08-26-2004, 11:49 AM
Quote:கடவுள் நம்பிக்கை இதனால் இருந்த இடத்தில் இருந்து கொண்டே கோடிக் கணக்காக சம்பாதிப்பவர்கள். கடவுளின் பெயரால் மூட நம்பிக்கை வளர்ப்பவர்கள் ஏமாற்று வித்தைகள் செய்பவர்கள் கடவுள் எனக்கு எல்லாம் தருவார் என்று எண்ணி முயற்சி இல்லாமல் இருப்பவர்கள்.
இவர்களை அல்லது இவர்கள் சார்ந்த மனநிலையை ஒழிப்போம்
கடவுள் எனக்கு எல்லாம் தருவார் என்று எண்ணி முயற்சி செய்யாமல் இருப்பது என்பதை என்ன என்று சொல்வது...?
பிரார்த்தனைகளினாலோ... வேண்டுதல்களினாலோ.. துனபங்களைக் குறைக்க முடியாது.
பிரார்த்தனை மனதை அமைதியாக்குகின்றது.
எந்த சோகத்தையும் துன்பத்தையும் எதிர்கொள்ளக்கூடிய மனத்தைரியத்தை தருகின்றது.

