08-02-2004, 08:01 PM
பாலியல் வல்லுறவுச் சாமியார்
ஊட்டி அருகே கர்ப்பிணிப் பெண்ணை மானபங்கப்படுத்திய போலிச் சாமியார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் நிர்வாண பூஜை நடத்தி பல பெண்களைக் பாலியல் வல்லுறவு செய்த போலி சாமியார் தலைமறைவாகியுள்ளார்.
சேலம் மாவட்டம் அம்மா பேட்டையைச் சேர்ந்தவர் ஜெகந்தாதன் (50). இவர் தான் ஒரு மந்திரவாதி என்று கூறிக் கொண்டு ஜாதகம், ஜோசியம் பார்த்து வந்திருக்கிறார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த வசந்தா (40) என்ற காய்கறி வியாபாரம் செய்யும் பெண்மணி ஜாதகம் பார்க்கச் சென்றுள்ளார்.
ஜெகந்நாதன் வசந்தாவிடம் ஜாதகத்தில் தோஷம், அதற்குப் பரிகாரம் செய்கிறேன் என்று அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். ஒரு நாள் இரவு பரிகாரப் பூஜை நடத்த வேண்டும் என்று கூறி, ஒரு பொடியை நீரில் கரைத்து வசந்தாவிடம் கொடுத்து குடிக்கச் செய்துள்ளார்.
அதைக் குடித்ததும் வசந்தா அரை மயக்க நிலை அடைந்தார். பின்பு நிர்வாண பூஜை நடத்த வேண்டும் என்று கூறி பாலியல் வல்லுறவு புரிந்துள்ளார். அதன்பின்பு அடிக்கடி வசந்தா வீட்டுக்கு சென்று வந்திருக்கிறார். வசந்தாவிடம் ரூ.10,000 கடனும் வாங்கியிருக்கிறார்.
இந் நிலையில் வசந்தா கர்ப்பம் ஆனார். இது தெரிந்து வீட்டிற்கு வருவதை ஜெகந்நாதன் தவிர்த்துள்ளார். வசந்தா நேரில் போய் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள சொல்லி கேட்டபோது, ஜெகந்நாதன் மறுத்திருக்கிறார். இதனையடுத்து வசந்தா ஊர்ப் பஞ்சாயத்துக்கு போய் இருக்கிறார்.
பஞ்சாயத்தார் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியும், ஜெகந்நாதன் அதை ஏற்காமல் காலம் கடத்தி வந்துள்ளார்.இதன் பின்பு வசந்தா சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இது தெரிந்து ஜெகந்நாதன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். ஜெகந்நாதன் இதேபோல் பல்வேறு பெண்களை நிர்வாண பூஜை என்ற பெயரில் வாலியல் வல்லுறவு புரிந்திருக்கலாம் என்று போலீஸ் கருதுகிறது. வெளியில் தெரிந்தால் அவமானம் என்பதால் பலர் அதை மறைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
thatstamil.com
-------------------------------
எங்கையப்பா போய்க்கொண்டிருகிறது காந்தீய தேசம்....! :twisted: :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>