Yarl Forum
உனக்காய் சில வரிகள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: உனக்காய் சில வரிகள்...! (/showthread.php?tid=6851)



உனக்காய் சில வரிகள்...! - tamilini - 07-31-2004

<img src='http://p.webshots.com/ProThumbs/95/14795_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

உனக்காய் வாழ்கிறேன்
நீ என்னை நேசிப்பதனால்...
உனக்காய் சுவாசிக்கிறேன்
நீ என்னை சுவாசிப்பதனால்...
உனக்காய் சிரிக்கிறேன்...
நீ என் சிரிப்பை ரசிப்பதனால்...
உனக்காக அழுகிறேன்..
நீ என் கண்ணீரை துடைப்பதனால்...

மனசுக்கு தெரியுது நம் காதல்..
வெளியே விட மறுக்குது நாணம்..
உணர்வுள் சொல்லுது உண்மை
உதடுகள் போடுது நாடகம்...
நினைவுகள் குத்துது முள்ளாய்....
தூரங்கள் நமக்கு வில்லனாய்...
பிரிவுகள் காதலுக்கு பாலமாய்..
மெளனங்கள் எமக்கு வேதமாய்

காலமெல்லாம் உனக்காய் வாழ்வேன் எனும்
காத்திரமான வார்த்தை வேண்டாம்....
உன் கண்கள் பேசும் மெளன பாசை அது போதும்
காலம் எல்லாம் உனக்காய் வாழ்ந்திருப்பேன்...
உன் அசைவுகள் சொல்லும்..
உன் உணர்வுகளை... அதை
உணரும் என் உள்ளம்..!

சினங்கள் இன்றி..சினுங்கள் இன்றி..
சில காலம் வாழ்ந்தாலும்..
உன்னுடன் வாழ வேண்டும்.. நான்
உனக்காய் வாழ வேண்டும்..
வரங்கள் பல பெற்று..
வாழ்வாங்கு நாம் வாழ..
வேண்டும் நமக்குள் காதல்..
அழிவே இல்லாத..
அழிக்க முடியாத...
அற்புத காதல் வேண்டும்......!
காதலனாய் நீ வேண்டும்.....!

யாவும் கற்பனையே....!


- kuruvikal - 07-31-2004

தனக்காய் அன்றி
தன்னவனுக்காய்
தான் வாழும்
காதல் - கவிதை
இரண்டும்
காதல் கொண்டதாய்
கற்பனை இருக்குது
வாழ்த்துக்கள்....!


- tamilini - 07-31-2004

வாழ்த்துக்கு நன்றிகள் குருவிகளே...!


Re: உனக்காய் சில வரிகள்... - வெண்ணிலா - 07-31-2004

Quote:மனசுக்கு தெரியுது நம் காதல்..
வெளியே விட மறுக்குது நாணம்..
உணர்வுள் சொல்லுது உண்மை
உதடுகள் போடுது நாடகம்...
நினைவுகள் குத்துது முள்ளாய்....
தூரங்கள் நமக்கு வில்லனாய்...
பிரிவுகள் காதலுக்கு பாலமாய்..
மெளனங்கள் எமக்கு வேதமாய்


<b>சூப்பர் அக்கா.</b> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- tamilini - 07-31-2004

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நன்றி


- kavithan - 07-31-2004

கவிதை நன்றாக இருக்கு அக்கா.... காதலிலை பின்னுறியள்...இப்ப கற்பனையாய்.... வாழ்த்துக்கள்.. அக்கா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- tamilini - 07-31-2004

Quote:...இப்ப கற்பனையாய் வாழ்த்துக்கள்.. அக்கா

என்ன கற்பனையாய் வாழ்த்துக்களோ... வாழ்த்திலையும் கற்பனை இருக்கா என்ன.. ?வாழ்த்துக்கு நன்றி தம்பி...!


- kavithan - 07-31-2004

ஜயோ
அது இது....
kavithan Wrote:காதலிலை பின்னுறியள்...இப்ப கற்பனையாய்



- வெண்ணிலா - 07-31-2004

kavithan Wrote:ஜயோ
அது இது....
kavithan Wrote:காதலிலை பின்னுறியள்...இப்ப கற்பனையாய்


<b>என்ன மாமா அது இது என்று தடுமாறுகிறீங்கள். அக்காவுக்கு இவ்வளவு பயமா? தமிழினி அக்கா பயப்படுத்தி வைத்திருக்கிறீங்களா?</b>


- tamilini - 07-31-2004

Quote:ஜயோ
அது இது....
kavithan எழுதியது:
காதலிலை பின்னுறியள்...இப்ப கற்பனையாய்

_________________
==============================================
ஓ .. அப்படியா...!


- tamilini - 07-31-2004

Quote:என்ன மாமா அது இது என்று தடுமாறுகிறீங்கள். அக்காவுக்கு இவ்வளவு பயமா? தமிழினி அக்கா பயப்படுத்தி வைத்திருக்கிறீங்களா?

சீ..சீ நான் பயப்பிடுத்தல.... ! தம்பிக்கு அப்படி பயமும் இல்லை... அது விளங்கப்படுத்துவதற்காக இது வந்தது என்று நினைக்கிறன் அப்படி தானே தம்பி....! :roll: :roll: :roll: :!: