08-28-2004, 11:20 PM
இளைஞன் Wrote:கல்லுக்குள்ள கடவுள் இருக்குதென்று, கல்லைக் கடவுள் என்கிறார்கள்!
எனக்குள்ள கடவுள் இருக்கென்றால், நானும் கடவுள் உங்களுக்கு!?
கடவுள் இருக்கு என்பவர்களுக்குள் ஒற்றுமையான கருத்து இல்லை.
இருக்கு என்று சொல்வதில் கூட பலவிதமான முரண்பாடு! -அதன்
இயல்பைச் சொல்வதிலும் ஆயிரமாயிரம் முரண்பாடு! - ஆனால்
கடவுள் இல்லை என்பவர்களுக்குள் ஒரே ஒருமித்த கருத்துத்தான்
இருக்கு என்பதால் சண்டை!
இல்லை என்பதால் சமாதானம்! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கடவுள் இல்லையென்று சொல்லும் உங்கள் போன்றவர்களிடம் கடவுள் இல்லையென்பதற்கு ஒரே கருத்தா வைத்திருக்கிறீர்கள் ? அந்தப்புத்தகத்தையும் இந்தப்புத்தகத்தையும் போதாக்குறைக்கு பெரியாரையும்தானே உதாரணம் காட்டுறியள். 5வயதில் 'அப்பம் முப்பழம்"விழுந்து விழுந்து படிச்சியள். 15வயதிலை பெரியாரை வாசிச்சியள் , மஞ்சை வசந்தனை வாசிச்சியள் புரட்சிவாதிகளாக விவாதிக்கிறியள். விசயங்களைச் சொல்லுறியள்.
அப்ப 5வயசிலை ஏன் கடவுளைக்கும்பிட்டியளாம்....? அப்பம் முப்பளம் பாடினியளாம். ஓ..அது அம்மா , அப்பா சொன்னதைக் கேட்டெல்லோ...?
hock: கடவுளே இல்லை நாமெல்லாம் பெரியார் வம்சங்கள் எனக்கதையளந்து கொண்டு அலுமாரியுக்கை சாமிப்படத்தை மறைச்சு வைச்சும் கும்பிடுவதும் , அக்கினி வளக்கமாட்டோம் , அருந்ததி காட்டமாட்டோம் , தாலியே கட்டமாட்டோம் , தமிழ்முறைத் திருமணமே பித்தலாட்டம் என்று எல்லோரையும் ஏமாற்றி தம்குடும்பம் என்றவுடன் ஐயரை அழைத்து ஓமம் வளர்த்து , தாலிகட்டி , மேளமடிச்சு , பால்பழம் குடுத்த திருமணங்களையும் விட. , ஏமாற்றறுப்புரட்சிவாதிகளை விடவும் கடவுள் இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு கல்லையும் கும்பிடுபவன் மேலானவன் இளைஞன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

