Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமா கனாக்கள்
#44
<img src='http://www.yarl.com/forum/files/dammy_movie.gif' border='0' alt='user posted image'>
<b> <span style='color:red'>சினிமா கனாக்கள்
____________________________________________________________________________ அஜீவன்


[size=15]இன்று அதிகாலை 3 மணி வரை சோழியனுடன் மெசென்ஜரில் அறுத்துக் கொண்டிருந்ததில் காலையில் கொஞ்சம் கூடுதலாக தூங்க வேண்டுமென நினைத்தே படுக்கைக்கு போனேன்.

ஆனால் விடியற் காலை 9 மணிக்கு இத்தாலியில் இருந்து வந்த எனது நண்பன் சுபேனின் தொலைபேசி என்னை எழுப்பி விட்டதால் எனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை.

4 நாட்களாக உன்னை வீட்டில் பிடிக்க முடியவில்லை.
அதுதான் காலையிலே எடுத்தேன்.
படுக்கையில் பிடித்தால்தான் என்று எனக்குத் தெரியும் என்றான்.

சரியென்று குசலம் விசாரித்தான்.

உன்னோடு சேர்ந்து 1994ம் ஆண்டு ஜெனீவாவில் ஒளிப்பதிவு செய்த இசை நிகழ்ச்சி நினைவிருக்கிறதா என்றான்.

அதுக்கு என்ன என்றேன்.

சுபேன் ஆரம்ப காலத்தில் சுவிசில் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட போது இத்தாலிக்கு போனவன்.
இடையிடையே தொலைபேசியில் பேசிக் கொள்வோம்.

சுவிசில் சுபேன் வாழ்ந்த காலத்தில் நான் நிகழ்ச்சிகள் செய்யப் போகும் போது எனக்கு உதவிய பல நண்பர்களில் சுபேனும் ஒருவன்.


ஜெனீவா இசை நிகழ்ச்சி நினைவிருக்கிறதா என்று கேட்டான்.

ஈழத்து மெல்லிசை பாடகர் முத்தழகுவை அழைத்து நடத்திய நிகழ்வு அது.
அவரது பாடல் தொகுப்பு ஒலி நாடா ஜெனீவாவில் வெளியிடப்பட்ட நிகழ்வும் அதுவே.

என்னால் எப்படி மறக்க முடியும்???????????
1994ம் ஆண்டு நிகழ்வுகள் மனதில் நினைவாய் வந்து மோதின...................

யோசிக்கிறாயா? என்றான்.

இல்லை நினைவுகளை மீட்டுகிறேன் என்றேன்.

அந்த நிகழ்வை நாம் ஒளிப்பதிவு செய்த ஒளி நாடாவை இங்கே ஒரு வீட்டில் பார்த்தேன்.

எனக்கு மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

அப்படியா? என்றேன்.

ஆனால் ஒரு விடயம் அந்த ஒளிப்பதிவு நாடாவில் ஆரம்பத்திலும் இறுதியிலும் இருந்த டைட்டில் எழுத்தோட்டம் மாற்றப்பட்டு இத்தாலியில் இருக்கும் ஒரு வீடியோ கடையின் பெயரில் டைட்டல் எல்லாம் மாற்றப்பட்டிருக்கிறது என்றான்.

நான் சிரித்தேன்.

ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டான்.

இப்படியானவர்கள் எங்கும் இருக்கிறார்கள் என்றேன்.

நான் தேடினேன் ஆனால் அந்தக் வீடியோக் கடை இப்போது இல்லை என்றான்.

இப்படியானவர்கள் வெகு காலத்துக்கு நிலைக்க மாட்டார்கள் என்று யாரோ சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

அவனது பெயரும் அந்த ஒளி நாடாவில் இருந்ததால் அவன் உன்னிப்பாக கவனித்திருக்கிறான்.

ஒருவனது உழைப்பை சூறையாடும் மிக நல்லவர்கள் எம்மோடு இன்றும் இருக்கவே செய்கிறார்கள்.

ஒரு உண்மைக் கலைஞனை எவராலும் அழிக்க முடியாது.
உண்மையில் கலை என்பது ஒரு தவம் மற்றும் இறைவனால் அருளப்படும் ஒரு கொடை.
ஓன்றை அழிக்க முயலும் போதுதான் அதற்கு ஆக்க சக்தியே அதிகரிக்கிறது என்றேன்.

ஒரு நாட்டில் நான் சில திரைப்படங்களில் வேலை செய்திருக்கிறேன்.
ஆனால் இறுதியில் நான் படம் பார்க்கப் போன போது திரையில் எனது பெயருக்கு பதிலாக திரைப்படம் எடுக்கும் போது தலையே காட்டாத ஒருவரது பெயர் எனது பெயர் இருக்க வேண்டிய இடத்தை நிரப்பியிருந்தது என் நிழனைவுக்கு வந்தது.

அது போலவே பணமேயில்லாமல் இலவசமாக ஒரு தமிழ் தொலைக்காட்சிக்கு மிகவும் சிரமப்பட்டு செய்து கொடுத்த நிகழ்ச்சிகளில் திடீரென எமது (எனது மற்றும் என்னோடு வேலை செய்தவர்களது பெயர்களும்) பெயர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு
[b]XXX தயாரிப்பு</b>
என்று வந்து நிகழ்ச்சி முடிவடைந்தது.

இப்படி எத்தனை எத்தனை?

இதனால் என்ன கிடைக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை.

இவர்களும் திருடர்கள்தான்.
வேறு வார்த்தைகள் தெரியவில்லை.

அண்மையில் ரொய்ட்டருக்கு ஒரு டொக்யுமன்றி (20 நிமிடம்) செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
இரு நாட்கள் வேலை செய்தேன்.
நான் சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி 10'000 டொலர் செக் ஒன்று அதற்காக அனுப்பப்பட்டிருந்தது.

7 பேர் வேலை செய்தோம்.
எல்லோருமே பிரித்து எடுத்துக் கொண்டோம் என்று கூறி விட்டு பெருமூச்செறிந்தேன்.

இப்படியான நிலை எப்போது நமக்கு வரும் என்றான்.

இன்றும் தொடரும் அவலத்தனங்களைப் பார்க்கும் போது எனக்குள்ளும் :?: :?: :?: </span>
Reply


Messages In This Thread
[No subject] - by sOliyAn - 04-08-2004, 02:29 AM
[No subject] - by Eelavan - 04-08-2004, 03:45 AM
[No subject] - by AJeevan - 04-08-2004, 11:56 AM
[No subject] - by sOliyAn - 04-08-2004, 12:25 PM
[No subject] - by AJeevan - 04-24-2004, 07:59 PM
[No subject] - by AJeevan - 04-26-2004, 02:44 PM
[No subject] - by vasisutha - 04-27-2004, 09:59 PM
[No subject] - by AJeevan - 04-30-2004, 01:55 PM
[No subject] - by AJeevan - 04-30-2004, 02:17 PM
[No subject] - by AJeevan - 05-03-2004, 12:43 PM
[No subject] - by Mathan - 05-04-2004, 02:17 PM
[No subject] - by sOliyAn - 05-04-2004, 04:49 PM
[No subject] - by AJeevan - 05-04-2004, 11:01 PM
[No subject] - by sOliyAn - 05-05-2004, 12:53 AM
[No subject] - by Eelavan - 05-05-2004, 02:37 AM
[No subject] - by Eelavan - 05-05-2004, 02:38 AM
[No subject] - by AJeevan - 05-05-2004, 09:53 AM
[No subject] - by Mathan - 05-05-2004, 10:59 AM
[No subject] - by AJeevan - 05-05-2004, 11:36 AM
[No subject] - by AJeevan - 06-02-2004, 01:27 PM
[No subject] - by Mathivathanan - 06-02-2004, 01:44 PM
[No subject] - by Mathan - 06-02-2004, 02:38 PM
[No subject] - by Eelavan - 06-02-2004, 03:55 PM
[No subject] - by shanmuhi - 06-02-2004, 05:09 PM
[No subject] - by kuruvikal - 06-02-2004, 05:38 PM
[No subject] - by vasisutha - 06-03-2004, 12:10 AM
[No subject] - by Mathan - 06-03-2004, 04:08 AM
[No subject] - by Chandravathanaa - 06-03-2004, 07:17 AM
[No subject] - by sOliyAn - 06-03-2004, 08:03 AM
[No subject] - by AJeevan - 06-15-2004, 01:56 AM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 07:16 PM
[No subject] - by AJeevan - 07-06-2004, 03:39 AM
[No subject] - by sOliyAn - 07-06-2004, 02:36 PM
[No subject] - by AJeevan - 07-06-2004, 07:37 PM
[No subject] - by sOliyAn - 07-06-2004, 09:30 PM
[No subject] - by AJeevan - 07-07-2004, 01:15 AM
[No subject] - by AJeevan - 07-10-2004, 02:03 PM
[No subject] - by sOliyAn - 07-12-2004, 08:48 AM
[No subject] - by AJeevan - 07-12-2004, 11:24 AM
[No subject] - by பரஞ்சோதி - 08-21-2004, 05:23 PM
[No subject] - by AJeevan - 08-22-2004, 12:32 AM
[No subject] - by sOliyAn - 08-22-2004, 02:51 AM
[No subject] - by Mathivathanan - 08-22-2004, 03:12 AM
[No subject] - by sOliyAn - 08-22-2004, 06:14 AM
[No subject] - by AJeevan - 08-22-2004, 04:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)