Yarl Forum
எதிர்காலக்கனவுகளில்....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: எதிர்காலக்கனவுகளில்....! (/showthread.php?tid=6778)



எதிர்காலக்கனவுகளில்... - shanthy - 08-19-2004

எதிர்காலக்கனவுகளில்....!

எனக்காய் உனக்காய்
எங்களது மண் ஒழுங்கைகள்
மரத்தடி நிழல்கள்
கோவில் வீதிகள்
எங்கள் வீட்டு வாசல்கள்
எங்கும் நானுமாய் நீயுமாய்....

14 வருடங்கள்
பறந்து போயிற்று....
அம்மா என்றென் மடியில்
ஆணுமாய்...பெண்ணுமாய்....
அழகான சித்திரங்கள்....
அதுபோல் உனக்கும்
அடுத்தடுத்து மூன்று
அழகான ஓவியங்கள்.....

அடியே என்னவளே !
அடிக்கடி உயிர் வருடும்
என்னவனின் மூச்சுக்குள்
சுவாசமாய் நிறைந்திருக்கும்
என் உயிருக்குள் கலந்திருக்கும்
உன் நினைவை மறக்கவா முடியும்....?

கடந்து போன நாளிகைகள்
நினைவுகளில் நனைந்தபடி....
இழந்து போன வசந்தங்களில்
இதயத்தைத் தொலைத்தபடி....
இருவருக்குள்ளும் ஒருகோடி
எண்ணச் சிதறல்கள்.

இருவரையும் சுமந்தோடிய
எனது லுமாலாவும் ,
உனது ஏசியாவும்....
உன் வீட்டு மரநிழலிலும்
என் வீட்டு வேலியோரத்திலும்
எத்தனை பொழுதுகள்....!
ஒழிக்க மறைக்க
எதுவும் இருந்ததில்லை.

இருவருக்குள்ளும் இருந்த
எங்கள் உயிர் வேரின்
நேசத்து வாசமாய்....
நானும் நீயும் கொண்ட
நட்பின் ஆழம் யாரறிவார்....?
ஊர் கண்ணில் நானும் நீயும்
உறுத்தல்களாய் போனபோது
உனக்கு நானும் , எனக்கு நீயுமே
ஒத்தடங்களாயிருந்தோம்....

உன் அம்மா...,
சொல்லத் தேவையில்லை
உன் மீதீருந்த நம்பிக்கையில்
எதுவுமே கதைக்கமாட்டார்.
என் வீடு எல்லாவற்றிற்கும் எதிர்மாறு
அந்தக் கணங்களிலெல்லாம் - என்
ஆன்மத் துடிப்பாயிருந்தவள் நீ.

பருவ வயதடைந்த எங்களுக்கு
பட்டுடுத்திச் சடங்குசெய்த
பெற்றவர்கள் பூரிப்பில்
பலியாகிப் போய்விடுவோம்
என்றா அறிந்திருந்தோம்....?
பழகிப்போன விழிகளுக்குள்
நாங்களென்ன பாரத்தைக் கொடுத்தோமோ.....?

பருவத்துக் கிறுக்கில் - எம்
பின்னால் அலைந்த சைக்கிள்களை
யார் அழைத்தோம் வாவென்று.....?
நீயுமில்லை....நானுமில்லை....
நம்மைப் பெரிதாக்கி நடந்த
சடங்கென்று இன்று சொன்னாலும்
ஒருவரும் நம்பமாட்டார்....!

பின்னலைந்த விழிப்பார்வைகட்கு
பெரும் தேவதைகள் நாங்களாய்
ஏன் தெரிந்து தொலைந்தோமோ....?
என்னும் தான் புரியவில்லை....
காதல் சொல்லி வந்தவரின்
கண்களையே மறந்து விட்டோம்.
பின் அவர் காதலியர் நாமாக
எப்படி இடம் பிடித்தோம்....?

எங்களுக்குள் ஒவ்வொருவர்
இருந்தார்கள் மறுக்கவில்லை - பின்
இவர்களை யார் நினைத்திருந்தோம்....?
என்னையும் உன்னையும்
பிரித்துப்போட்ட கொடுவிழிகள்
பார்வையிலே இடிவீழ....
விதியென்று சொல்லிவிட்டு
விலகிப் போனோம் - நம்
வாழ்வென்ன நீளமென்று
திரும்பிப் பார்க்க மறந்து போனோம்.

தொலைந்தது கல்வி ,
கலைந்தது நம் நிம்மதி ,
காலம் இட்ட கட்டளையை
ஏற்கக்கூட மறந்து போய்
நான் புலம் பெயர நீ ஊரோடு
அழிந்து போனோம் - எங்கள்
ஆசைக் கனவெல்லாம்
உடைந்து போக
பொசுங்கிப் போகிறது நினைவுகள்....

வருடங்களை விழுங்கிய காலம்
விரைகிறது தன் வழியில்....
நாங்கள் தவறவிட்ட காலம்
இறந்த காலமாய் எழுதப்பட்டாயிற்று....
தொலைந்த எங்கள் நாட்களின்
நினைவுகள் நெஞ்சின் அடிவேரில்....
நீயும், நானும், வாலிபம் கருகி
எங்கள் வாரிசுகளின்
எதிர்காலக் கனவுகளில்....

18.08.04.


Re: எதிர்காலக்கனவுகளில - kuruvikal - 08-19-2004

shanthy Wrote:எதிர்காலக்கனவுகளில்....!

பருவத்துக் கிறுக்கில் - எம்
பின்னால் அலைந்த சைக்கிள்களை
யார் அழைத்தோம் வாவென்று.....?
நீயுமில்லை....நானுமில்லை....
நம்மைப் பெரிதாக்கி நடந்த
சடங்கென்று இன்று சொன்னாலும்
ஒருவரும் நம்பமாட்டார்....!

பின்னலைந்த விழிப்பார்வைகட்கு
பெரும் தேவதைகள் நாங்களாய்
ஏன் தெரிந்து தொலைந்தோமோ....?
என்னும் தான் புரியவில்லை....
காதல் சொல்லி வந்தவரின்
கண்களையே மறந்து விட்டோம்.
பின் அவர் காதலியர் நாமாக
எப்படி இடம் பிடித்தோம்....?

18.08.04.

என்னக்கா உங்க காலத்தில சைக்கிளிலை திரியக் கூடியதா இருந்திச்சுப் போல... எங்க காலத்தில் சைக்கிளும் சென்ரியில மறிச்சுப் பறிச்செல்லே போட்டாங்கள்.... வீட்டுக்க இருந்தா என்னதான் பண்ண முடியும்.....வீட்டுக் கைதிகளாய் வாழ்ந்து கழித்த பருவங்களும் இருக்கு பருவ வயதில.... புலத்தில இப்ப சைக்கிளும் இல்ல காருமில்ல.... தொழிற்சாலை மிசினோட கழியுது பருவங்கள் பருவக் கனவுகள் தொலைத்து...பணக் கனவுகள் நிறைவேற.....! இப்ப சொல்லுங்கோ எது திறம் என்று......! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 08-19-2004

Quote:பருவ வயதடைந்த எங்களுக்கு
பட்டுடுத்திச் சடங்குசெய்த
பெற்றவர்கள் பூரிப்பில்
பலியாகிப் போய்விடுவோம்
என்றா அறிந்திருந்தோம்....?
பழகிப்போன விழிகளுக்குள்
நாங்களென்ன பாரத்தைக் கொடுத்தோமோ.....?
அருமையாக பழைய நினைவுகள் வெளிப்பட்டிருக்கு...!


Re: எதிர்காலக்கனவுகளில - shanthy - 08-19-2004

[quote][quote="kuruvikal
என்னக்கா உங்க காலத்தில சைக்கிளிலை திரியக் கூடியதா இருந்திச்சுப் போல... எங்க காலத்தில் சைக்கிளும் சென்ரியில மறிச்சுப் பறிச்செல்லே போட்டாங்கள்.... வீட்டுக்க இருந்தா என்னதான் பண்ண முடியும்.....வீட்டுக் கைதிகளாய் வாழ்ந்து கழித்த பருவங்களும் இருக்கு பருவ வயதில.... புலத்தில இப்ப சைக்கிளும் இல்ல காருமில்ல.... தொழிற்சாலை மிசினோட கழியுது பருவங்கள் பருவக் கனவுகள் தொலைத்து...பணக் கனவுகள் நிறைவேற.....! இப்ப சொல்லுங்கோ எது திறம் என்று......! <!--emo&:P--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote][/quote]

ÌÕÅ¢¸ðÌ !
¨ºì¸¢Ç¢Õó¾ ¸¡Äõ ±õ ¸¡ø
'ºð" ¸¡Äõ ¯í¸û ¸¡Äõ.
þ측Äõ ¯Ä¨¸
¯ØÐÅÕõ ¸¡Ä¦Áø§Ä¡.
«ì¸¡Äõ °÷ ¾¡ñÊô§À¡¸§Å
¯Àò¾¢ÃÅõ Á¢ì¸¡Äõ.
þì¸¡Ä «õÁ¡ì¸û
¾ü¸¡Äõ ¯½÷ó¾¾É¡ø
þ¨½Âõ Ũà ¯ØÐÅÃ
«ÛÁ¾¢¦Âø§Ä¡ ¾ó¾¢ÕìÌ.
þЧÀ¡¾¡¾¡ ÌÕÅ¢¸§Ç....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shanthy - 08-19-2004

tamilini Wrote:
Quote:பருவ வயதடைந்த எங்களுக்கு
பட்டுடுத்திச் சடங்குசெய்த
பெற்றவர்கள் பூரிப்பில்
பலியாகிப் போய்விடுவோம்
என்றா அறிந்திருந்தோம்....?
பழகிப்போன விழிகளுக்குள்
நாங்களென்ன பாரத்தைக் கொடுத்தோமோ.....?
அருமையாக பழைய நினைவுகள் வெளிப்பட்டிருக்கு...!

¿ýÈ¢ ¾Á¢Æ¢É¢ .


Re: எதிர்காலக்கனவுகளில - kuruvikal - 08-19-2004

என்னக்கா சட் காலம்...தொடர்ந்து எங்கும் வேசங்களும் ஏமாற்றுக்காரரும் தான் பிழைப்பு நடத்தினமே தவிர.... உண்மைக்கு மீண்டும் ஆப்புத்தான் எங்கும்....! அதால சட் இதெல்லாம் சுத்த வேஸ்ட்....ஏதோ நாலு பேரோட நாலு நல்லது பறைந்தாப் போதும்.... அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றேல்லாம் நாம் பார்ப்பதில்லை....! கதை பறையவும் பிடிக்கவில்லையா.... கட் தான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Re: எதிர்காலக்கனவுகளில - shanthy - 08-19-2004

kuruvikal Wrote:என்னக்கா சட் காலம்...தொடர்ந்து எங்கும் வேசங்களும் ஏமாற்றுக்காரரும் தான் பிழைப்பு நடத்தினமே தவிர.... உண்மைக்கு மீண்டும் ஆப்புத்தான் எங்கும்....! அதால சட் இதெல்லாம் சுத்த வேஸ்ட்....ஏதோ நாலு பேரோட நாலு நல்லது பறைந்தாப் போதும்.... அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றேல்லாம் நாம் பார்ப்பதில்லை....! கதை பறையவும் பிடிக்கவில்லையா.... கட் தான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இது Good குருவிகளே ! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 08-20-2004

ஆகா நன்றாகா இருக்கிறது கவிதை..... வாழ்த்துக்கள் அக்கா... இன்று தான் முதல் முதல் பார்க்கிறேன் உங்கள் கவிதையை.... தொடர்ந்து எழுதுங்கள்..... நான் கொஞ்சம் பிசி அதனால் கவனிக்க வில்லை உங்கள் கவிதையை..


- sWEEtmICHe - 08-20-2004

வாழ்த்துக்கள்!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Paranee - 08-21-2004

நிகழ்காலத்தின் நினைக்க இறந்தகாலம் எச்சம் விட்டிருக்கின்றது என்றென்ணி சற்று நிம்மதியடையலாம்

ம் எதையோ உறுத்தலாய் ஊதுகின்றீர்கள்

நன்றி அக்கா அருமையான கவிதை
Quote:வருடங்களை விழுங்கிய காலம்
விரைகிறது தன் வழியில்....
நாங்கள் தவறவிட்ட காலம்
இறந்த காலமாய் எழுதப்பட்டாயிற்று