08-12-2004, 09:04 PM
புதிய திசை அனுஷிராம்
ஊரார் சொல்லும் வடக்கு
தெற்காக காட்சி தருகிறது எனக்கு.
எல்லாருக்கும் ஓர் திசை
என்பது கட்டாயமல்லவே?
என்ன செய்வது...!
எதையெல்லாம் நீங்கள்
கிழக்கு என்கிறீர்களோ
அதெல்லாம் எனக்கு
மேற்காகத் தெரிகிறது.
நான் சூர்யோதயம் தேடும்
திசையில் உங்கள் உலகம்
அஸ்தமனம் காண்கிறது.
திசைமாறு தோற்றப்பிழை
ஏற்படுவது என் தவறல்ல.
உங்கள் திசைகள் அனைத்தையும்
மறுக்கும் திமிர் எனக்கில்லை.
எனக்கென ஒரு திசை அமைவதும்
நான் விரும்பி நேர்வதில்லை.
பெரும்பாலும் அந்த கட்டாயத்திற்கு
என்னை ஆளாக்குவது நீங்கள்தான்.
உங்களது திசையில் இருக்கும்
கற்களும், முட்களும்தான்
எனது திசையை மாற்றின.
உமது பழைய திசையின் குறைகளே
எமது புதிய திசையின் காரணிகள்.
நீவிர் இதை உணர்வீராயின்
உமது திசைகளும் மாறும்.
THATSTAMIL
ஊரார் சொல்லும் வடக்கு
தெற்காக காட்சி தருகிறது எனக்கு.
எல்லாருக்கும் ஓர் திசை
என்பது கட்டாயமல்லவே?
என்ன செய்வது...!
எதையெல்லாம் நீங்கள்
கிழக்கு என்கிறீர்களோ
அதெல்லாம் எனக்கு
மேற்காகத் தெரிகிறது.
நான் சூர்யோதயம் தேடும்
திசையில் உங்கள் உலகம்
அஸ்தமனம் காண்கிறது.
திசைமாறு தோற்றப்பிழை
ஏற்படுவது என் தவறல்ல.
உங்கள் திசைகள் அனைத்தையும்
மறுக்கும் திமிர் எனக்கில்லை.
எனக்கென ஒரு திசை அமைவதும்
நான் விரும்பி நேர்வதில்லை.
பெரும்பாலும் அந்த கட்டாயத்திற்கு
என்னை ஆளாக்குவது நீங்கள்தான்.
உங்களது திசையில் இருக்கும்
கற்களும், முட்களும்தான்
எனது திசையை மாற்றின.
உமது பழைய திசையின் குறைகளே
எமது புதிய திசையின் காரணிகள்.
நீவிர் இதை உணர்வீராயின்
உமது திசைகளும் மாறும்.
THATSTAMIL
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

