07-16-2003, 06:47 PM
மண்ணிற்கு மகிமையிருக்கிறது பெருமையிருக்கிறது இது கண்கூடு.
அந்த மகிமையையும் பெருமையையும் தருகிறாள் பெண். தாய்நிலம், புூமிமாதா........என்று எத்தனையோ வடிவங்களில் பெண்ணைத்தான் போற்றுகின்றோம்.
இன்று நாமெல்லாம் எமது தாய்மண்ணிற்காகத்தான் போராடுகின்றோம். தகப்பன் மண்ணிற்காக அல்ல. ஒரு நாட்டின் பெருமையை பெண்களை வைத்தே பேசுவார்கள்.
கருவினிலே உதைத்தாலும் ஈன்றபின் வெளியில் இருந்து உதைத்தாலும் உதைத்த காலுக்கு நோகுமே என்று பதைக்கும் தாயின் உள்ளம்.
கருணையின் வடிவம் தாய். பெண்ணான அவள் தருகிறாள் எங்கள் மண்ணுக்குப் பெருமை. இப்படி எத்தனையோ எழுதிச் செல்லலாம். அதைத்தான் சுருக்கமாக மண் மகிமையுறக் காரணம் பெண் எனத் தந்திருந்தேன். தந்துவிட்டு இவ்வளவும் எழுத வேண்டிய தேவையும் வந்துவிட்டது.
மணிதாசன் மண் மகிமையுறக் காரணம் பெண் இல்லையென்று இரண்டாவது வரியில் நான் சொல்லியிருந்தால் நான் முதல்வரியை ஏற்றுக் கொள்ளவில்லையென்று அர்த்தம் கொள்ளலாம்.
நான் குறிப்பிட்டது பெண்ணினால் மண் பெருமை கொள்கிறது. பெண்ணானவள் இல்லையாயின் அந்த மண் பெருமையிழந்துவிடுகிறது. அதாவது மண் மண்ணாகிப் போய்விடுகிறது.