08-27-2004, 04:56 AM
Thiyaham Wrote:மனம் அமைதி பெற வீட்டில் இருந்தவாறே தியானம் யோகா என நிறைய உண்டு. கோவிலிற்கு நாம் ஏன் செல்கிறோம்...? எதிர்ப் பாலாரை பார்ப்பதற்கும், பெண்கள் மற்றவர்கள் என்ன உடுப்பு, நகை போட்டுள்ளார்கள் என பார்ப்பதற்கும், ஊர்க்கதை பேசுவதற்கும் தானே.
#######################################
நீங்கள் என்னத்துக்கு கோயிலுக்குப் போறயலென்டு எனக்குத்தெரியாது ஆனால் நான் கடவுளைக் கும்பிடத்தான் போறன். நீங்கள் ஏன் மற்றவர்களைப் பார்க்கிறியம். உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டு வர வேண்டியதுதானே. நீங்கள் எழுதியவை சரிதான் இல்லைஎன்று சொல்லவில்லை.
நீங்களெ கடவுள் இல்லையென்றும் சொல்றியள், கோயில்ல சனங்கள் இப்படித்தான் நடப்பதாகவும் சொல்றியள் அதே நேரம் எதிர்ப்பாலாரை பார்ப்பதற்குத்த்தான் என்றும் சொல்லிறியள். இப்ப நான் உங்களிடம் கேட்கிறேன் நீங்கள் எதற்காக கோயிலுக்கு போறயள்??? கடவுளைப் பார்க்க போயிருந்தால் உங்களுக்கு நீங்கள் மேற் சொன்னவைகள் தெரிந்திருக்காது.........
இதைவிட நீங்கள் சொன்ன மாதிரி வீட்டிலிருந்தே கும்பிடலாம்தானே. கடவுள் இல்லையென்டும் சொல்லுறியள், யோகா, தியானம் பற்றியும் கதைக்கிறியள். இந்தெ யோகா தியானம் எல்லாம் அந்த் கடவுளைக் கும்பிட்ட முனிவர்களால்தான் தரப்பட்டது என்பதையும் மறங்திட்டியள் போல...
கடவுள் இல்லை என்டு சொல்றவக்குத்தான் கடவுள் நம்பிக்கை கூட என்டது சரியாத்தான் இருக்குபோல :roll:hock:
--------------------------------------------------------
சமயம் என்கிற பெயரால் நாம் எவ்வளவு தூரம் ஏமாற்றப்படுகிறோம் யாராவது சிந்தித்தீர்களா? ஒரு சிறிய உதாரணம் ஊரில் இன்னும் எத்தனை பேருடைய வீடு உடைபடாமல் உள்ளது? என்னுடையது என்று சொல்பவர்கள் சற்று ஒதுங்கி நில்லுங்கள்..... நாம் வீடு கட்ட தொடங்கும் போது ஐயரை அழைத்து நிலையம் எடுத்து நாள் நட்ச்சத்திரம் பார்த்து தொடங்குகிறோம். ஏன் என்பது உங்களுக்கே தெரியும்.. அப்படி தொடங்கிய வீடுகள் ஏன் தரை மட்டமாகின்றன? அப்படி என்றால் நாம் ஐயருக்கு செலவிட்ட பணம் வீண் தானே..!!
########################################
என்ன தியாகம் நீங்கள் திரும்பவும் ஒரே இடத்துக்குத்த்தான் வாறியள். ஐயருக்கு காசு குடுத்துத்தான் நிலையம் எடுக்க வேண்டுமென்றில்லையே. உங்களுக்கு விருப்பமில்லையெண்டா அப்படி ஒன்டுமில்லாமலே செய்யலாம்தானே. நீங்களே உங்களுக்கென்று ஒன்றை உருவாக்கிவிட்டு அதைவிடமுடியாமலும் அத்துடன் அது பிழைஎன்றும் சொல்லிறியள். இது கேலிக்குரியது. :roll: :roll:


hock: