Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உனக்காய் சில வரிகள்...!
#1
<img src='http://p.webshots.com/ProThumbs/95/14795_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

உனக்காய் வாழ்கிறேன்
நீ என்னை நேசிப்பதனால்...
உனக்காய் சுவாசிக்கிறேன்
நீ என்னை சுவாசிப்பதனால்...
உனக்காய் சிரிக்கிறேன்...
நீ என் சிரிப்பை ரசிப்பதனால்...
உனக்காக அழுகிறேன்..
நீ என் கண்ணீரை துடைப்பதனால்...

மனசுக்கு தெரியுது நம் காதல்..
வெளியே விட மறுக்குது நாணம்..
உணர்வுள் சொல்லுது உண்மை
உதடுகள் போடுது நாடகம்...
நினைவுகள் குத்துது முள்ளாய்....
தூரங்கள் நமக்கு வில்லனாய்...
பிரிவுகள் காதலுக்கு பாலமாய்..
மெளனங்கள் எமக்கு வேதமாய்

காலமெல்லாம் உனக்காய் வாழ்வேன் எனும்
காத்திரமான வார்த்தை வேண்டாம்....
உன் கண்கள் பேசும் மெளன பாசை அது போதும்
காலம் எல்லாம் உனக்காய் வாழ்ந்திருப்பேன்...
உன் அசைவுகள் சொல்லும்..
உன் உணர்வுகளை... அதை
உணரும் என் உள்ளம்..!

சினங்கள் இன்றி..சினுங்கள் இன்றி..
சில காலம் வாழ்ந்தாலும்..
உன்னுடன் வாழ வேண்டும்.. நான்
உனக்காய் வாழ வேண்டும்..
வரங்கள் பல பெற்று..
வாழ்வாங்கு நாம் வாழ..
வேண்டும் நமக்குள் காதல்..
அழிவே இல்லாத..
அழிக்க முடியாத...
அற்புத காதல் வேண்டும்......!
காதலனாய் நீ வேண்டும்.....!

யாவும் கற்பனையே....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
உனக்காய் சில வரிகள்...! - by tamilini - 07-31-2004, 12:31 PM
[No subject] - by kuruvikal - 07-31-2004, 02:09 PM
[No subject] - by tamilini - 07-31-2004, 02:53 PM
[No subject] - by tamilini - 07-31-2004, 06:38 PM
[No subject] - by kavithan - 07-31-2004, 07:30 PM
[No subject] - by tamilini - 07-31-2004, 07:53 PM
[No subject] - by kavithan - 07-31-2004, 08:13 PM
[No subject] - by வெண்ணிலா - 07-31-2004, 08:16 PM
[No subject] - by tamilini - 07-31-2004, 08:41 PM
[No subject] - by tamilini - 07-31-2004, 08:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)