09-19-2004, 02:13 PM
kuruvikal Wrote:எங்கே எங்க சண்முகி அக்காவை காணவே இல்லை என்று நேற்றைய தினம் நினைக்க இன்று நீங்கள் வந்திருக்கின்றீர்கள்... சிறுநீரகக் கல் இப்பொழுது பெரிய விடயம் அல்ல... லேசர் கொண்டு சிகிச்சை அளிக்கின்றார்கள்... இரத்தம் இன்றி சத்திர சிகிச்சை இன்றி...சிறிய கல் என்றால் ஊசியோ அல்லது மருந்து தந்து சுகப்படுத்திவிடுவர்...அதற்காக கவலைப்படாதீர்கள்...தண்ணீரை வடிக்கட்டிக் குடியுங்கள் அல்லது மினரல் வேட்டர் பாவியுங்கள்....அதைப் பற்றி அதிகம் கவலைப்படாதீர்கள்....அதுசரி நியுமோனியா வர ஏன் கவலையீனமாக இருந்தீர்கள்... குறிப்பிட்ட காலத்துக்கு நீங்கள் மேலும் கவனாமாகவே இருக்க வேண்டும்...மருந்துகள் தந்திருந்தால் முழுவதையும் கிரமாமாக முழுதுமாக எடுத்து முடியுங்கள்... சுகம் என்று விட்டு மருந்து குடிப்பதை நிறுத்த வேண்டாம்... அது பதுங்கி இருக்கும் நோய்க்கிருமிகள் மீண்டும் வீரியம் பெற வழி செய்துவிடும்...!
சூப்பர் தகவல்கள் கொடுத்துள்ளீர்கள் குருவிகள் அண்ணா. சண்முகி அக்கா குருவிகள் அண்ணா கூறியவற்றை கடைப்பிடியுங்கள் அக்கா. சீக்கிரம் குணமடைய ஆண்டவனை பிரார்த்திப்போமாக!
----------

