08-30-2004, 05:37 AM
Thiyaham Wrote:கடவுள் எல்லா உயிர்களையும் காப்பதாக சொல்கிறார்கள். ஆனால் மனிதன் மட்டும் தான் கடவுளை வழிபடுகிறான். ஆனால் மனிதன் தான் பெரும் பெரும் ஆபத்தில் உள்ளான். செய்திகளில் ஒரு நாளைக்கு எத்தனை வீண் சாவுகள் வருகின்றன... கோவில்களில் நெரிபட்டு சுவர் இடிந்து விழிந்து எத்தனை பேர் இறக்கின்றனர்... தன்னை கும்பிட வந்தவனையே கடவுளால் காப்பாற்ற முடியவில்லை... இதில் எங்கே மற்றவனை..........நீங்களே சொல்லுங்கள்..?
நான் சொல்கிறேன் கடவுளை மனிதன் தான் காப்பாற்றுகிறான். கோவில்களில் களவு போகிறது.கடவுளால் தன்னை கூட பாதுகாக்க முடியவில்லை. அங்கே மனிதர்கள் காவல் கடமையில் ஈடுபடுகின்ற்னர்
******************************************************************************
கடவுளை மனிதன் மட்டும்தான் கும்பிடுறான் என்டு நீங்கள் சொல்லுறியள் ஆனால் மற்றவைகள் என்ன செய்யுதென்டு உங்களுக்குத் தெரியுதா.. இல்லையே... விஞ்ஞானத்தின்படியே விலங்குகள் தங்களுக்குள் தாங்கள் உரையாடுவதை கண்டுபிடித்துவிட்டார்கள்.எனவே இது விதண்டாவாதமாகவே படுகிறது.
மனிதன் தற்காலத்தில் செய்யும் அனியாயங்களைக் கண்டு கடவுளே வெட்கிப்போய்விட்டார் இதனால்தால் கடவுளே சத்தம்போடாமல் இருக்கிறார்.
கோயிலுக்குள்ள சனக்கூட்டத்தை விலங்குகள் மாதிரி வந்து நெரிபட்டு சாகச்சொல்லி கடவுள் சொல்லல்ல சனங்களே அவசரத்தில் சென்று நெரிபடுதுகள்.இத்ற்கு கடவுளைக் குறைகூறி என்ன பிரயோசனம்

