Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
லண்டன் அகதிகள்
#3
அநேகம் இளையவர்கள் பயம் காரணமாகவேதான் தாயகம் செல்ல அஞ்சுகின்றனர்... அதற்கான காரணங்களை மேற்குலகம் நன்கு அறியும்..! காரணம் சிறிலங்கா சிங்களப் பயங்கரவாதம் செய்யும் சித்திரவைகளில் பெரும்பாலானவற்றைக் கற்றுக் கொடுத்தவர்கள் இவர்களே....! அதேவேளை மேற்குலகிற்கு இலங்கையின் தற்போதைய பலவீனமான பாதுகாப்பற்ற தமிழ் மக்களின் அரசியல் சூழ்நிலை தெரிந்திருந்தும் சிங்கள அரசின் அட்டூழியங்களை கருத்தில் எடுக்காது அகதிகளை திருப்பி அனுப்புவது என்று எடுக்கும் முடிவு சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு தீனி போட்டுக்கொண்டு சர்வதேச பயங்கரவாதம் என்று கூறி ஆப்கானிஸ்தான் ஈராக் சூடான் என்று தங்கள் பிராந்திய எதிரி அரசுகள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதானது சர்வதேச சமூகத்துக்கு மேற்குலகின் இரட்டை முகத்தை வெளிப்படுத்தப் போதுமானதாக இருக்கும்...!

தாயக இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்பட்டு ஒரு நிரந்தர அமைதியும் சமாதானமும் நிலவுவதற்கு முதலே இப்படி அகதிகளை திருப்பி அனுப்புவது அகதிகள் தொடர்பான மேற்குலகக் கொள்கைகள் தொடர்பில் சந்தேகங்களை எழுப்புவதுடன் இவர்களின் மனித உரிமை பாதுகாப்பென்பது ஈராக்கில் சர்வதேசத்தின் முன் அடிவாங்கிக் கிடக்கும் இவ்வேளையில் இதுவும் அரங்கேற்றப்படுதல் சர்வதேச அரங்கில் மேற்குலகின் போலி வேடங்கள் மேலும் வெளிக்காட்டப்பட தகுந்த உதாரணங்களை விட்டுச் செல்லும்....!

அதேவேளை அகதிகளாக அங்கீகரிக்கப்பட்ட பலரும் கூட உண்மையான அகதிகளா என்றால் கிடையாது...அங்கும் பணம் விளையாடி இருக்கிறது பல சந்தர்ப்பங்களில்... பொய்யான ஆதாரங்களை சமர்ப்பித்து பலரும் (அகதியான கருதப்பட்ட முடியாதவர்கள் கூட) அகதிகளாக இனங்காணப்பட்டிருப்பதும் உண்மையான அகதிகளுக்கு அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டிருப்பதும் மேற்குலக அகதிகள் நிர்ணயிப்பில் உள்ள செம்மைத் தன்மை குறித்து பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது....!

மேற்குலகு சிறிலங்காவின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ் அகதிகளை தாயகம் அனுப்பும் செயலானது தமிழர் பகுதிகளில் கொடிய அரச இராணுவ கட்டமைப்பை நிறுவி...சுமார் 65,000 தமிழ் மக்களைக் கொன்று குவித்து பல இலட்சக்கணக்கானோரை அகதிகளாக்கி பல கோடி சொத்துக்களை அழித்த...சிங்கள இனவாத அரச பயங்கரவாதிகளுக்கும்...சிங்கள இனவாத பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் பயங்கரவாதக் கொள்கைகளை ஸ்திரத்துடன் முன்னெடுத்துச் செல்ல உதவுவதுடன் மேற்குலகம் பயங்கரவாதத்தின் கூட்டாளிகள் என்பதையும் அப்பட்டமாக பறைசாற்றும்...!

:evil: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by ganesh - 09-16-2004, 10:15 PM
[No subject] - by kuruvikal - 09-17-2004, 12:32 AM
[No subject] - by ganesh - 09-17-2004, 06:59 AM
[No subject] - by kuruvikal - 09-17-2004, 01:22 PM
[No subject] - by ganesh - 09-17-2004, 01:41 PM
[No subject] - by kuruvikal - 09-17-2004, 02:10 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 03:47 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 03:48 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 03:49 PM
[No subject] - by vasisutha - 09-17-2004, 06:25 PM
[No subject] - by kuruvikal - 09-17-2004, 06:35 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 06:54 PM
[No subject] - by vasisutha - 09-17-2004, 07:10 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 07:22 PM
[No subject] - by ganesh - 09-24-2004, 02:06 PM
[No subject] - by ganesh - 09-25-2004, 10:38 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)