08-26-2004, 04:25 AM
Thiyaham Wrote:கடவுள் நம்பிக்கை.. ஆம் இந்த தலைப்பில் ஒரு காரசாரமான விவாதத்தை எழுதலாம் என சில வாரங்களுக்கு முன் நினைத்திருந்தேன். வெளி இடம் சென்றதால் முடியவில்லை.
ஆதிகாலத்தில் மிருகங்களை போல் சுற்றி திரிந்த மனிதர்களை சீரிய வழியில் கொண்டு வருவதற்கு ஒரு சாராரால் அறிமுகப்படுதபட்டதே சமய நம்பிக்கை. இது எப்படி என்றால், "சொல்வழி" கேளாத சிறு பிள்ளைகளை நாம் "அதிற்ர பிடிச்சு கொடுப்பன் இதிற்ர பிடிச்சு கொடுப்பன்" என்று மிரட்டுகின்றோமே அதைப்போன்றது (குழந்தைகள் விஞ்ஞானதில் இது ஒரு தவறான செயல் என்பது வேறு விடயம்).
இப்படி இல்லாத கடவுளுக்கு எமது பெறுமதியான நேரத்தையும் காசையும் செலவளிப்பது ஏன்.....?????
######################################
அதெப்படி தியாகம் கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என உங்களுக்குத் தெரியும். அப்படி இல்லை என்று சொல்வதற்கு ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறீர்களா அல்ல்து இருக்கிறார்தான் என்பதையாவது பார்க்க முயச்சி செய்து பார்த்திருக்கிறீர்களா..
நாம் நினைத்தால் நமக்கு முன் கடவுள் வந்து நிற்க வேண்டும் அல்லது அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்வது என்னைப் பொறுத்தவரை முட்டாள்தனம் என்றே சொல்லலாம். வாழ்க்கையில் நாம் ஒரு நிலைக்கு வர வேண்டுமெனில் எவ்வளவு முயற்சிகள் செய்கிறோம். உதாரணமாக படிப்பை எடுத்தால் நிங்கள் A/L க்கு செல்லவே எத்தனை பரீட்சைகள் எடுக்க வேண்டி இருக்கும் என்டு சொல்லித்தெரிய வேண்டியதில்லை..அப்படி இருக்கும்போது கடவுள் என்றால் சும்மாவா...................இது எனது தனிப்பட்ட கருத்து...

