08-24-2004, 12:46 AM
<span style='font-size:30pt;line-height:100%'><b>நதிக்கரையோரத்து நாணயங்கள்...</b></span>
"நதிக்கரையோர நகரங்களில்தான் நாகரீகம் தோன்றியது. அப்படிப்பட்ட இடங்களில்தான் நாணயங்களும் முதன் முதலாக புழக்கத்திற்கும் வந்தன. அதனால் நதிக்கரையோரமுள்ள நகரங்களுக்குச் சென்று நாணயங்களைச் சேகரித்து வருகிறேன்" என்கிறார், வேலூர் அருகேயுள்ள வள்ளிமலையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், ஆர்.சங்கரன்.
<img src='http://www.muthamilmantram.com/modules/PNphpBB2/files/page2c.jpg' border='0' alt='user posted image'>
<b>ஆர்.சங்கரன்</b>
அபூர்வ நாணயங்கள் சேகரிப்பது இவரது பொழுதுபோக்கு. கடந்த 16 வருடங்களாக இவ் வாறு இவர் சேகரித்த பழமையான நாணயங்களின் எண்ணிக்கை இரு நூற்றுக்கும் அதிகம்.
பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய நாணயங்களைக் கூட இவர் சேகரித்து வைத்திருக்கிறார். இவற்றில் பல்லவ, சோழர்கள் கால நாணயங்களும் அடங்கும்.
1803-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியினர் வெளியிட்ட விநாயகர் படம் பொறித்த நாணயம், 1818-ல் வெளியிட்ட ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் பொறித்த ராமர் பட்டாபிஷேக நாணயம், இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையும் காட்சி கொண்ட நாணயம் (1840), என்று அன்றைய காலத்தின்படி அரையணா முக மதிப்பு கொண்ட அரிய நாணயங்களும் இவரிடம் உண்டு. இந்த நாணயங்களில் அதன் மதிப்பிற்கேற்ப ஒன் கேஷ், பைவ் கேஷ் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
1907-ல் விக்டோரியா மகா ராணி உருவம் பொறித்த வெள்ளி நாணயம் வெளியிடப் பட்டது. இதன் அன்றைய மதிப்பு ஒரு ரூபாய் (16 அணாக்கள்) ஆகும். இதன் எடை 11 கிராம். முழுக்க முழுக்க வெள்ளியால் தயாரிக்கப்பட்டது. இதே ஆண் டில் எட்வர்ட் மன்னர் உருவம் பொறித்த வெள்ளி நாணயம் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதன் மதிப்பும் ஒரு ரூபாய்தான். இப்போது வெள்ளியின் மதிப்பு மட்டும் 120 ரூபாய் பெறும்.
<img src='http://www.muthamilmantram.com/modules/PNphpBB2/files/page2b.jpg' border='0' alt='user posted image'>
<b>பல்லவர், சோழ கால நாணயங்கள்
இப்படி பழமையான நாணயங்களைச் சேகரிக்கும் ஆர்வம் சங்கரனுக்கு எப்படி வந்ததாம்?...அவரையே கேட்டோம்.</b>
"முதன் முதலில் மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக பல்வேறு வகை நாணயங்கள் சேகரிக்கும் ஆர்வம் வந்தது. முதலில் ஒரு பைசா, இரண்டு பைசா, மூன்று பைசா என சேகரித்தேன். அதிலும் பழமையான வருடங்கள் கொண்ட நாணயங்களைத் தேடினேன். இப்படி வருடம் பின்னோக்கிய பழைய நாணயங்களைச் சேகரிக்க ஆரம்பித்தபோது, 50, 60 வருடங்களுக்குமுந்தைய நாணயங்களும் கிடைத்தன. உற்சாகம் அதிகமானது. அப்படியே ஆங்கிலேயர் கால நாணயங்கள், மொகலாயர் கால நாணயங்கள் என்று இன்னும் சில நூற்றாண்டுகள் பின்னோக்கிப் போக ஆரம்பித்தேன்.
சோழர் காலம், பல்லவர் காலம், கிருஷ்ண தேவராயர், நாயக்கர் மன்னர் காலம், மைசூர் மன்னர்கள், ஹைதராபாத் நிஜாம் காலம் ஆற்காட்டு நவாப் என்று அப்படியே பெரிய வரலாற்று பின்னணி கொண்ட நாணயங்கள் சேர்ந்து விட்டன. புதுச்சேரியில் நாணயங்கள் சேகரித்தபோது பிரஞ்சு நாட்டவர்கள் ஆட்சி காலத்தில் அச்சிட்ட நாணயங்களும் கிடைத்தன.
<img src='http://www.muthamilmantram.com/modules/PNphpBB2/files/page2.jpg' border='0' alt='user posted image'>
<b>
இயேசு நாதர், அனுமன்,விநாயகர், ராமர்பட்டாபிஷேக உருவம் பொறித்த நாணயங்கள்.
இந்த நாணயங்கள் எல்லாமே பொன், வெள்ளி, செம்பு ஆகியவற்றால் வார்க்கப்பட்டுள்ளன.</b>
இப்படி நாணயங்கள் சேகரிக்கப்போய் அது தொடர்பான அரிய தகவல்களும் கிடைத்தன. அதற்கு ஒரு சின்ன உதாரணம். இப்போது பல இடங்களில் புதையல் எடுத்ததாக கூறுகிறார்களே, அதன் பின்னணி என்ன தெரியுமா?
அந்தக் காலத்தில் பொன் வெள்ளி, செம்பு நாணயங்களை சரியான முறையில் மக்களுக்குப் பாதுகாக்கத் தெரியவில்லை. இதனால் மண் அல்லது உலோக கலசங்களில்தான் இவற்றைப் புதைத்து வைத்தனர். அதுவே இப்போது புதையலாகக் கிடைக்கிறது.
<img src='http://www.muthamilmantram.com/modules/PNphpBB2/files/page2a.jpg' border='0' alt='user posted image'>
<b>
கிழக்கிந்தியக் கம்பெனி கி.பி.1818 மற்றும் 1840_ல் வெளியிட்ட நாணயங்கள்.</b>
1996-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு பழமையான நாணயங்கள் சேகரிப்பதை தீவிரமாக செய்துவருகிறேன்.
நதிக்கரை நகரங்களில்தான் நாகரீகம் தோன்றியது, வளர்ச்சி யடைந்தது என வரலாறு கூறுவ தால் நதிக்கரையோரம் உள்ள ஹரித்துவார், ரிஷிகேஷ், ஆக்ரா, மதுரா போன்ற பல வடமாநில நகரங்களுக்குச் சென்று நாண யங்களைச் சேகரிக்கிறேன்.
இவ்வாறு சேகரித்த நாண யங்களையெல்லாம், தமிழ்நாட்டில் ஊர் ஊராகச் சென்று பள்ளிக் கல்லூரிகளில் மாணவர்களுக் காக கண்காட்சியும் நடத்தி வருகிறேன்."
***
நன்றி
தினத்தந்தி

[b][size=18]