08-18-2004, 09:21 PM
உண்மை! செருப்பு குறும்படத்தை நானும் பார்த்தேன்.. அதில் வரும் உரையாடல்கள் எப்பகுதியில் வழக்கமாக உள்ள தமிழ் என்பதை புரிந்துகொள்ள முடியவில்ல. உதாரணமாக, 'உங்களை பார்க்க யாரோ வந்திருக்கிறார்" என்றொரு வசனம்.. எனது ஊரில் 'உங்களை பார்க்க யாரோ வந்திருக்கினம்" என பாவிப்பார்கள்.
சில இடங்களில் வலிந்து வசனங்களை புகுத்தினமாதிரி தோன்றினாலும் மொத்தத்தில் தரமான படம். சம்பந்தப்பட்டவர்கள் ஊக்கப்படுத்தப்படவேண்டியவர்களே!
ஆனால்--- குருவிகளின் ஆதங்கத்தையும் புறக்கணிப்பதற்கில்லை. பொதுவாக, தமிழ் பிரதேசங்களிலிருந்து வரும் படைப்புகளில் சந்தோசமான சமாச்சாரங்களுக்கு மிகவும் பஞ்சம் என்பதை ஒத்துக்கொண்டுதானாக வேண்டும். ஆகக் குறைந்த பட்ச மகிழ்ச்சியான சம்பவங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் இடம்பெறாவிட்டால் அவன் வாழும் வாழ்வில் ஏதோ குறை என்றுதானே பொருள்.. ஆக, அங்கே உள்ளவர்கள் எல்லோரும் ஒரு குறையுடனேயே வாழ்கிறார்கள் என்ற பொதுவான தோற்றம் ஏற்படுவதை படைப்பாளிகள் தவிர்த்து.. அந்த மக்கள் எந்த நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்.. அது எந்த விதத்தில் அவர்களை சந்தோசமாக வைத்திருக்கிறது என்பதனையும் வெளிக்கொணர்ந்தால் நன்றாக இருக்கும்.

.