Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எப்படித்தான்...?
#1
எப்படித்தான்...?

நீண்ட நாளின் பின்னான
இந்த இரவு எங்களுக்காய்
தனிமையில் காய்கிறது.

வழமைபோல் இந்த இரவும்
அரசியல்,சமூகம்,
ஆணாதிக்கம்;...பெண்ணியம்...,
அப்படித்தானே ஆரம்பித்தோம்.
யாருக்காகவோ நாங்களே
எங்கள் மனங்களைச்
சுட்டுக் கொள்ளும் வழமை
இன்றும் என்றையும் போல....

எத்தனையோ கவனமாய்
எடுத்து வந்த வார்த்தைகள்...
எப்படித்தான்....?
'மௌனக்கண்ணீர்" வடித்து
எங்கள் மனங்களைச் சிதைக்கும்
மகத்துவம் கற்றதோ....?

27.08.04.
Reply


Messages In This Thread
எப்படித்தான்...? - by shanthy - 09-01-2004, 11:47 PM
[No subject] - by Paranee - 09-02-2004, 12:31 PM
[No subject] - by tamilini - 09-02-2004, 12:33 PM
[No subject] - by kavithan - 09-02-2004, 08:19 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)