Poll:
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிதை எது ?
#9
அட.. இப்பதான் இந்த தலைப்பைப் பாக்கிறன்! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
கவிதைகளை எவரும் பார்ப்பதில்லை என்று கூறாதீர்கள்! தற்போது கதைகளுக்கும் பார்க்க கவிதைகளைத்தான 'வாசிக்கும்' ஆர்வமுள்ளோர் நாடுகிறார்கள். காரணம், நேரப்பற்றாக்குறையாகவும், சில வரிகளில் அது கூறவரும் விசயத்தை அறியமுடிவதாகவும் இருக்கலாம்!
என்னைப் பொறுத்தவரையில்... யாழ் களத்திலே பரணி, நளா போன்றவர்களின் காதல் கவிதைகளை இரசித்துப் படித்தேன்... எளிமையான நடை.. கூடவே இயல்பாகவே மனதை வருடும் காதல் நயம் போன்றவையாக இருக்கலாம். அதற்காக மற்ற கவிதைகளை குறைத்து மதிப்பிடுவதாக இல்லை.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.. ஒவ்வொரு எண்ணங்கள்.. ஒவ்வொரு கருத்துக்கள்... எனினும், கவிதையில் கலந்திருக்கும் உணர்வுகள் வாசகனை அந்த உணர்வுக்குள் கொண்டு வருகிறதோ.. அப்போதுதான் அவை வெற்றிபெறுகின்றன!
அந்த வகையில் காதல் கவிதைகள் எளிதாக என்னுள் புகுந்து கொள்கின்றன! அதுவும் யாழ் கள கவிஞர்களில் காதலை காதலாகத் தருவதில் பரணியும் நளாவும் வெற்றிபெற்றுவிட்டார்கள்!
தற்போது குருவிகள் அந்த பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்!
'உனக்கே உனக்காய்!' எனும் கவிதை மிக நன்றாக வந்திருக்கிறது!
அதேமாதிரி, தடைகளை தகர்த்தெறியும் உணர்வை ஊட்டக்கூடிய கவிதைகளை ஏற்கெனவே பாரதி, பாரதிதாசன், காசி ஆனந்தன் போன்றவர்கள் எழுதிக் காட்டியமாதிரி... அந்த வழியிலும் கவிஞர்கள் யாழ் களத்தில் உருவாகவேண்டும்! வாழ்த்துக்கள்!
.
Reply


Messages In This Thread
[No subject] - by sennpagam - 08-31-2004, 08:23 AM
[No subject] - by tamilini - 08-31-2004, 02:59 PM
[No subject] - by kavithan - 08-31-2004, 05:23 PM
[No subject] - by tamilini - 08-31-2004, 06:17 PM
[No subject] - by kavithan - 08-31-2004, 06:53 PM
[No subject] - by tamilini - 08-31-2004, 08:16 PM
[No subject] - by kavithan - 09-02-2004, 03:44 AM
[No subject] - by sOliyAn - 09-02-2004, 04:09 AM
[No subject] - by kavithan - 09-02-2004, 04:52 AM
[No subject] - by kuruvikal - 09-02-2004, 09:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)