேரக்டருக்கு காஸ்ட்யூமை (டிரஸ்ஸை) மாற்றிவிடலாம். டிரஸ் மாறினாலே அது அடுத்த சீனாக... ஆடியன்சக்கு புரிந்துவிடும்.
சரி... முதலில் பார்த்த காட்சிக்கு வருவோம். முதல் ஷாட். ஹீரோயின் அடுப்படியில் வியர்வையோடு வேலை செய்துகொண்டிருக்கிறாள். இப்போது அவள் மீது காலிங்பெல் ஒலி ஒலிக்கிறது.
சட்டென்று வியர்வையை சேலை தலைப்பில் துடைத்தவாறு இடப்புறடமாக வெளியே செல்கிறாள்.
இந்த ஷாட்டில் நீங்கள் மிகவும் கவனிக்கவேண்டியது அவள் எந்த பக்கமாக ப்ரேம் அவுட் போகிறாள் என்பதைத்தான் (பிரேம்அவுட் என்பது கேமராவில் தெரியும் கோணத்திலிருந்து வெளியே செல்வது)
அதாவது ஒரு நடிகர் ஒரு ஷாட்டிலிருந்து இடது பக்கமாக வெளியே சென்றார் என்றால் அடுத்த ஷாட்டில் அவரது வருகை வலப்புற வழியாக இருந்து வரவேண்டும்.
அதேபோல் வலது பக்கமாக ஒருவர் ஃபிரேம் அவுட் ஆனால் அடுத்த ஷாட்டில் வலது பக்கமாக எண்ட்ரி ஆகவேண்டும்.
ஒரு காட்சியில் முதல் ஷாட்டில் கார் ஒன்று இடது பக்கமாக இருந்து உள்ளே வந்து வலப்புறமாக சென்றுவிட்டால்... இரண்டாவது, மூன்றாவது நான்காவது என அந்த காட்சி முடிகிற வரையில் இடப்புறமாக எண்ட்ரி ஆகி வலப்புறமாகவே ஃப்ரேம் அவுட் ஆகவேண்டும்.
சரி நாம் முதலில் பார்த்த காட்சிக்கு வருவோம். காலிங்பெல் சப்தம் கேட்டு இடப்புறமாக வெளி செல்கிறாள் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு அடுத்த ஷாட்... மாஸ்டர் ஷாட்டாக எடுக்கலாம். அதாவது மாஸ்டர் ஷாட் என்பது காட்சியின் முதன்முதலில் ஒரு பெரிய ஷாட்டாக.. லாங் ஷாட்டாக அத்தனை கேரக்டர்களையும் ஒரே கோணத்தினுள்ளே கொண்டு வரும் ஷாட்டாகும்.
மாஸ்டர் ஷாட்டில் அந்த பெண் வலப்புறமாக உள்ளே வர இடப்புறமாக அவள் அப்பாவும் அம்மாவும் உள்ளே வருகிறார்கள். அவள் முகம் மலர "வாங்கப்பா.. வாங்கம்மா" என்று அழைத்தவாறு அவர்களின் கையைப் பற்றி அழைத்துச்சென்று ஷாலினி நடுவேயிருக்கும் சோபாவில் உட்கார வைக்கிறாள். அவளும் அவர்களுக்கு பக்கவாட்டிலிருக்கும் சோபாவில் உட்காருகிறாள்.
வழக்கமாக நீங்கள் பார்க்கும் சினிமாவில் இப்படித்தான் இருவர் ஒரு சோபாவில் உட்கார இன்னொருவர் பக்கவாட்டு சோபாவில் உட்காருவார். இப்படி உட்கார வைக்கப்படுவதன் நோக்கம்... அந்த மாதிரி உட்கார்ந்தால்தான் ஓஎஸ்எஸ் _ ஓவர் ஷோல்டர் ஷாட் எடுப்பதற்கு வசதியாக இருக்கும்.
அவள் அப்பாவிடமும்... அம்மாவிடமும் ஏதோ கேட்க வாயெடுக்கிறாள் இதுவரை மாஸ்டர் ஷாட் வைக்கலாம்.
இதற்கு அடுத்த ஷாட். அவள் திறந்து பேசுவதை அவர்கள் இருவரின் வலஇடத்தோள்களின் வழியாக அவள் முகத்தையோ அல்லது அவள் அப்பாவின் இடத்தோள் வழியாக அவள் முகத்தை குளோசப்பில் கொண்டு வந்து அவள் பேசும் ஷாட்டை எடுக்கலாம்.
அதற்கடுத்து அவள் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக அவளின் வலத்தோளின் வழியே அவள் அப்பா பேசுவதை எடுத்து இப்படி வசனம் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்து குளோசப் ஷாட்களாகவோ, ஓவர் ஷோல்டர் ஷாட்களாகவோ எடுத்துவிட்டு கடைசியில் காட்சியின் முடிவு ஷாட்டாக மீண்டும் ஒரு மாஸ்டர் ஷாட் எடுக்கலாம். அதில் (லாங் ஷாட்டில்) மூவரும் இருக்கும் சோபாவிலிருந்து எழுந்துகொள்வதை காட்டி அவளின் அம்மா அவளிடம் பலகாரப் பையை திணித்துவிட்டு புறப்பட... அவள் அப்பா அவளை கனிவோடு பார்த்துவிட்டு புறப்பட அவர்கள் வாசல் கடந்து ஃபிரேம்அவுட் போகிறார்கள். அவள் காமெராவின் பக்கம் திரும்புகிறாள். மிட்லாங் ஷாட்டிலிருந்து காமெரா சூம் ஆகி அவள் முகத்திற்கு குளோஸ் போகிறது. இப்போது அவள் கண்கள் கலங்கியிருக்க. ஒரு நொடியில் சோகத்தை உணர்த்திவிட்டு ப்ரேம் அவுட் போகிறாள். இத்துடன் அந்த காட்சி முடிகிறது. இந்த காட்சி அவள் முகத்தில் முடிந்ததால் அடுத்த காட்சி அவள் முகத்திலிருந்து ஆரம்பிக்கும் விதமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
தமிழ் : ஆமா... இந்த எண்ட்ரி பிரேம் அவுட்டுன்னு சொல்றீங்களே ஒரு ஷாட்ல ஹீரோ வலது பக்கமாக பிரேம்அவுட் ஆகிட்டாரு. அடுத்த ஷாட்ல இடது பக்கமாக எண்ட்ரி தரணும் இல்லையா? ஆனால்... அவர் முதல் ஷாட்ல வலதுபக்கமாக பிரேம் அவுட் ஆனது மறந்து போயிருச்ச. அப்ப இடது பக்கமா எண்ட்ரி தராம வலது பக்கமாவே எண்ட்ரி கொடுத்தா என்னாகும்! இல்லேன்னா அதை சமாளிக்கிற மாதிரி வேறு எப்படி கவுண்ட்டர் ஷாட் (தொடர்ச்சி ஷாட்) எடுக்கறது?
நல்ல கேள்வி தமிழ்... உனக்கு இப்ப கொஞ்ச கொஞ்சமா சினிமா விஷயம் எல்லாமே புரிய ஆரம்பிச்சிடுச்சி. நீ கேட்ட மாதிரி முதல்ல ஒரு அறையிலிருந்தோ ஹாலில் இருந்து மாடிக்கு ஏறி வருகிற மாதிரியான ஷாட்ல இடது பக்கமாக வெளியே செல்கிற மாதிரி லெப்ட் அவுட் கொடுத்து ஷாட் எடுத்துட்டோம்னு வச்சிட்டோம். இல்ல வலது பக்கமாக அவுட் போகிற மாதிரி எடுத்துட்டோம்னு வச்சிட்டோம். மறுபடி அதோட தொடர்ச்சி ஷாட் எடுக்கும்போது அதற்கு முந்தைய ஷாட்ல இடது பக்கம் அவுட் போனாரா? வலது பக்கம் அவுட் போனாருன்னு குழப்பம் வந்திச்சின்னா... அதை சரி பண்றதுக்கு ஈஸியான வழி இருக்கு. அதாவது முன் ஷாட் எந்த பக்கம் அவுட் போனாலும் பரவாயில்லை. அதன் தொடர்ச்சி ஷாட்டில் நடிகரை கேமராவிற்கு முன்புறமாக நின்று Away to camera கேமராவின் அருகில் முதுகுப்புறமாக நின்று கடந்து போவதுபோல் ஒரு ஷாட் எடுத்துவிட வேண்டும். அதற்கு ஷாட்டில் வலப்புற எண்ட்ரியோ, இடப்புற எண்ட்ரியோ எது தேவையோ அதற்கு தகுந்த மாதிரி அவருக்கு வலப்புறம், இடப்புறம் என கேமராவின் நிலையை தீர்மானித்து ஷாட் எடுத்தால் ஷாட் தொடர்ச்சியில் எந்த சிக்கலும் ஜர்க்கும் இருக்காது.
அடுத்து இப்போது சீட்டிங் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் :
ஒரு காட்சியில் நான்கு நடிகர்கள் நடிக்கவேண்டும். மிக அவசரமான சூழலில் சூட்டிங்கை இப்போதே முடித்தே ஆகவேண்டும் என்கிற நிலையில் நான்கு நடிகர்களில் ஒருவர் வரவில்லை. என்ன செய்வது? என்று தலைமேல் கைவைத்து உட்கார தேவையில்லை. சீட்டிங் முறையில் மூன்று நடிகர்களை வைத்து நான்கு நடிகர்கள் இருப்பதைப் போன்று காட்சியை எடுக்கலாம்.
அது ஒரு டெக்னிக் விஷயம்தான். அதாவது சினிமாவில் இருக்கிற பாயிண்ட் ஆப் வியூ என்கிற சமாச்சாரம் இதற்கு கை கொடுக்கும் பாயிண்ட் ஆப் வியூ என்பது என்ன? என்று நீங்கள் கேட்டால் ஒரு படத்தில் ஒரு நடிகர் ஒரு பெண்ணை துரத்திக்கொண்டு ஓடுகிறார் திடீரென அவர் காட்சியில் இல்லாமல் அவரது பார்வையில் கேமரா நகர அந்தப் பெண் ஓடுவாள். இதுதான் பாயிண்ட் ஆஃப் வியூ.
இந்த முறையில் மூன்று நடிகர்களை வைத்துக்கொண்டு நான்காவதாக இல்லாத நபரின் பார்வையில் மற்றவர்களை பேசவைத்து அதற்கு பதிலை இல்லாத நபரின் குரலின் மூலமாக மட்டுமே சொல்ல வைத்தால் பார்க்கிற நபருக்கு அந்த காட்சியில் நான்கு பேர் நடிப்பதாகவே தோன்றும். அத்துடன் கண்டிப்பாக ஓவர் ஷோல்டர் ஷாட்டிற்கு ஒரு தோள் தேவை என்றால்.. அந்த வராத நடிகரின் டிரஸ்ஸை வேறொருவருக்கு கொடுத்து அவரின் பின்புற தோள்பட்டையின் வழியாக காட்சியை எடுக்கலாம்.
அதற்கு கவுண்ட்டர் ஷாட்டாக இல்லாத நபரின் முகத்தை காட்டாமல் அருகே இருக்கும் மற்றொரு நபரின் முகத்தை காட்டி அந்த முகத்தில் இல்லாத நபரின் குரலை போட்டால் அவர் இருப்பது போலவே ஆடியன்சுக்கு தெரியும்.
அடுத்து ஒரு குழந்தை காட்சியின்போதே தூங்கிவிட்டது அது எழுந்து செல்வது போல் ஷாட் எடுக்கவேண்டும். ஆனால் அந்த குழந்தை எழ மறுக்கிறது என்ன செய்வது? அந்த குழந்தை தூங்கிக்கொண்டே இருக்கலாம். ஆனால் அது எழுந்து சென்றதைப் போல் காட்சியை எடுக்கலாம்.
எப்படித் தெரியும் முதலில் மிட்ஷாட்டில் குழந்தையையும் அதை எழுப்ப வரும் நபரையும் காட்டவேண்டும். மெல்ல சூம் ஃபார்வேர்ட் ஆகி குழந்தையை தவிர்த்து அந்த நபரின் முகத்திற்கு குளோஸ் செல்ல வேண்டும்.
இப்போது அந்த நடிகர் குழந்தையை எழுப்புவது போலவும் குழந்தை எழுந்துவிட்டதைப்போலவும். அது நடந்து செல்வதைப் போலவும் குளோசப்பில் பார்வையை மாற்றி "பார்த்து பார்த்தும்மா... விழுந்துடப்போறே..." என்று சொன்னால் பார்க்கிற பார்வையாளருக்கு அந்த ஷாட் குழந்தை இல்லாமலே அது எழுந்து செல்வதைப் போன்ற ஃபீலிங் கிடைக்கும்.
இப்படியான டெக்னிக்களுக்கு நடிகரின் பார்வையே முக்கியம் பெறுகிறது. அடுத்த வாரம் ஒவ்வொரு ஷாட்டிற்கும் பார்வை எவ்வளவு முக்கியம் என்பதை பார்க்கலாம்.
அதுவரை எதிர்பார்ப்போடு... காத்திருங்கள்.</span>
Thanks: Kumudam