08-10-2004, 09:27 PM
ஆகஸ்ட் 09, 2004
ரொறன்ரோ
செய்தி அறிக்கை
முகத்தைப் பழிவாங்க மூக்கை வெட்டும் முதல்வர் ஜெயலலிதா!
தூத்துக்குடிக்கும் மன்னாருக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தனது கடும் எதிர்ப்பைக் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்க மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் உத்தேசித்துள்ளதாகவும் இலங்கையின் உள்நாட்டுப் பாதுகாப்பு, அந்நாட்டு அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே இருந்துவரும் சிக்கல், விடுதலைப்புலிகளின் தீவிரவாதச் செயல்கள் என பல்வேறு அம்சங்களைச் சுட்டிக்காட்டி இத்திட்டத்தை ஒத்திவைக்குமாறு முன்னர் எழுதியதாகவும் அதையடுத்து அத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டது எனவும் ஆனால் தற்போது அத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஜெயலலிதா வி.புலிகள் 'இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் தமிழக கடல் எல்லையில் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்களுடன் விடுதலைப் புலிகள் தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளது என்று உளவுத் துறையின் எச்சரிக்கையை ஒதுக்கி வைத்துவிட முடியாது. ஏற்கனவே, தூத்துக்குடி கடலோரப் பகுதியில் போதை மருந்துகள் கடத்தப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது என்பதையும் மத்திய அரசு கவனிக்க வேண்டும்' என்று கேட்டிருக்கிறார்.
இந்தக் கடிதம் ஜெயலலிதாவின் அறியாமையையும் அவரது தமிழ்த் தேசியத்துக்கு எதிரான வரலாற்றுப் பகைமையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
வி.புலிகள் பயங்கர ஆயுதங்களுடனும் போதைப் பொருள்களுடனும் தமிழ்நாட்டுக்கு ஊடுருவ வாய்ப்புண்டு என்ற அவரது குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. தமிழ்நாட்டுக்குள் ஊடுருவ வேண்டிய அவசியம் வி.புலிகளுக்கு அறவே இல்லை. வி.புலிகளால் இந்திய தேசிய பாதுகாப்புக்கும் அதன் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் என்பது வடிகட்டிய பொய். அப்படிச் சொல்வது உண்மைக்கு புறம்பானது.
தமிழக கடல் எல்லையில் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் வி.புலிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்பதற்குரிய சான்றுகள் எதனையும் ஜெயலலிதா முன் வைக்கவில்லை. முழுக்க முழுக்க இது ஜெயலலிதாவின் கற்பனையாகும்.
அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல ஜெயலலிதா எப்போதும் புலிப் பயத்தில் இல்லாததை இருப்பதாக நினைத்து உளறிக் கொண்டிருக்கிறார்.
முன்பும் வி.புலிகளின் கொலைப் பட்டியலில் தனது பெயர் முதலாவதாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு ஜெயலலிதா குண்டு துளைக்காத அங்கியை அணிந்து கொண்டு வலம் வந்தார் என்பது நினைவு கூரத்தக்கது! மைய அரசின் கருப்புப் புூனை பாதுகாப்பைப் பெற அவர் கையாண்ட தந்திரம் இது.
வி.புலிகள் போதைப் பொருள் கடத்துகிறார்கள் என்பது வேண்டும் என்றே ஜெயலலிதா இட்டுக்கட்டிச் சொல்லும் பொய்யாகும். போதைப் பொருள் கடத்தப்படுவதற்கும் அதனை பயன்படுத்துவதற்கும் எதிராக வி.புலிகள் கடும் போக்கை கடைப்பிடிக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.
இலங்கையில் வி.புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மட்டுமே போதைப் பொருள் கடத்தலோ விற்பனையோ அடியோடு இல்லை என்பதை ஜெயலலிதாவிற்கும் அவரது உளவுத் துறைக்கும் சொல்லி வைக்க விரும்புகிறோம்.
வி.புலிகளையும் அவர்களது ஆதரவாளர்களைக் கண்டு மிரளும் ஜெயலலிதா தனது மன மருட்சி காரணமாக தூத்துக்குடிக்கும் மன்னாருக்கும் இடையில் நடைபெறும் உத்தேச கப்பல் போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் வணிக மேம்பாட்டுக்கும் வேலை வாய்ப்புக்கும் உலை வைக்கிறார். இது முகத்தைப் பழிவாங்க மூக்கை வெட்டியவன் (ள்) கதை போன்றது!
இந்திய மைய அரசு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முட்டாள்தனமான எதிர்ப்பை புறக்கணித்துவிட்டு ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் நன்மை பயக்கும் இந்தக் கப்பல் போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி - தமிழ்நாதம்