08-27-2004, 05:56 PM
Thiyaham Wrote:கடவுள் எல்லா உயிர்களையும் காப்பதாக சொல்கிறார்கள். ஆனால் மனிதன் மட்டும் தான் கடவுளை வழிபடுகிறான். ஆனால் மனிதன் தான் பெரும் பெரும் ஆபத்தில் உள்ளான். செய்திகளில் ஒரு நாளைக்கு எத்தனை வீண் சாவுகள் வருகின்றன... கோவில்களில் நெரிபட்டு சுவர் இடிந்து விழிந்து எத்தனை பேர் இறக்கின்றனர்... தன்னை கும்பிட வந்தவனையே கடவுளால் காப்பாற்ற முடியவில்லை... இதில் எங்கே மற்றவனை..........நீங்களே சொல்லுங்கள்..?
நான் சொல்கிறேன் கடவுளை மனிதன் தான் காப்பாற்றுகிறான். கோவில்களில் களவு போகிறது.கடவுளால் தன்னை கூட பாதுகாக்க முடியவில்லை. அங்கே மனிதர்கள் காவல் கடமையில் ஈடுபடுகின்ற்னர்
ஜ..ஜை...யோ.. கடவுள் எல்லா உயிரையும் காத்தால் பூமி தாங்காதப்பா... அந்தாள் சும்மா இருக்குது அந்தாளோடை போய் ஏன் மல்லுக்கு நிக்கிறியள் அண்ணை.....
அது சரி இல்லாத கடவுளை மனிதன் ஏன் காப்பாற்ற வேணும்...?.. அப்ப கடைசீலை கோவிலிலை கடவுள் இருக்கிறார் என்கிறீர்கள்....... கோயிலிலை இடம் காணாது நெரிபட்டுது.... மதில் உடைஞ்சுது..... அதுக்கை சனம் அம்பிட்டு செத்துது.... இது ஓகே.. உங்கடை கதையை பார்த்தால் தமிழ் பட கதானாயகன் மாதிரி கடவுள் வந்து மதிலை தாங்கி பிடிச்சு காப்பாற்ற வேணும் என்று எல்லோ சொல்லிறமாதிரிக் கிடக்கு....
[b][size=18]

