08-26-2004, 01:52 PM
Thiyaham Wrote:கடவுள் ஒருவன் இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை கூட. காரணம் நிறைய பேர் பசி பஞ்சம் என்று வாடுகிறார்கள். ஆவர்களுடைய வாட்டம் போக்க கடவுள் ஒருவன் வேண்டும். ஆனால் நடப்பது என்ன..? கடவுளை மட்டும் கும்பிட்டவன் கதி என்ன?
எமது முயற்சியால் தான் எல்லாம் கிடைக்கும் போது இல்லாத கடவுள் நமக்கு எதற்கு..............?
கடவுளை ஒழிப்போம்
தியாகம் அவர்களே ! கடவுளே இல்லையென்கிறீர்கள். ஆனால் கடவுளை அழிக்க வேண்டும் என்கிறீர்கள். எப்படி இல்லாத கடவுளை அழிக்க முடியும் ?
தியாகம் ! புலத்தில் கோவில்கள் , சாமிகள் உருவாடிகள் என உருவாகியிருக்கும் ஏமாற்றுக்காரர்களை ஊக்குவிக்கும் ஊடகங்கள் , பக்தர்களைத் திருத்துவது எப்படியென்பதை நாம் இங்கு விவாதித்தால் பலன் கிடைக்கும் என்று நினைக்கிறேன். மனிதர்கள் சாமிகள்தாமெனச் சொல்லி அவதாரமெடுக்கிறோம் என மக்களை ஏமாற்றுவதை இன்னும் நம்பி ஏமாறும் மக்களை மீட்கின்ற வழிகளை ஆராயலாமே ? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

