07-20-2003, 08:56 PM
Quote:இதைத்தான் இளைஞன் நானும் குறிப்பிட்டேன்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நீங்கள் முந்தினத நான் கவனிக்கவில்லை.தமிழகத்தைப் பொறுத்தவரையில் வேண்டுமென்றால் சன் தொலைக்காட்சி பலவானாக இருக்கலாம்.
ஆனால் அது நிலையான, புலம்பெயர் சூழலுக்கும் மக்களுக்கும் ஏற்ற பலமல்ல. சன் தொலைக்
காட்சியின் பலவீனமே திரைப்படத்தையும், சின்னத்திரை நாடகங்களையும் முழுமையாக
நம்பியிருப்பது.
ஐந்து இந்தியத் தொலைக்காட்சிகள் ஒரே அட்டையோடு(card) பார்க்கக் கூடிய வசதியோடு வருவதால்
கட்டாயமாக நம்மவர் தொலைக்காட்சி இலவசமாக ஒளிபரப்பவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்
படுவது நிச்சயம். இந்தியத் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை தனித்தனியே இலவசமாகத்
தொடர்ந்து இயங்கக் கூடிய பொருளாதார வசதியில்லை. அடுத்து அவர்கள் கட்டாயமாக ஈழத்
தமிழர்களைக் கவர்வதற்கு புதிய நிகழ்ச்சிகளை இணைத்தாக வேண்டும். தனியே திரைப்
படங்களாலும், சின்னத்திரை நாடகங்களாலும் கவரமுடியுமா என்பது சந்தேகம்.
ஈழத்தமிழர் தொலைக்காட்சிகள் கவரவேண்டியவர்கள் யாவர்? அவர்களைக் கவர்வதற்கு என்ன
செய்யவேண்டும்? செய்ய முடியுமா? என்ன செய்யவேண்டும், எப்படிச் செய்யவேண்டும் என்பவை
எல்லாம் மூன்றாம் இடத்தில். முதலில் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் - திறமையாளகளை
அரவணைத்தல். உள்ளுக்குள்ளே போட்டியும், தான்தான் பெரியவன், தான் சொல்வதை (சரியோ,
பிழையோ) மற்றவர் செய்யோணும் என்னும் எண்ணங்கள் மாறவேண்டும். பயனுள்ளதை யார்
சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும். கூட்டுமுயற்சி அவசியம். ஒழுங்கமைப்பும் ஒருங்கமைப்பும்
வேண்டும். பார்வையாளர்களில்தான் முதல் பார்வை விழ வேண்டும். அதற்கடுத்தே திட்டமிடல்.
நடைமுறைப்படுத்துவார்களா நம் ஈழத்தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தார்?
சரி...இவற்றைவிடுவோம். புதிய தொழில்நுட்பங்கள் வேண்டும். இவற்றைக் கையாள இளைய சந்ததி
கட்டாயம் வேண்டும். இவர்கள் தமது அதிக அளவு நேரத்தைக் குறைந்த சம்பளத்தோடு நிறைவேற்ற
தயாரா? ஒரு சிலரைத் தவிர? பணம் செலவளிக்காமல் ஒரு தரமான நிகழ்ச்சியை உருவாக்க
முடியுமா? அப்படி உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி மக்களைக் கவருமா? அப்படியென்றால் நம் தொலைக்காட்சி
நிறுவனத்திற்கு பொருளாதார பலம் இருக்கிறதா? விளம்பரதாரர்களிடமிருந்து கொள்ளை இலாபம்
அடைவதற்கு நம் விளம்பரதாரர்கள் ஒன்றும் பெரிய சந்தையுடையவர்கள் அல்லர். அப்படியிருக்க
எப்படி முடியும்? பொருளாதாரத்தில் பலமடைய என்ன செய்யலாம்? விளம்பரங்களைத் தவிர வேறு
என்ன வழி இருக்கிறது? பொருளாதாரத்தில் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள, துணைத் தொழில்கள்
செய்தால் என்ன?
தேவை:
பொருளாதாரம்
தொழில்நுட்பம்
துறைசார்ந்தவர்கள் - இளைஞர்கள்

