09-20-2004, 02:52 AM
[b]<span style='color:green'>சினிமாவுக்கு பின்னால்...
-சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள்-
பாகம் - 4
பெ.கணேஷ் _
சென்ற வாரம் நான் சொன்னதுபோல் கிளைமாக்ஸ் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஹீரோ _ ஹீரோயின் வீட்டுக்கு வருகிறான்
"நமக்கு நடந்தது திருமணம்தான். இருந்தாலும் இன்றிலிருந்து உன்னை என் மனைவியாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். நாம் பிரிந்து விடலாம்" என்கிறான்
இந்த காட்சியை நீங்கள் எத்தனை ஷாட்களாக பிரித்தீர்கள்? சரி இப்போது எனது சிந்தனையின் படி நான் பிரித்திருக்கும் ஷாட்களை பாருங்கள் அதில் நீங்கள் பிரித்திருக்கும் ஷாட்டோடு ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.
சீன் : நெ : 65
இடம் : ஹீரோயின் வீடு _ Interier
காலம் : இரவு (மழைக்காலம்)
நடிகர்கள் : ஹீரோ, ஹீரோயின்.
Shot No: 1
M.S (Mid shot) ஹீரோயின் தனது படுக்கையறையிலுள்ள கண்ணாடி முன்பாக பரபரப்பான முகத்தோடு அமர்ந்திருக்கிறாள். அவளது முகம் Close up- ல் இருக்கிறது.
ஏற்கனவே ஹீரோ வரும் செய்தி அவனுக்கு தெரிந்திருப்பது போன்ற பரபரப்பு அவளிடம் தெரிகிறது.
மெல்ல அவள் முகத்திலிருந்து கேமரா பின்னோக்கி வருகிறது.. இப்போது கண்ணாடிக்கு முன்பாக அவள் உட்கார்ந்திருக்க அவளது பரபரப்பு முகம் கண்ணாடியில் தெரிகிறது. தனது கைவிரல்களிலுள்ள நகத்தை கடிக்க முற்படுகிறாள்... ஆனால் விரல்கள் லேசாக நடுங்கிறது.
Shot No: 2
CS to ஹீரோயின் முகம்
இப்போது வெளியே மழை ஆரம்பிக்கும் சப்தம் அவள் முகத்தின் மீது ஒலிக்கிறது. மேலும் வேகமாய் நகம் கடிக்கிறாள். இப்பொழுது பெரிதாக மின்னல் வெட்ட அந்த ஒளி கண்ணாடியில் தெரிகிறது...
Shot No: 3
Long Mid Shot
இப்போது காமரா அந்த அறையின் ஜன்னலுக்கு வெளிப்புறம் இருக்கிறது. ஜன்னல் கம்பிகளின் வழியே அவள் கண்ணாடி முன்பு பரபரப்பாய் நகம் கடித்துக் கொண்டிருப்பது காட்டப்படுகிறது.
சட்டென்று அவள் எழுகிறாள்;பரபரப்பாய் கதவை பார்க்கிறாள்; மெல்ல கதவருகே சென்று கதவின் பிடியில் கை வைக்கிறாள்.
Shot No:4
CS to கதவின் கைப்பிடி
கதவின் கைப்பிடியில் அவள் கை மெல்ல அழுத்தி திறக்க முயல்கிறது. ஆனால் சட்டென்று நிறுத்திவிட்டு கைப்பிடியிலிருந்து கை விலகுகிறது.
Shot No:5
Long Mid Shot
இப்போ மீண்டும் காமெரா அந்த அறையின் ஜன்லுக்கு வெளிப்புறமாக வருகிறது.
அவள் கதவின் பிடியிலிருந்து கையெடுத்துவிட்டு பரபரப்பான முகத்தோடு மீண்டும் கண்ணாடியின் முன்பாக வருகிறாள்.
கண்ணாடியில் தன் முகத்தை பார்க்கிறாள். அதில் வியர்வைத் துளிகள் தெரிகிறது. உடனே சேலை தலைப்பை எடுக்கிறாள்.
Shot No:6
CS to ஹீரோயின் முகம்
முகத்திலுள்ள வியர்வையை சேலைப் தலைப்பில் துடைக்கிறாள். இருப்பினும் முகத்தில் ஒருவித பய உணர்ச்சி தெரிகிறது.
இப்போது அவள் முகத்தின் மேலே காலில் பெல் அடிக்கும் சப்தம் கேட்க சடாரென வலப்பக்கமாக முகம் திரும்புகிறது.
Shot No: 7
Long mid Shot
மீண்டும் காமெரா ஜன்னலுக்கு வெளிப்புறமாக வருகிறது.
வலப்புறமாக முகத்தை திருப்பிய ஹீரோயின் பரபரப்பாக கதவருகே செல்கிறாள். கைப்பிடியில் கை வைக்கிறாள்.
Shot No: 8
CS to கதவின் கைப்பிடி
கதவின் கைப்பிடியிலுள்ள அவள் கை ஒரு நொடி நிதானித்து சட்டென்று அழுத்துகிறது... மெல்ல இழுக்கிறது.
Shot No:9
CS to கதவு to ஹரோ
Close up-ல் கதவின் மேல்பாகம் திறக்க... வெளியே... வெளிரிய முகமாய் ஹீரோ நின்றிருக்கிறான். அவன் பார்வையில் ஏதோ வன்மம் தெரிகிறது.
Shot No : 10
CS to ஹீரோயின்
ஹீரோயின் அவன் கண்களைப் பார்க்கிறாள். ஒரு நொடி தடுமாறுகிறாள்.
Shot No : 11
CS to ஹீரோ
அவளின் தடுமாற்றத்தை ரசித்தவனாக அவள் கண்களையே ஆழமாக ஊடுருவுகிறான்.
Shot No : 12
CS to ஹீரோயின்
அவன் கண்களை ஆழமாக பார்க்கிறாள். பிறகு அவள் உதடுகள் மெல்ல அசைகிறது. "வாங்க.."
Shot No : 13
Mid long shot
(Wide Angle lence -Trally Shot)
இப்போது அவர்களுக்கு அதாவது ஹீரோயினுக்கு பின்புறமாக கேமரா டிராலியில் இருக்கிறது.
முன்பக்கமாக திரும்பியிருந்த ஹீரோயின்... ஹீரோவைப் பார்த்து.. வாங்க... என்று சொல்லிவிட்டு காமராவின் பக்கமாக திரும்பி... கேமராவின் இடப்புறமாக கண்ணாடியிருக்கும் இடத்தை நோக்கி நகர்கிறாள். ஹீரோவும் அவளை பின்தொடர்ந்து செல்கிறான்.
இப்போது கேமரா பின்னோக்கி ட்ராலியின் நகர்கிறது... நகரும்போதே Zoom Back ஆகி அந்த அறையின் முழுப் பரிமாணமும் தெரிகிறது.
கண்ணாடிக்கு அடுத்திருக்கும் பெட்டின் அருகே இருவரும் செல்கிறார்கள். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தயக்கமாக பார்த்துக்கொள்கிறார்கள்.
Shot No : 14
OSS (Over Shoulder Shot) to ஹீரோயின்
(அதாவது ஹீரோவின் இடத்தோள் வழியாக ஹீரோயின் முகம் தெரிகிறது)
ஒரு நொடி மௌனமாக அவன் முகத்தையே ஹீரோயின் பார்க்கிறாள். அவள் கண்கள் கலங்க ஆரம்பிக்கிறது.
Shot No.15
OSS to ஹீரோ
(ஹீரோயினின் வலத்தோளின் வழியாக ஹீரோவின் முகம் தெரிகிறது)
அவள் கண்கள் கலங்குவதை கவனிக்கிறான். ஆனால் அவனிடம் எந்த சலனமும் தெரியவில்லை.
Shot No : 16
OSS to ஹீரோயின்
அவள் கண்களில் கண்ணீர் நிரம்பியிருக்க அதிலிருந்து ஒரு துளி கன்னத்தில் வழிகிறது. இருப்பினும், அவள் அவன் முகத்தையே கூர்மையாக பார்க்கிறாள்.
Shot No : 17
OSS to ஹீரோ
அவள் கண்ணீர் நிரம்பிய முகத்தை கவனிக்கிறான்... அவனுக்குள் அனுதாபம் வராமல் எரிச்சல் தெரிகிறது.
ஹீரோ : இப்ப எதுக்கு இந்த நாடகம்?
Shot No : 18
OSS to ஹீரோயின்
அவன் கேள்வியில் அவளது கண்கள் விரிகிறது. அதில் கோபம் தெரிகிறது. சட்டென்று சுதாரிக்கிறாள்... பின் மெல்ல அவன் கண்களைப் பார்த்து...
ஹீரோயின் : ப்ளீஸ்... ஒரு ரெண்டு நிமிஷம் உட்கார்ந்து பேசலாமா?
Shot No : 19
OSS to ஹீரோ
அவள் கேள்விக்கு பதிலளிக்காமல் சலனமின்றி பார்க்கிறான்.
Shot No : 20
OSS to ஹீரோயின்
அவன் சலனமற்ற முகத்தை பார்த்தபடி ஹீரோயின்.
" ஃப்ளீஸ் உட்காருங்க" என்கிறாள்.
Shot No : 21
Mld.Shot
இப்போது கேமரா அவர்களுக்கு இடப்புறமாக இருக்க கட்டில்... கட்டில் முன்பாக அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருக்க... அவள் அவனின் கையைப் பற்றி கட்டிலில் உட்கார வைக்கிறாள்.
ஹீரோயின் : "சொல்லுங்க என் மேல எந்த தப்பு இருக்குன்னு நீங்க இந்த முடிவுக்கு வந்தீங்க?"
ஹீரோ : அது உனக்குத் தெரியாதா?
ஹீரோயின் : இல்ல... தெரியாது... தெரியாததாலத்தானே உங்கக்கிட்டே கேட்கிறேன்.
ஹீரோ : நீ அருண காதலிச்சது உண்மையா இல்லையா?
Shot No : 22
CS to ஹீரோயின்
அருண் என்ற சொல்லால் சட்டென்று அவள் முகம் மாறுகிறது. ஒரு நொடி தடுமாற்றத்திற்கு பிறகு..
ஹீரோயின் : அதுதான் நம்ம ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு முன்னாடியே சொல்லிட்டேனே?
Shot No : 23
CS to ஹீரோ
ஹீரோ : "சொன்னே... நீ சொன்னதுல பாதிதான் நிஜம். மத்ததெல்லாம் பொய். முழு பூசணிக்காயை சோத்துல மறைச்ச மாதிரி எல்லாத்தையும் மறைச்சிட்டு வெளியே வெண்மையா, வெகுளியா நடிச்சு என்னை ஏமாத்திட்டே..!
Shot to 24
CS to Zoom Mid Shot (Trally Shot)
ஹீரோயின் : இல்ல... என்று ஆவேசமாக எழ.. கேமரா அவள் முகத்திலிருந்து Zoom back ஆகிறது இப்போது கட்டில் மற்றும் ஹீரோ எல்லாம் காட்சியில் தெரிகிறது.
கட்டிலிலிருந்து சற்று முன்னோக்கி வந்த ஹீரோயின் காமராவை பார்த்தபடி பேசுறாள்.
ஹீரோயின் : இல்ல... நீங்க நினைக்கிறா மாதிரி எந்த பூசணிக்காயும் நான் மறைக்கல. என் மனசுல இருந்த எல்லா விஷயத்தையும் ஒளிவு மறைவில்லாம உங்ககிட்டே சொல்லிட்டேன். நான் அந்த அருணை காதலிச்சது உண்மை. அந்த பாவத்துக்கு பரிகாரமா எவ்வளவோ சித்ரவதைகளை அனுபவிச்சிட்டேன். அவரும் நானும் காதலிச்சோமே தவிர ஒண்ணா சேர்ந்து தியேட்டர், பீச்சுன்னு எங்கேயுமே போனதில்லை...
Shot No : 25
Mid Shot
அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே அவன் எழுந்து அவளருகே வருகிறான். அவள் பேசி முடித்த நொடியில்...
ஹீரோ : ஆனா.. ஓட்டலுக்கு போயிருக்கீங்களே? ஐ .மீன்... லாட்ஜிக்கு.
Shot No : 26
OSS ஹீரோயின்
அவன் சொல்லி முடித்த நொடியில் சடாரென திரும்புகிறாள். கண்களில் கோபம் தெரிகிறது.
ஹீரோயின் : சே... இல்லாத ஒரு விஷயத்தை கற்பனையா சொல்றதுல உங்களுக்கு அவ்வளவு ஆனந்தமா? அபாண்டமான பழிச்சொல்றீங்களே... ஒரு கணவனா இதைச் சொல்ல உங்களுக்கு அசிங்கமா இல்ல...
Shot No : 27
OSS to ஹீரோ...
ஹீரோ : நான் ஏண்டி அசிங்கப்படணும். அந்த அசிங்கத்தை செஞ்சிட்டு பத்தினி மாதிரி இத்தனை நாளும் என் கூட வாழ்ந்தியே.. அதுக்கு நீதான் அசிங்கப்படணும்.
Shot No : 28
Ms to Tralley shot
இப்போது கேமரா அவர்களுக்கு வலப்புறமாக வாயில் கதவுக்கு எதிரே இருக்கிறது. அவர்கள் கட்டிலுக்கு அடுத்தப்படியாக நிற்கிறார்கள்.
ஹீரோயின் : இதப்பாருங்க... திரும்ப... திரும்ப நடக்காத ஒரு விஷயத்தைச் சொல்லி என்னை கேவலப்படுத்தாதீங்க.. ஓ...கே... இப்ப நீங்க என்ன முடிவோட வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?
ஹீரோ : அதான் ஃபோன்ல சொல்லிட்டேனே..
ஹீரோயின் : அப்படின்னா நீங்க விலகிப் போறதுதான் உங்க முடிவா?
Shot No : 29
CS to ஹீரோ
ஒரு நொடி யோசித்துவிட்டு.. ஹீரோ : ஆமா...
Shot No : 30
Mid Shot
ஹீரோயின் சட்டென்று ஹீரோ முன்பாக வந்து நிற்கிறாள்.
ஹீரோ : நீங்க என்னைவிட்டு விலகிப் போங்க. நான் மறுக்கல.. ஆனா... இல்லாத தவறை இருக்கிறதா சாதிச்சிக்கிட்டு விலகிப் போறேன்னு சொல்றீங்க பாத்தீங்களா... இதுலருந்தே தெரியுது நீங்க ஒரு கோழைன்னு...
அவள் கோழை என்றதும் சட்டென்று உக்கிரமான ஹீரோ அவள் கன்னத்தில் அறையும்விதமாக கை ஓங்குகிறான்; ஹீரோயின் அவன் கைகளை பிடித்து இழுக்கிறாள்.
Shot No : 31
OSS to ஹீரோ
கையை பிடித்து தடுத்த ஹீரோயினை மிரட்சியாய் பார்க்கிறான்
Shot No : 32
OSS to ஹீரோயின்
ஹீரோவை கோபமாப் பார்க்கிறாள்
Shot No : 33
OSS to ஹீரோ
ஒருநொடி தடுமாறி கையை எடுக்கிறான்.
Shot No : 34
mid Shot to Long mid shot (Trally Shot)
இப்போது அவர்களுக்கு வலப்புறமாக ட்ராலியில் கேமரா இருக்கிறது.
இருவரும் எதிர்எதிரே மூச்சுவாங்கும் கோப நிலையில் இருக்கிறார்கள்.
ஹீரோயின் எப்ப நீங்க என்னை விட்டு விலகிப் போறதுன்னு முடிவெடுத்தீங்களோ அப்பவே என் கணவர்ங்கிற தகுதியை இழந்துட்டீங்க... அதனாலத்தான் உங்க கையை பிடிச்சித் தடுத்தேன்..
இனி நீங்களா மனசு திருந்தி நாம வாழலாம்னு கூப்பிட்டாலும் அதுக்கு நான் சம்பதிக்க மாட்டேன்.. ஏன்னா கணவன் மனைவிக்குள்ளே நடக்கிற அந்த புனிதமான உறவுல கூட அவன் முகம் உனக்கு ஞாபகம் வருதான்னு கேட்பீங்க? அப்படி ஒரு சந்தேக வாழ்க்கையில தினம் தினம் நான் சாக விரும்பல... ப்ளீஸ் நீங்க உங்க வழியில போகலாம்.
என்று இரண்டு கைகளையும் அவன் முன்பாக கூம்பிட... கேமரா பின்னோக்கி நகர்கிறது.. ஹீரோ அவள் முகத்தை ஒரு நொடி கவனித்துவிட்டு.. சட்டென்று திரும்பி வேகமாக நடக்கிறான்... இப்போது zoom Forward ஆகி ஹீரோயின் முகம் Close up க்கு வருகிறது.. அவள் உதட்டில் மெல்ல புன்னகை எழுகிறது.
cut to next scene
இப்போது நீங்கள் பார்த்த இந்த ஷாட்கள் உங்களுக்கு ஓரளவுக்கு ஒரு சீனை எப்படி பல ஷாட்களாக பிரிப்பது? என்பதை புரிய வைத்திருக்கும் என நம்புகிறேன்.
இருப்பினும் இப்படிதான் ஒரு சீனுக்கு மிகச் சரியாக ஒரு ஷாட்களாக பிரிக்க வேண்டுமா? என்று யோசிக்காதீர்கள் அது உங்கள் கதையை காட்சியின் தன்மையை பொறுத்தது மேலே பார்த்தது கிளைமாக்ஸை நெருக்கி வரும் காட்சி என்பதால் அதற்கு அதிகப்படியான பின்இசைச்சேர்ப்புக்கு (Re-recording) இடம் வேண்டுமென 34 ஷாட்களாக பிரித்திருக்கிறேன்.
இதே காட்சியை வேறு ஒரு இயக்குனரிடம் கொடுத்தால் அவரது கற்பனைக்கு ஏற்றாற்போன்று அவர் பல ஷாட்களாக பிரிப்பார்.. அதாவது மேலே பார்த்த காட்சியை 34 ஷாட்களாகவும் அல்லது நான்கே ஷாட்களாகவும் கூட பிரிக்க முடியும்.. ஆனால் 34 ஷாட்கள் என்பது கொஞ்சம் சுவை கூட்டும்.
அடுத்து நாம் ஷாட் பிரிக்கும் போது ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சினிமா என்பது ஒரு இயங்கும் விஷயம். அதனால் ஒரு காட்சியில் ஒன்று நடிகர்கள் இயக்க வேண்டும். இல்லையேல் கேமரா இயக்க வேண்டும். அதாவது ஒரு ஷாட்டில் நடிகர் நின்றிருந்தால் கேமரா ஃபேனிங்கிலோ சூம்மிலோ நகர்ந்து கொண்டிருக்க வேண்டும். அப்படியில்லாமல் காமரா அசையாமல் நின்றால் உள்ளே நடிக்கும் நடிகர்கள் அசைந்துக் கொண்டிருக்க வேண்டும். காமராவும்_நடிகர்களும் அசையாமல் ஒரே இடத்தில் நிற்பது போல் ஷாட் இருந்தால் அது சினிமா அல்ல டிராமா. அதாவது சினிமாவில் இயக்கம் என்பதை முக்கியமான விஷயமாக கருத வேண்டும். இந்த விதி முறையில் குளோசப் ஷாட் மட்டும் தான் விதி விலக்கு. அதாவது இருவரது குளோசப் ஷாட்டிலோ இருவரது ஓவர் ஹோல்டர் ஷாட்டிலோ நாம் கேமராவையும் நடிகர்களையும் அசைவில்லாமல் நிறுத்த வேண்டியிருக்கும்; அது தவறில்லை.
ஆனால் அந்த இருவரின்...... ஓவர்ஷோல்டர் ஷாட்டைக் கூட... டிராலியை உபயோகித்து இடது, வலது பேனிங் மூலமாக மூவ்மெண்ட் கொடுத்து எடுக்க முடியும்.
அதை அடுத்தவாரம் பார்ப்போம்... அதுமட்டுமல்ல.. ஒரு காட்சியில் நடிகர்களின் எண்டரி. மற்றம் தவறாக எடுக்கப்பட்ட ஷாட்களை சமாளித்து அதற்கு கவுண்டர்ஷாட் (தொடர்ச்சி ஷாட்) எடுப்பது எப்படி என்பதையும் அடுத்த வாரம் பார்க்கலாம்..
அதுவரைக்கும்... சினிமா பாருங்க...</span>
Thanks : Kumudam