07-21-2003, 04:38 PM
பஸ்ஸில் ரகளை புரிந்த நால்வர் பயணிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.நேற்றுமுன்தினம் மாலை முகமாலையில் இருந்து யாழ். நோக்கி வந்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்த மான பஸ்ஸில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.கிருஸ்ணராசா கொன்ரன் (வயது 25), எம்.குலசிங்கம் (வயது 30), எஸ்.டொனால் (வயது 19), எஸ்.தினேஸ் (வயது 25) ஆகியோரே பஸ்ஸில் ரகளை புரிந்த குற்றச்சாட்டின் பேரில் பயணிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டவர்களாவர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-
நேற்றுமுன்தினம் மாலை முகமாலையில் இருந்து யாழ். நோக்கி வந்துகொண்டிருந்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸை நாவற்குழிப் பகுதியில் இடை மறித்த மேற்படி நால்வரும் அதில் ஏறியுள்ளனர்.
நிறை போதையில் ஏறிய இந்த நான்கு நபர்களும் பஸ்ஸின் மிதிபலகையில் நின்றவாறு பிரயாணம் செய்ததுடன், பஸ்ஸில் தட்டி பலத்த சத்தத்துடன் ஆடிப்பாடி கலாட்டா செய்தவாறு பயணம் செய்துள்ளனர்.இதனைப் பொறுக்கமுடியாத பயணிகளும், பஸ்சாரதி மற் றும் நடத்துநர் ஆகியோர் அவர்களை தட்டிக் கேட்டபோது அவர் கள் மல்லுக்கட்டினர்.இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் அந்த நால்வரையும் மடக்கிப் பிடித்து யாழ்.பொலீஸாரிடம் ஒப்படைத்தனர் - என்று கூறப்பட்டது.