07-20-2003, 06:16 PM
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> வணக்கம் கபிலன் அவர்களே...
உங்கள் பார்வை சரியென்றாலும், இங்கே வேறு விதமாயும் இந்த விடயத்தை நாம் நோக்கலாம்.
நீங்கள் கருதுவது போன்று அவர்குளுக்குத் தொலைநுாக்குப் பார்வை இருக்குலாம். ஆனால் அது
எந்தளவு வெற்றி அளிக்கும் என்பது சந்தேகமே.
என்னால் இந்த விடயத்தை வேறு கோணத்தில் பார்க்க முடிகிறது:
1. தமிழ் மொழியின் ஆதிக்கம் மெல்ல மெல்ல பரவி வருகிறது. புதிய தொழில்நுட்பங்களில் மெல்ல
அடி எடுத்து வைத்து, உலகெலாம் வலம் வருகிறது. இந்த இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளின்
வருகை "உலகமெலாம் தமிழ் முழக்கம்" என்பதாய் அமையும்.
2. ஈழத்தமிழரின் தொலைக்காட்சி நிறுவனங்களாக இருந்துவரும் தமிழ்த் தொலைக்காட்சி
இணையமும் (ttn), தீபம் தொலைக்காட்சியும் ஒற்றுமையான ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய
நிலைக்குள் தள்ளப்படுவார்கள்.
3. ஏற்கனவே இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகள் தமிழ் திரையுலகையும், சின்னத்திரை
நாடகங்களையும் முழுமையாக (?) நம்பியிருக்கும் நிலையில், இதுவரை அவற்றை வெறும்
இனிப்பாக மட்டுமே பயன்படுத்திய ஈழத் தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனங்களும் முழுமையாக
நாடமுடியாது. காரணம் அது தன்மான இழப்பாகவும், எதற்காக இவை தொடங்கப்பட்டனவோ
அந்தக் குறிக்கோளை அடையமுடியாது போய்விடும் என்பதாலும் அவற்றைப் புறக்கணித்து,
ஈழத்துக் கலைஞர்களையும், இளைஞர்களையும் அரவணைக்கவேண்டிய கட்டாயம் உருவாகும்.
4. போட்டிபோடும் வேகமும், வித்தியாசம், புதியன ஆக்கவேண்டும் என்னும் தேவையும், அதன்
அடிப்படையிலான தேடலும் ஈழத்தமிழர்கள் மத்தியில் நிகழும். அதேநேரத்தில், திரைப்படங்களிற்கும்
சின்னத்திரை நாடகங்களிற்கும் ஈடான, அல்லது அதற்கும் மேலாக மக்களைக் கவரும் புதுயுக்திகளைக்
கையாள வேண்டிய கட்டாயம் உருவாகும். அதனால் புலம்பெயர்ந்துவாழும் சூழலையும், புதிய
தொழில்நுட்பங்களையும் சரிவரப் பயன்படுத்தவேண்டிய நிலை வரும்.
5. பொருளாதார அடிப்படையில் வீழ்ந்தாலும் பரவாயில்லை, இலவசமாகவே வழங்கவேண்டும்
என்னும் நிலை ஈழத்தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனங்களிற்கு ஏற்படும்.
இவை பாதிப்புகள் அல்ல, பயன்பாடுகளே. எது எது வீழ்ந்தாலும், ஒருபோதும் "தமிழ்த்
தொலைக்காட்சி இணையம்" வீழாது. இது எனது நம்பிக்கை. இதுதான் நிசம்.
நிகழ்காலமும் இதுதான், எதிர்காலமும் இதுதான்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> வணக்கம் கபிலன் அவர்களே...உங்கள் பார்வை சரியென்றாலும், இங்கே வேறு விதமாயும் இந்த விடயத்தை நாம் நோக்கலாம்.