07-21-2003, 06:12 AM
புகலிடத் தமிழர்களின் தனிமனித பொருளாதாரம் வளர்ந்த அளவுக்கு சமூகபொருளாதாரம் வளரவில்லை.அதனால் எம்மிடம் தமிழ்தொலைக்காட்சிக்கான தயாரிப்புகள் ஊக்கப்படுத்தாமல்..முடங்கிக் கிடக்கின்றன. தொழில்நுட்பம்இ விஞ்ஞானத்தை பயன்படுத்தி பெறக்கூடிய பயனை அடையமுடியாமல் முடங்கிப்போய் பலர் இருக்கிறார்கள். தொலைக்காட்சிகளிடம்கூட பொருளாதாரம் இல்லாத நிலைதான். புகலிடத்தில் வாழும் எம்மவர் தொலைக்காட்சி அட்டைகளை வாங்கி ஊக்கப்படுத்துவதையும் தவிர்க்கிறார்கள்.இதனால் குறைந்த சன்மானம் அல்லது சன்மானமில்லாமல் அல்லது குறைந்த செலவில் நீண்டநேர நிகழ்ச்சிகளை உருவாக்கும் நிலைக்கு தொலைக்காட்சியும் தள்ளப்படுகிறது.அதனால் உரிய தரம் எட்டப்படாமல் போகும் விபத்தும் நேரிடுகிறதென்றே கருதவெண்டியுள்ளது.
-

