08-06-2004, 12:46 PM
வைகோவுக்கு வழியெங்கும் மக்கள் வரவேற்பு
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நடை பயணத்திற்கு பொதுமக்கள் பெரும் ஆதரவு தெரிவித்து அவரிடம் ஏராளமான புகார் மனுக்களை வழங்கி வருகிறார்கள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருநெல்வேலியிலிருந்து சென்னை வரை 1,025 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபயணம் தொடங்கியுள்ளார். செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் தனது நடை பயணத்தை முடிக்கிறார் வைகோ. நேற்று காலை தொடங்கிய நடைப் பயணம் இரவு கங்கைகொண்டானில் முடிவுற்றது.
இன்று காலை கங்கைகொண்டானிலிருந்து வைகோ நடக்கத் தொடங்கியுள்ளார். வழியெங்கும் வைகோவுக்கு ஏராளமான பொதுமக்கள் மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். இதுதவிர குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் கொடுத்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் வைகோ நடந்து வருகிறார்.
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>