08-19-2004, 02:20 AM
shanthy Wrote:எதிர்காலக்கனவுகளில்....!
பருவத்துக் கிறுக்கில் - எம்
பின்னால் அலைந்த சைக்கிள்களை
யார் அழைத்தோம் வாவென்று.....?
நீயுமில்லை....நானுமில்லை....
நம்மைப் பெரிதாக்கி நடந்த
சடங்கென்று இன்று சொன்னாலும்
ஒருவரும் நம்பமாட்டார்....!
பின்னலைந்த விழிப்பார்வைகட்கு
பெரும் தேவதைகள் நாங்களாய்
ஏன் தெரிந்து தொலைந்தோமோ....?
என்னும் தான் புரியவில்லை....
காதல் சொல்லி வந்தவரின்
கண்களையே மறந்து விட்டோம்.
பின் அவர் காதலியர் நாமாக
எப்படி இடம் பிடித்தோம்....?
18.08.04.
என்னக்கா உங்க காலத்தில சைக்கிளிலை திரியக் கூடியதா இருந்திச்சுப் போல... எங்க காலத்தில் சைக்கிளும் சென்ரியில மறிச்சுப் பறிச்செல்லே போட்டாங்கள்.... வீட்டுக்க இருந்தா என்னதான் பண்ண முடியும்.....வீட்டுக் கைதிகளாய் வாழ்ந்து கழித்த பருவங்களும் இருக்கு பருவ வயதில.... புலத்தில இப்ப சைக்கிளும் இல்ல காருமில்ல.... தொழிற்சாலை மிசினோட கழியுது பருவங்கள் பருவக் கனவுகள் தொலைத்து...பணக் கனவுகள் நிறைவேற.....! இப்ப சொல்லுங்கோ எது திறம் என்று......! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

