08-28-2004, 07:59 PM
தீ விபத்தில் காயமடைந்த நடிகர் விஜயேந்திரனுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை
சென்னை, ஆக. 28: சென்னையில் தீ விபத்தில் காயமடைந்த சினிமா நடிகர் சிலோன் விஜயேந்திரனுக்கு (58) சிறந்த முறையில் சிகிச்சையளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
திருவல்லிக்கேணி மேன்சன் ஒன்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் அவர் காயமடைந்தார். ராயப்பேட்டை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
முகம், கை, கால்களில் அவருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
முன்னாள் எம்.எல்.ஏ. பேராசிரியர் தீரன் அவரை மருத்துவமனையில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
சிலோன் விஜயேந்திரனுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்க அமைச்சர்கள் பன்னீர்செல்வம், தளவாய் சுந்தரம் ஆகியோரிடம் தீரன் கோரியுள்ளார்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் கே. நடராஜனைச் சந்தித்து வெள்ளிக்கிழமை மனு ஒன்றையும் தீரன் தந்தார்.
தீ விபத்து குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்
dinamani