![]() |
|
வைகோவின் முன்மாதிரி...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: வைகோவின் முன்மாதிரி...! (/showthread.php?tid=6827) |
வைகோவின் முன்மாதிரி...! - kuruvikal - 08-06-2004 [b]<span style='color:red'>மறுமலர்ச்சிப் பயணத்தை ஆரம்பித்தார் வைகோ [size=15]தமிழகம் முழவதும் வாழும் மக்களைச் சந்தித்து உரையாடி அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மறுமலர்ச்சிப் பயணத்தை மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச் செயலர் வைகோ நேற்று ஆரம்பித்தார். மாநிலம் முழவதும் சுமார் 1,025 கி.மீ. பாதயாத்திரையாகச் சென்று மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ள வைகோ, அதற்கான ஆரம்பமாக திருநெல்வேலி காந்தி சிலை முன்பாகக் கூடி, அங்கிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தார். அவருடன் ம.தி.மு.க.வைச் சேர்ந்த சீருடை அணிந்த தொண்டர்களும் இந்தப் பயணத்தில் கலந்து கொள்கிறார்கள். சென்னையில் இந்தப் பாதயாத்திரை செப்டம்பர் 15ம் திகதி அண்ணா பிறந்த தினமன்று நிறைவடையும். இந்தப் பயணத்தின்போது நதிகளை இணைப்பதன் முக்கியத்துவம், திராவிட இயக்கத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் மற்றும் கொள்கைகள், மதவாதத்தை வேரறுக்க வேண்டியதன் அவசியம் மற்றும் பொதுவாழ்வில் ஊழல் தடுப்பு போன்றவை பற்றி வைகோ மக்களுக்குப் பரப்புரை செய்யவுள்ளார். இதுதவிர, தமிழ் மொழியின் பெருமை, தமிழ் மண்ணின் மேல் மக்களுக்கு இருக்க வேண்டிய பற்றும் உறுதியும் போன்ற தமிழ் மாண்பை வளர்த்தெடுக்கும் பணியையும் இப் பயணத்தில் வைகோ முன்னெடுப்பார் என்று தெரியவருகிறது. அ.இ.அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிரான பிரச்சாரமாகவும் இந்தப் பயணத்தைப் பயன்படுத்த வைகோ திட்டமிட்டுள்ளார் என்று ம.தி.மு.க.வின் செய்திக் குறிப்பு கூறுகிறது. </span>puthinam.com - kuruvikal - 08-06-2004 வைகோவுக்கு வழியெங்கும் மக்கள் வரவேற்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நடை பயணத்திற்கு பொதுமக்கள் பெரும் ஆதரவு தெரிவித்து அவரிடம் ஏராளமான புகார் மனுக்களை வழங்கி வருகிறார்கள். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருநெல்வேலியிலிருந்து சென்னை வரை 1,025 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபயணம் தொடங்கியுள்ளார். செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் தனது நடை பயணத்தை முடிக்கிறார் வைகோ. நேற்று காலை தொடங்கிய நடைப் பயணம் இரவு கங்கைகொண்டானில் முடிவுற்றது. இன்று காலை கங்கைகொண்டானிலிருந்து வைகோ நடக்கத் தொடங்கியுள்ளார். வழியெங்கும் வைகோவுக்கு ஏராளமான பொதுமக்கள் மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். இதுதவிர குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் கொடுத்து வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் வைகோ நடந்து வருகிறார். thatstamil.com - tamilini - 08-06-2004 Quote:நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் வைகோ நடந்து வருகிறார். வைக்கோவை வரவேற்கிறதா மழை... ம் அவரது பயணம் இனிதே நிறைவடைய எமது வாழ்த்துக்கள்...! - kavithan - 08-06-2004 நடக்கட்டும்... - Kanani - 08-17-2004 <b> வைகோ நடை பயண முடிவில் ஜெ அரசின் ஆட்சி கேள்விக் குறியாகும் ! </b> முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன் பேச்சு உடுமலை, ஆக 16- வைகோ நடை பயண முடிவில் ஜெ ஆட்சி முடக்கப்படும் என உடுமலை ம.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது- ம.தி.மு.க.வின் மீது வாடைக் காற்று ஒரு காலத்தில் வீசியது. தற்போது தென்றல் காற்று வீசுகிறது. ம.தி.மு.க.வை அங்கீகாரம் செய்யத் தயங்கியவர்கள் பலர் உண்டு. இன்று தமிழகத்தில் மட்டுமல்லாமல் அகில இந்திய அரசியல் வைகோ என்ன சொல்கிறார் என அவரது கருத்து கேட்டும் அளவுக்கு வைகோவின் வளர்ச்சி பெரிய அளவில் உள்ளது. வைகோ 10 ஆண்டுகளுக்கு முன் குமரி முதல் சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டார். அன்றைய தினம் ம.தி.மு.க.வின் வளர்ச்சி பட்டி, தொட்டி எங்கும் பரந்த அளவில் சென்றடைந்தது. இந்த நடைபயணம் மூலம் 96 ஆம் ஆண்டில் மக்கள் எழுச்சி காரணமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து வைகோ தனது 2-வது மறுமலர்ச்சி பயணத்தை தொடங்கி உள்ளார். கடந்த 5-ந்தேதி நெல்லையில் தொடங்கி, கட்சி வித்தியாசம் பாராமல் அனைவரும் அவரை வழியனுப்பி வைத்தனர். வைகோவின் வழிநடை பயணத்திற்கு தி.மு.க தலைவர் கருணாநிதி அன்று காலை 6 மணிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். சென்னையில் வைகோ கலைஞரை சந்தித்த போதும் வழி நடைபயணம் விவரங்கள் குறித்து முழு அளவில் கேட்டறிந்தார். மேலும் அனைத்து மதத்தினரும் வாழ்த்து தெரிவித்தனர். மதநல்லிணக்கம், நதிநீர் இணைப்பு உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து, மக்கள் நல்வாழ்வு திட்டங்களை நிறைவேற்ற கோரி வைகோ நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். மதுரையில் நாங்கள் (ஆர்.டி.மாரியப்பன்) வைகோவை சந்தித்தபோது மக்கள் கடலில் அவருடன் நடந்தோம அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கடந்த 2002-ம் ஆண்டு எந்த குற்றமும் புரியாத வைகோவும், நமது ம.தி.மு.க முன்னோடிகள் மீதும் பொடா சட்டத்தை ஏவி விட்டு ஜெ அரசு கைது செய்து 19 மாதம் சிறையில் அடைத்தது. தி.மு.க தலைவர் கருணாநிதி தனது வயதையும் பொருட்படுத்தாமல் 2 முறை வேலூர் சிறையில் வைகோவைச் சந்தித்தார். தி.மு.க தலைவர் கருணாநிதியின் பெரும் முயற்சியால் சக்காரியா குழுவினை பா.ஜ அரசு நியமனம் செய்தது. அந்த குழுவின் பரிந்துரைகள் வைகோவின் பேச்சு எந்த வகையிலும் தீவிரவாதத்தை தூண்டவில்லை என கூறியது. வைகோ எந்த தேதியில் திருமங்கலம் கூட்டத்தில் பேசினாரோ அந்த தேதியில் ஜெ அரசு பொடா வழக்கினை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. அதே தேதியில் மைய அரசு பொடாவை திரும்ப பெறுவதாக விவாதம் செய்து உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வைகோவின் தீவிர பிரசாரத்தினால் 40 தொகுதியிலும் பெரும் வெற்றி பெற்று உள்ளது. பெரியகுளம் காங் வேட்பாளர் ஆரூண் வைகோவின் தீவிர பிரசாரம் வெற்றிக்கு முக்கிய காரணம் என வைகோவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். வைகோவை சிறையில் அடைந்து விட்டால் கட்சியினை அழித்து விடலாம் என்ற மமதையில் ஜெ அரசு அவரை சிறையில் அடைத்து, போலீஸ் வாகனத்தில் 50 ஆயிரம் கி.மீ தூரம் அலைக்கழித்தது. ஜெ.வின் ஆணவ ஆட்சிக்கு மிகப் பெரிய தோல்வி நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்தும் கூட அவரது போக்கு மாறவில்லை. எதிர்கட்சி தலைவர்களின் ஜனநாயக செயல்பாட்டை முடக்கி வருகிறார். வைகோவின் தற்போதைய நடைபயணத்தின் முடிவு ஜெ அரசின் ஆட்சி காலத்திற்கு கேள்விக்குறியாக அமையும். ஜெ அரசு கவிழுமா? அல்லது முடக்கப்படுமா? என்ற கேள்வி தமிழகத்தில் மட்டுமல்லாமல் அகில இந்திய அரசியலில் பரபரப்பாக பேசப் படுகிறது. மேலும் 2 வது கட்டமாக விவசாயிகள் மாநாடு மிக பெரிய அளவில் ம.தி.மு.க நடத்த உள்ளது. இதில் அனைத்து கட்சி விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், தலைவர்களை அழைத்து பேசி ஒரு மித்த கருத்தை கேட்க உள்ளோம். நதிநீர் இணைப்பு பற்றி, அதிலும் குறிப்பாக தென்னிந்திய தீப கற்ப நதிகளை இணைக்கும் திட்டத்தை வைகோ முதலில் அறிவித்துள்ளார். எனவே விவசாயிகள் மாநாட்டில் மிகப்பெரிய அளவில் நாம் திரள வேண்டும். வைகோ அதற்கு முன்னதாக மாநிலம் முழுவதும், மாவட்டம் தோறும் ஒன்றியங்கள், நகரங்கள் என பேராளர் கூட்டத்தில் கட்சி செயல்பாடுகள் குறித்து நேரடியாக விவாதம் மேற்கொள்ள உள்ளார். எனவே அதற்கு தயாராக வேண்டும். உறுப்பினர் சேர்க்கை விரைவு படுத்திட வேண்டும். நன்றி சூரியன் இணையம் |