09-13-2004, 12:09 AM
லண்டனில் இலங்கைத் தமிழ் இளைஞனைக் குத்திக் கொன்ற மற்றொரு தமிழ் இளைஞனுக்கு ஆயுள் சிறை
லண்டனில் இலங்கைத் தமிழ் இளைஞரொருவரை நடு வீதியில் வைத்து குத்திப் படுகொலை செய்த மற்றுமொரு இலங்கைத் தமிழ் இளைஞருக்கு பிரிட்டன் நீதிமன்றம் ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
அசான் ரட்ணசேகரம் என்ற 18 வயது இளைஞரை கடந்த 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் திகதி வெம்பிளி நகர நடு வீதியில் வைத்து மயூரன் தங்கராஜா என்ற 24 வயது இளைஞர் வாளினால் தாக்கியிருந்தார். 'சாமுராய்" வாள் (இரண்டு பக்கமும் கைப்பிடிý கொண்ட வளைந்த உருவ அமைப்புடையது) எனப்படும் ஆயுதத்தால் தாக்கப்பட்டு, அசான் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதையடுத்து, இடம்பெற்ற விசாரணைகளின் பின் மயூரனைக் குற்றவாளியாகக் கண்ட நீதிமன்றம் அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. இத்தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில்;.
இன்னுமொரு இலங்கையரைத் தாம் தேடிý வருவதாகவும் இத்தகைய தாக்குதல்களை இனியும் பொறுத்துக் கொண்டிýருக்க முடிýயாது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கு மற்றும் மேற்கு லண்டன் பகுதிகளில் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்படுவது, அதிகரித்து வருகின்றமை குறித்து புலன் விசாரணை செய்வதற்காக லண்டன் பொலிஸார் விசேட குழுவொன்றை அமைத்துள்ளனர்.
தினக்குரல்

[i][b]
!
!